Science Box questions 6th STD term -I | unit 6. உடல் நலமும் சுகாதாரமும்
6 ஆம் வகுப்பு - முதல் பருவம்
6. உடல் நலமும் சுகாதாரமும்
1. அதிகமான புரதம் உள்ள உணவு சோயாபீன்ஸ் ஆகும்.
2. சூரியத் திரை பூச்சு, தோலின், வைட்டமின் D உற்பத்தியை 95% குறைக்கிறது. எனவே வைட்டமின் D குறைபாட்டு நோய் ஏற்படுகிறது.
3. நெல்லிக்கனிகளில், ஆரஞ்சு பழங்களைவிட 20 மடங்கு, அதிக “வைட்டமின் C” காணப்படுகிறது.
4. முருங்கை இலையில் நிறைந்துள்ள சத்துக்கள் வைட்டமின் A, வைட்டமின் C,
பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து மற்றும் புரதம். இது (antioxidant) -
ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானாகவும் உள்ளது.
5. உலகில் 80% முருங்கை இலை உற்பத்தி இந்தியாவில் தான் உள்ளது. முருங்கை இலைகளை பெரும்பாலும் இறக்குமதி செய்யக் கூடிய. நாடுகளாவன: சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆகும்.
6. சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வின் படி 14.4 மில்லியன் குழந்தைகள் உடல் பருமானாக இருக்கின்றார்கள். இந்த வகையில் இந்தியா சீனாவிற்கு அடுத்தாக உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
7. வைரஸினால் ஏற்படும் நோய்களை, நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி செயல்பட்டு அழிப்பதற்கு முன், அந்நோயின் அறிகுறிகளை வைத்து குணப்படுத்த முடியும். நுண்ணுயிரி கொல்லிகளால் வைரஸின் தாக்கத்தை அழிக்க முடியாது.
8. நோய் என்பது உடலில் நோய்கிருமிகளின் செயல்பாட்டால் ஏற்படும் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளின் வெளிப்பாட்டில் ஏற்படும் தொகுப்பு.
9. முரண்பாடு அல்லது கோளாறு உடல் செயல்பாடுகளில் ஏற்படும் ஒழுங்கற்ற தன்மை.
10. ஒரு வைரஸ் டி.என்.ஏ. வுக்கு பதிலாக ஆர்.என்.ஏ. வை பெற்றிருந்தால் அதற்கு ரிட்ரோ வைரஸ் என்று பெயர்