Search This Blog

Science Box questions 7th STD term -III | unit 1. ஒளியியல்‌

7ஆம்‌ வகுப்பு - மூன்றாம்‌ பருவம்‌
1. ஒளியியல்‌

1. தாவரங்களுக்கு முக்கிய ஆற்றல்‌ மூலமாகத்‌ திகழ்வது சூரிய ஒளி ஆகும்‌. எனவே, தாவரங்கள்‌ பெரும்பாலும்‌ சூரிய ஒளியைச்‌ சார்ந்துள்ளன. மனிதர்களும்‌ விலங்குகளும்‌
தாம்‌ உண்ணும்‌ உணவிலிருந்து கார்போஹைட்ரேட்‌, புரதம்‌ மற்றும்‌ கொழுப்பு ஆகிய ஊட்டச்சத்துகளைப்‌ பெற்றுக்‌ கொள்கின்றன.

2. தாவரங்கள்‌ சூரிய ஒளி, காற்றில்‌ உள்ள கார்பன்‌டைஆக்சைடு மற்றும்‌ புவியில்‌ உள்ள நீ ஆகியவற்றைப்‌ பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை என்னும்‌ நிகழ்வு மூலம்‌ உணவைத்‌ தயாரித்துக்‌ கொள்கின்றன. தாவரங்களின்‌ ஒளிச்சேர்க்கை நிகழ்விற்கு சூரிய ஒளி மிகவும்‌ அவசியம்‌ ஆகும்‌.

3. சந்திரன்‌ நன்கு ஒளியைத்‌ தரும்‌ மூலம்‌ ஆகும்‌. ஆனால்‌, சந்திரன்‌ தாமாகவே ஒளியை உமிழும்‌ மூலம்‌ அல்ல. அது சூரியனிடமிருந்து ஒளியைப்‌ பெற்று, பின்‌ அதனைப்‌
பூமிக்குப்‌ பிரதிபலிக்கிறது.

4. நாம்‌ சந்திரனைப்‌ பார்க்கும்‌ போது சந்திரனின்‌ ஒளிரும்‌ ஒரு பாதியை மட்டுமே காண்கிறோம்‌. சந்திரனினின்‌ ஒரு பாதி எப்பொழுதும்‌ சூரியனை நோக்கி அமைந்து, ஒளியைப்‌ பெறுகிறது. இவ்வாறே சந்திரனிடமிருந்து நாம்‌ ஒளியைப்‌ பெறுகிறோம்‌.

5. நாம்‌ வீட்டில்‌ பயன்படுத்தும்‌ குழல்‌ விளக்கு ஒரு வகையான வாயுவிறக்க ஒளி மூலம்‌ ஆகும்‌.இது ஒளிர்தலின்‌ மூலம்‌ நமக்குக்‌ கண்ணுரு ஒளியைத்‌ தருகிறது. குழாயின்‌ வழியே செல்லும்‌ மின்னோட்டம்‌, பாதரச ஆவியைத்‌ தூண்டி, குறைந்த அலைநீளம்‌ கொண்ட புற ஊதாக்‌ கதிர்களை உருவாக்குகிறது. இக்கதிர்கள்‌ குழாயின்‌ உட்பகுதியில்‌ பூசப்பட்ட பாஸ்பரஸின்‌ மேல்‌ விழுந்து, குழல்‌ விளக்கை ஒளிரச்‌ செய்கின்றன.

6. அல்‌-.ஹசன்‌-ஹயத்தம்‌ என்ற அறிவியல்‌ அறிஞர்‌ ஒளி, காட்சி மற்றும்‌ ஒளியியல்‌ தொடர்பான புரிதலுக்கு, முக்கிய பங்காற்றியவர்‌. சிறுதுளை வழியாக வரும்‌ ஒளி, நேர்கோட்டுப்‌ பாதையில்‌ பயணித்து, எதிரே உள்ள சுவரில்‌ ஒரு பிம்பத்தைத்‌
தோற்றுவிப்பதை அவர்‌ கண்டறிந்தார்‌. அத்தகைய சோதனைகளின்‌ அடிப்படையில்‌, கண்ணுக்குப்‌ புலனாகும்‌ காட்சி என்பது வெளிப்புற ஒளி மூலங்களில்‌ இருந்து வரும்‌
கதிர்கள்‌, கண்ணுக்குள்‌ நுழைகிறது என்பதைக்‌ கண்டறிந்தார்‌. ஒளியுடன்‌ கூடிய சோதனைகளைச்‌ செய்து, ஒளியின்‌ நேர்கோட்டுப்‌ பண்பினைக்‌ கண்டறிந்த முதல்‌ அறிஞர்‌ இவரே ஆவார்‌.

7. ஒளி இழை என்பது, முழுஅக எதிரொளிப்புத்‌ தத்துவத்தின்‌ படி செயல்படும்‌ ஒரு சாதனம்‌
ஆகும்‌. இச்சாதனம்‌ மூலம்‌ ஒளி சமிக்ஞைகளை, ஓரிடத்திலிருந்து, மற்றோர்‌ இடத்திற்குக்‌ குறைவான நேரத்தில்‌ மிகுந்த ஆற்றல்‌ இழப்பு இல்லாமல்‌ அனுப்ப இயலும்‌. இதனுள்‌, ஒளி சமிக்கைகளை அனுப்பும்‌ வகையில்‌ கண்ணாடி உள்ளகம்‌ கொண்ட ஒன்று அல்லது
அதற்கு மேற்பட்ட வளையும்‌ தன்மை கொண்ட இழைகளும்‌ உள்ளன.

8. ஒளி இழையினை வளைக்கலாம்‌: மடக்கலாம்‌. ஒளியிழையின்‌ ஒரு முனையில்‌ ஒளியானது விழும்போது, அது கண்ணாடி உள்ளகத்தில்‌ முழு அக எதிரொளிப்பு அடைந்து
மறுமுனையில்‌ குறைந்த ஆற்றல்‌ இழப்புடன்‌ வெளிவருகிறது. தரவு அல்லது தகவல்‌ ஒளியியல்‌ துடிப்புகளாக, ஒளி இழையின்‌ மூலம்‌ அனுப்பப்படுகிறது.

9. ஒளி இழைகள்‌ கேபிள்‌ தொலைத்தொடர்பு, அகன்ற அலைவரிசை தொடர்புச்சாதனங்கள்‌ போன்ற அதிவேக தொடர்பு அனுப்புகைகளில்‌ பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
தொலைதொடர்ப்புக்கு முன்னர்‌ பயன்படுத்திய தாமிரக்கம்பியிலான வடத்திற்கு மாற்றாக இப்பொழுது ஒளியிழைகள்‌ பயன்படுத்தப்படுகின்றன. தாமிரக்கம்பியிலான வடத்தைவிட ஒளியிழை வடத்தின்‌ மூலம்‌ அதிக அளவு தகவல்களை அனுப்ப முடியும்‌.

10. காமிராவின்‌ தொழில்நுட்பம்‌ முன்னேற்றம்‌ அடையாத காலத்தில்‌ ஊசித்துளை காமிரா,
சூரியனின்‌ இயக்கத்தை பதிவு செய்ய பயன்படுத்தப்பட்டது. இவ்வகையான புகைப்படம்‌ எடுக்கும்‌ முறைக்கு சோலாகிராபி என்று பெயர்‌.

11. ஊசித்துளை காமிரா நிலையான பொருட்களைப்‌ புகைப்படம்‌ எடுப்பதற்கும்‌, சூரியக்‌ கிரகணத்தைக்‌ காண்பதற்கும்‌ அதனைப்‌ பதிவு செய்வதற்கும்‌ பயன்படுத்தப்பட்டது

12. ஆம்புலன்சுகளில்‌ “ AMBULANCE” என்ற வார்த்தை பின்னோக்கி தழைகீழாக ஏன்‌ இது போன்று எழுதப்படுகிறது?

* சமதள ஆடியின்‌ இடவலமாற்றம்‌ என்ற பண்பு இங்குப்‌ பயன்படுத்தப்படுகிறது.
ஊர்தியில்‌ பின்னோக்கி எழுதப்பட்ட வார்த்தையின்‌ எழுத்துகள்‌ முன்‌ செல்லும்‌ வாகனத்தின்‌ கண்ணாடியில்‌ இடவலமாற்றத்தின்‌ காரணமாக “AMBULANCE" என நேராகத்‌ தெரியும்‌.

13. வாகனங்களின்‌ பின்புறம்‌ ஏன்‌ சிவப்பு நிற விளக்குகள்‌ பொருத்தப்பட்டுள்ளன?

*சிவப்பு நிறம்‌ காற்று மூலக்கூறுகளால்‌ குறைவான அளவில்‌ சிதறடிக்கப்படுகின்றன.

* சிவப்பு நிறமானது மற்ற நிறங்களை விட அதிக அலைநீளம்‌ கொண்டது ஆகும்‌. எனவே, சிவப்பு நிறம்‌ காற்றில்‌ அதிக தொலைவு பயணம்‌ செய்யும்‌.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url