Search This Blog

பொதுத்தமிழ் – சுந்தரர்

  • சுந்தரர்,  தேவாரம் பாடிய மூவர்களுள் ஒருவர்.
  • நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
  • இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளில் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
  • இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தைப் படைத்தளித்தார்.
  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும்.
  • இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
  • தே+ஆரம் – இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றும், தே+வாரம் – இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும்.
  • பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.

சிறந்த தொடர் :

  • “பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிர”
  • “கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே”
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url