Search This Blog

ஜூலை 18 தமிழ்நாடு நாள்

1956-ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 முதல் நவம்பர் 1-ந்தேதியை தமிழ்நாடு மாநில நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பல்வேறு தரப்பினர் நவம்பர் 1ஆம் தேதி எல்லை போராட்டத்தினை  நினைவு கூறும் நாளாகத்தான் அமையும். அதை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது.

மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி பேரறிஞர் அண்ணாவால் 1967 ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை, 1967-ம் ஆண்டு ஜூலை 18-ந்தேதி தமிழ்நாடு என்று பெயர் மாற்றிய தினமே, 'தமிழ்நாடு நாள்' என கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று'தமிழ்நாடு நாள்' கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை தலைமைச் செயலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளத்து.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url