Science Box questions 6th STD term -I | unit 4. தாவரங்கள் வாழும் உலகம்
6 ஆம் வகுப்பு - முதல் பருவம்
4. தாவரங்கள் வாழும் உலகம்
1. நீரில் வாழும் விக்டோரியா அமேசோனிக்கா என்ற தாவரத்தின் இலைகள் மூன்று மீட்டர் விட்டம் வரையில் வளரும். நன்கு வளர்ச்சி அடைந்த இலையின் மேற்பரப்பு 45 கிலோ
கிராம் எடையோ அல்லது அதற்கு இணையான ஒருவரைத் தாங்கும் தன்மை கொண்டது.
2. பூவின் அடிப்படையில் தாவரங்களை இரு வகைகளாக பிரிக்கலாம். அவை பூக்கும்
தாவரங்கள், பூவாத் தாவரங்கள் ஆகும்.
3. விதை அமைந்திருக்கும் தன்மையில் தாவரங்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
அவை
1. ஆஞ்சியோஸ்பெர்ம்கள் மூடிய விதைத் தாவரங்கள்)
2. ஜிம்னோஸ்பெர்ம்கள்
(திறந்த விதைத் தாவரங்கள்)
4. உலகில் மிக நீளமான நதி நைல் நதியாகும். இது 6,650 கி.மீ. நீளம் உடையது.
5. இந்தியாவின் மிக நீளமான நதி கங்கையாகும். இதன் நீளம் 3,525 கி.மீ நீளம் உடையது.
6. தாமரையின் இலைக் காம்பில் உள்ள காற்று இடைவெளிகள் நீரில் மிதக்க உதவுகின்றன.
7. 470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான நில வாழ் தாவரங்கள், மாஸ்கள் மற்றும் லிவர்வோர்ட்ஸ்.
8. தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் மலைக் காடுகள் உலகிற்கான ஆக்ஸிஜன்
தேவையில் பாதியைக் கொடுக்கிறது.
9. மணல் குன்றுகளால் ஆன மிகப் பெரிய இந்திய பாலைவனமான தார் பாலைவனம் இந்திய
துணைக் கண்டத்தில் உள்ளது. இதன் பகுதிகள் ராஜஸ்தான் மாநிலத்திலும், வடமேற்கு
இந்தியாவிலும், பஞ்சாபிலும் சிந்து மாகாணத்திலும் மற்றும் கிழக்கு பாகிஸ்தானிலும்
விரிந்துள்ளது.
10. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை உலக வாழிட நாளாக
அனுசரிக்கப்படுகிறது.
11. வளரும் பருவ நிலையில் அதிவேகமாக வளரக் கூடிய தாவரம் மூங்கில் ஆகும்.