Search This Blog

Science Box questions 7th STD term -I | unit 1,2

7ஆம்‌ வகுப்பு - முதல்‌ பருவம்‌
1. அளவீட்டியல்‌

1. ஒரு சதுர மீட்டர்‌ என்பது ஒரு மீட்டர்‌ பக்க அளவு கொண்ட சதுரம்‌ ஒன்றினுள்‌
அடைப்படும்‌ பரப்பாகும்‌.

2. திரவங்களின்‌ பருமனை அளக்க வேறு சில அலகுகளும்‌ பயன்படுத்தப்படுகின்றன
அவற்றுள்‌ சில கேலன்‌ (gallon) அவுன்ஸ்‌ (ounce) மற்றும்‌ குவார்ட்‌ (quart).

1 கேலன்‌ = 3785ml
1 அவுன்ஸ்‌ = 30 ml
1 குவார்ட்‌ = 11

3. சமையல்‌ எண்ணெய்‌ மற்றும்‌ விளக்கெண்ணெய்‌ போன்றவை பார்ப்பதற்கு நீரைவிட அடாத்தி மிகுந்தவைகளாகத்‌ தோற்றமளித்தாலும்‌, அவற்றை விட நீர்‌ அதிக அடர்த்தி கொண்டது.

4. விளக்கெண்ணெயின்‌ அடர்த்தி 961 கிகி/மி^3 விளக்கெண்ணைய்யில்‌ ஒரு துளி நீரை இடும்பொழுது, நீத்துளி மூழ்கும்‌. ஆனால்‌, நீரில்‌ ஒரு துளி விளக்கெண்ணைய்யை இடும்பொழுது, அது மிதந்து நீரின்‌ மீது ஒரு படலத்தை உருவாகும்‌. எனினும்‌, சில எண்ணெய்‌ வகைகள்‌ நீரை விட அதிக அடர்த்தி கொண்டவை.


7ஆம்‌ வகுப்பு - முதல்‌ பருவம்‌
 2. விசையும்‌ இயக்கமும்‌

1. நாட்டிகல்‌ மைல்‌ - வான்‌ மற்றும்‌ கடல்‌ வழி போக்குவரத்துகளில்‌ தொலைவினை அளக்கப்‌
பயன்படுத்தப்படும்‌ அலகு நாட்டிக்கல்‌ மைல்‌ ஆகும்‌. ஒரு நாட்டிக்கல்‌ மைல்‌ என்பது 1.853கி.மீ ஆகும்‌.

2. கப்பல்‌ மற்றும்‌ விமானங்களின்‌ வேகங்களை அளக்கப்‌ பயன்படும்‌ அலகு நாட்‌ எனப்படும்‌.
ஒரு நாட்‌ என்பது ஒரு மணி நேரத்தில்‌ ஒரு நாட்டிக்கல்‌ மைல்‌ தொலைவு கடக்கத்‌ தேவைப்படும்‌ வேகம்‌ ஆகும்‌.

3. 1 கி.மீ/மணி - 5/18 மீ/வி இதனை எவ்வாறு நாம்‌ பெறுகிறோம்‌ என்பதனைக்‌ காண்போம்‌.

* 1கிமீ =1000 மீ
* ஒரு மணி = 3600 வி
* 1 கிமீ / மணி = 1000 மீ/ 3600 வி = 5/18 மீ/வி

4. சிறுத்தையான நான்‌ மிகவேகமாக ஓடும்‌ விலங்கு ஆவேன்‌. எனது வேகம்‌ 25 மீ/வி முதல்‌ 30 மீ/வி வரை ஆகும்‌. என்னால்‌ இரண்டு விநாடியில்‌ எனது வேகத்தினை 0 விலிருந்து
20 மீ/வி ஆக மாற்றிக்‌ கொள்ளமுடியும்‌.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url