Search This Blog

காற்றைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:




உயிரின் ஓசை / கேட்கிறதா என் குரல் ! 

✓ மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று திருமந்திரத்தில் திருமூலர் கூறியுள்ளார் . 

✓ " வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம் " என்று ஒளவையார் வாயுதாரணை என்னும் அதிகாரத்தில் காற்றினைச் சிறப்பித்துள்ளார் .

 ✓ கிழக்கு என்பதற்கு குனக்கு என்னும் பெயரும் உண்டு.

கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல் எனப்படுகிறது .

 ✓ மேற்கு என்பதற்கு குடக்கு என்னும் பெயரும் உண்டு .

மேற்கிலிருந்து வீசும் காற்று கோடை எனப்படுகிறது . 

வடக்கு என்பதற்கு வாடை என்னும் பெயரும் உண்டு .

 ✓ வடக்கிலிருந்து வீசும் காற்று வாடைக்காற்று எனப்படுகிறது .

 ✓ தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல் எனப்படுகிறது .

 ✓ " வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் ” என்ற சிலப்பதிகார அடிகளில் காற்றினைத் தென்றல் என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார் .

✓ " நந்தமிழும் தன்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற்
 செந்தமிழின் பின்னுதித்த தென்றலே "
 என்ற அடிகள் இடம்பெற்ற நூல் - பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது .

✓ பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும் நூலை இயற்றியவர் - பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர் .

 ✓ பழங்காலத்தில் கடல்பயணங்களில் கப்பல்கள் காற்றால் இயக்கப்பட்டதை

 " நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி
 வளிதொழில் ஆண்ட உரவோன் மருக !
களிஇயல் யானைக் கரிகால் வளவ !

என்ற புறநானூற்று அடிகள் கூறுகின்றன .

 ✓ பருவக்காற்றின் பயனை உலகிற்கு உனர்த்தியவர் - கிரேக்க அறிஞர் ஹிப்பாலஸ் 

✓ தென்மேற்குப் பருவக்காற்று - ஜூன் முதல் செப்டம்பர் 

✓ வடகிழக்குப் பருவக்காற்று - அக்டோபர் முதல் டிசம்பர் 

✓ " வளி மிகும் வலி இல்லை " என்ற புறநானூற்றுப் பாடலில் காற்றின் ஆற்றலைச் சிறப்பித்துள்ளவர் - ஐயூர் முடவனார் 

✓ இந்தியாவின் முதுகெலும்பு என்று அழைக்கப்படுவது - வேளாண்மை

✓ மனிதன் உணவின்றி 5 வாரம் உயிர்வாழ முடியும் 

✓ மனிதன் 5 நாள்கள் உயிர் வாழ முடியும் .

நான் மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளரச்சி குறைவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது. 

✓ வளிமண்டலத்தைப் பாதிக்கும் வாயு - குளிர்பதனியிலிருந்து வெளிவரும் ஹைட்ரோ கார்பன் .

 ✓ உலகக் காற்று தினம் - ஜூன் 15

✓ ' குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு , ஒரு இலட்சம் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்து விடும்.

ஹிப்பாலஸ் பருவக்காற்று : கி.பி.முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸ் எனும் பெயர் கொண்ட கிரேக்க மாலுமி பருவக் காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்கு நேரே விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார் . அது முதல் , யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேரநாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்துசென்றன . அந்தப் பருவக் காற்றுக்கு யவனர் , அதைக் கண்டுபிடித்தவர் பெயராகிய ஹிப்பாலஸ் என்பதையே சூட்டினார்கள் . ஹிப்பாலஸ் பருவக்காற்றின் வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று .

✓ " தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை , திருப்பாவை பாடல்கலைத் தாய்மொழியில் எழுதிவைத்துப் பாடிகின்றனர் " என்று கூறியவர் – தனிநாயக அடிகள் ( ஒன்றே உலகம் என்னும் நூலில் ) 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url