Search This Blog

Science Box questions 7th STD term -III | unit 2. அண்டம்‌ மற்றும்‌ விண்வெளி

7ஆம்‌ வகுப்பு - மூன்றாம்‌ பருவம்‌
2. அண்டம்‌ மற்றும்‌ விண்வெளி

1. வானியல்‌ அலகு : பூமிக்கும்‌ சூரியனுக்கும்‌ இடையிலான சராசரி தூரம்‌ 'வானியல்‌ அலகு'
என்று அழைக்கப்படுகிறது. இது 'வா.ஆ' என்னும்‌ அலகால்‌ குறிக்கப்படுகிறது.
1 வா. ஆ =1.496 ×10^8 கிமீ

2. ஓளி ஆண்டு: ஒளியானது ஒரு வருடத்தில்‌ கடந்த தூரம்‌ ஒளி ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. இது 'ஒ.ஆ' எனக்‌ குறிப்பிடப்படுகிறது.
 1 ஒ. ஆ= 9.4607 ×10^12 கிமீ

3. விண்ணியல்‌ ஆரம்‌: 
   ஒரு விண்ணியல்‌ ஆரம்‌ என்பது வானியல்‌ அலகானது ஒரு ஆர வினாடியில்‌ ஏற்படுத்தும்‌ கோணத்தின்‌ தொலைவு என வரையறுக்கப்படுகிறது. இது pc 
எனக்‌ குறிக்கப்படுகிறது.
1 pc= 3.2615 ஒ.ஆ - 3.09 ×10^13 கிமீ

4. விண்மீன்‌ மண்டலங்களின்‌ பெயர்கள்‌ கீழே உள்ள அட்டவணையில்‌ ககொடுக்கப்பட்டுள்ளது.

 

இந்தியப்‌ பெயர்‌ ஆங்கிலப்பெயர்‌

மேஷம் ஏறிஸ் 

ரிஷபம்‌ டாரஸ்‌

மிதுனம்‌ ஜெமினி

கடகம்‌ கேன்சர் 

சிம்மம்‌ லியோ

கன்னி விர்கோ

துலாம்‌ லிப்ரோ

விருச்சகம்‌ ஸ்கோர்பியோ

தனுசு ஸ்ஜிட்டோரியஸ்‌

மகரம்‌ கேப்ரிகோன்‌.

கும்பம்‌ அகோரிஸ்‌

மீனம்‌ பிஸ்சஸ்‌



5. சுப்ரமணியன்‌ சந்திரசேகர்‌ (19 அக்டோபர்‌ 1910 - 31 ஆகஸ்ட்‌ 1995) இந்திய அமெரிக்க
இயற்பியலாளர்‌ ஆவார்‌. 1983 ஆம்‌ ஆண்டு இயற்பியலுக்கான நோபல்‌ பரிசு இவருக்கும்‌
வில்லியம்‌ ஏ ஃபவ்லர்‌ என்பவருக்கும்‌ பகிர்ந்து வழங்கப்பட்டது

6. 1989 இல்‌ கலீலியோ கலிலி வியாழன்‌ சார்ந்த விண்வெளி நுண்ணாய்வுக்‌ கலனுக்கு
அவரது பெயர்‌ சூட்டப்பட்டு நினைவு கூரப்பட்டார்‌. இதன்‌ 14 வருட விண்வெளிப்பயணத்தில்‌ கல்வி நுண்ணாய்வுக்கலனும்‌ அதிலிருந்து பிரிந்து செல்லக்கூடிய சிறுகலனும்‌ இணைந்து வியாழன்‌ கஸ்ப்ரா என்னும்‌ துணைக்கோள்‌, ஷுமேக்கர்‌ லெவி-9
என்னும்‌ வால்நட்சத்திரத்தினால்‌ வியாழனில்‌ உள்ள தாக்கம்‌, யூரோப்பா, காலிஸ்டோ,
இயயோ மற்றும்‌ அமல்தியா போன்றவை ஆகும்‌.

* வியாழனின்‌ ஒரு நிலவுடன்‌ கலிலியோ கலப்பதனைத்‌ தடுப்பதற்காக இதன்‌
பணியின்‌ முடிவில்‌ வியாழனிலேயே சிதைக்கப்பட்டது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url