Science Box questions 6th STD term -III | unit 5 , 6
6 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்
5. அன்றாட வாழ்வில் தாவரங்கள்
1. உலக உணவு தினம் அக்டோபர் 16 - அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பையும்
சத்துணவின் தேவையையும் வலியுறுத்தி இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
2. ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண் நிறுவன அமைப்பு ஒவ்வோர்
ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு உலக உணவுத் தினத்தினைக்
கொண்டாடுகிறது.
3. உலகளவில் கனிகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தை
வகிக்கிறது.
4. இந்தியாவில் மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஒடிசா, பீகார், உத்திரப்பிரதேசம், திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய ஏழு மாநிலங்களில் சணல் பயிரிடப்படுகின்றது.
5. மேற்கு வங்காளம் மட்டும் இந்திய சணல் உற்பத்தியில் 50 விழுக்காடு உற்பத்தி செய்கிறது.
6. மரக்கட்டைகளிலிருந்து மெல்லியதாகச் சீவி எடுக்கப்படுகின்ற மரத்தகடுகளை உரிய
வகையில் ஒன்றின் மேலொன்று அடுக்கடுக்காக ஒட்டி உருவாக்கப்படுவதே ஒட்டுப்பலகை (Ply wood) ஆகும். இது ஒருவகைக் கூட்டு மரப் பலகை (Composite Wood) ஆகும்.
7. பாலக்கீரை - மூட்டு முடக்குவாதம் என்பது அனைத்து வயதினருக்கும் மூட்டு மற்றும் முழங்கால் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். இந்த நோய்க்கான மருந்தினை
பாலக்கீரையிலிருந்து தற்போது மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவன (CDRI - Central Drug Research Institute Lucknow) விஞ்ஞானிகள் நானோ உருவாக்கத்தின் (Nano Formulation) மூலம் உருவாக்கியுள்ளனர்.
6 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்
6. வன்பொருளும் மென்பொருளும்
1. இணையம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே மின்னஞ்சல் பயன்பாட்டில் இருந்தது
2. திறந்த மூல மென்பொருள் தயாரித்தலையும், பயன்படுத்தலையும் ஊக்குவிக்கும் நிறுவனம் Open Source Initiative