Science Box questions 7th STD term -I | unit 3 நம்மைச்‌ சுற்றியுள்ள பருப்பொருள்கள்‌

7ஆம்‌ வகுப்பு - முதல்‌ பருவம்‌
3. நம்மைச்‌ சுற்றியுள்ள பருப்பொருள்கள்‌

1. பேரண்டத்தில்‌ முதன்மையாகக்‌ காணப்படுவது ஹைட்ரஜன்‌ அணுவாகும்‌. ஏறக்குறையப்‌ பேரண்டத்தில்‌ காணப்படும்‌ அணுக்களில்‌ 74% ஹைட்ரஜன்‌ அணுக்களாகும்‌.
இருந்தபோதிலும்‌ பூமியில்‌ இரும்பு, ஆக்சிஜன்‌, மற்றும்‌ சிலிக்கான்‌ போன்றவை முக்கிய
அணுக்களாகக்‌ காணப்படுகின்றன.

2. வயிற்றுப்போக்கு மருந்தில்‌ பிஸ்மத்‌ : பிஸ்மத்‌ என்பது இயற்கையில்‌ கிடைக்கக்கூடிய ஒரு தனிமம்‌ ஆகும்‌. இதை மற்ற தனிமங்களுடன்‌ சேர்த்து வயிற்றுப்போக்கு சிகிச்சை
மருந்தாகப்‌ பயன்படுத்துகின்றனர்‌.

3. இராபர்ட்‌ பாயில்‌ என்ற விஞ்ஞானி முதன்‌ முதலில்‌ தனிமம்‌ என்ற வார்த்தையைப்‌
பயன்படுத்தினார்‌. இவர்‌ பொருளின்‌ அடிப்படை இயல்பு மற்றும்‌ வெற்றிடத்தின்‌ தன்மை
ஆகியவற்றின்‌ ஆரம்பகால ஆதரவாளர்‌ ஆவார்‌. பாயில்‌ விதியின்‌ மூலம்‌ இவர்‌ நன்கு
அறியப்பட்டவர்‌.

4. ஆரம்பத்தில்‌ தனிமங்களின்‌ பெயர்கள்‌ அத்தனிமம்‌ முதன்முதலில்‌ கிடைத்த இடத்தின்‌ பெயரால்‌ அழைக்கப்பட்டன. உதாரணமாகத்‌ தாமிரம்‌ சிப்ரஸ்‌ என்ற பெயரில்‌ இருந்து
உருவாக்கப்பட்டது.
சில தனிமங்களின்‌ பெயர்கள்‌ அத்தனிமத்தின்‌ நிறங்களிலிருந்து உருவாக்கப்பட்டன.
உதாரணமாக, தங்கம்‌ (Gold) மஞ்சள்‌ எனப்‌ பொருள்‌ தரும்‌ ஆங்கில வார்த்தையிலிருந்து
வருவிக்கப்பட்டது.

5. தற்காலங்களில்‌ IUPAC தனிமங்களுக்கான பெயர்களை அங்கீகரிக்கிறது. பல
தனிமங்களின்‌ குறியீடுகள்‌ அத்தனிமங்களின்‌ ஆங்கிலப்‌ பெயர்களின்‌ எழுத்துகளில்‌ ஒன்று அல்லது இரண்டு எழுத்துகள்‌ இணைத்து உருவாக்கப்படுகின்றன. குறியீட்டின்‌ முதல்‌
எழுத்தானது எப்போது ஆங்கிலப்‌ பெரிய எழுத்தினாலும்‌ இரண்டாவது எழுத்தானது
ஆங்கிலச்‌ சிறிய எழுத்தினாலும்‌ எழுதப்பட வேண்டும்‌.

6. பலூனில்‌ உள்ள காற்றை வவப்பப்படுத்தும்போது அது விரிவடைகின்றது. அதனால்‌
பலூனில்‌ உள்ள காற்றின்‌ அடர்த்தி வெளிப்புறத்தில்‌ உள்ள காற்றின்‌ அடாத்தியைவிட
குறைகின்றது. இந்த அடர்த்தி வேறுபாட்டின்‌ காரணமாக வெப்பக்காற்று பலூன்‌ காற்றில்‌
மிதக்கின்றது.

Next Post Previous Post