Science Box questions 6th STD term -I | unit 5. விலங்குகள் வாழும் உலகம்
6 ஆம் வகுப்பு - முதல் பருவம்
5. விலங்குகள் வாழும் உலகம்
1. சிங்கப்பூரில் உள்ள ஜீராங் பறவைகள் பூங்காவில், பென்குவின் பறவைகள் பனிக்கட்டிகள் நிரம்பிய ஒரு பெரிய கண்ணாடி கூண்டுகளில் 0°C வெப்பநிலை அல்லது அதற்கும்
குறைவான வெப்பநிலையில் பராமரிக்கப்படுகின்றன.
2. ஒரு விலங்கு பருவமாறுபாட்டின் காரணமாக ஒஜரிடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு செல்வது “வலசை போதல்” என்பதாகும்.
3. வேடந்தாங்கல், கோடியக்கரை, மற்றும் கூந்தன் குளம் ஆகிய இடங்கள் தமிழ் நாட்டில் காணப்படும் பறவைகள் சரணாலயங்கள் ஆகும்.
4. பல பறவைகள் வெளிநாடுகளான சைபீரியா மற்றும் ரஷ்யாவிலிருந்து வேடந்தாங்கல் வருகின்றன. அதே போல் கோடை மற்றும் வறட்சி அதிகமுள்ள காலங்களில் நம் நாட்டுப்
பறவைகள் வெளி நாடுகளுக்கு வலசை போகின்றன. எனவே இவைகள் வலசைபோகும்
பறவைகள் என்று அழைக்கப்படுகின்றன.
5. சில விலங்குகள் அதிகப்படியான குளிரை தவிர்க்க அனைத்து செல்பாடுகளையும்
நிறுத்திவிட்டு உறக்கத்தில் ஈடுபடுகின்றன. இந்நிலைக்கு குளிர்கால உறக்கம் என்று
பெயர். எகா. ஆமை
6. அதே சமயம் சில விலங்குகள் அதிகப்படியான வெப்பத்தை தவிர்க்க அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திவிட்டு உறக்கத்தில் ஈடுபடுகின்றன. இந்நிலைக்கு கோடைகால உறக்கம் என்று பெயர். எ.கா. நத்தை
7. எப்பொழுதும் கங்காரு எலி நீர் அருந்துவதில்லை. அது உண்ணும் உணவில் இருந்து
உடலுக்கு தேவையான நீரை உருவாக்கிக் கொள்கிறது.
8. நமது மாநில விலங்கான நீலகரி வரையாடு மலைகளின் மீது உள்ள பாறைகளின்
இடுக்குகளில் மிக எளிதாக நுழைந்து உடல் சமநிலையுடன் ஏறி தாவர வகைகளை
உண்ணும் திறன் பெற்றுள்ளது.
L