பட்டிமண்டபம் என்ற சொல் பயின்று வரும் நூல்கள்:
பட்டிமண்டபம்:
பட்டிமண்டபம் என்பதுதான் இலக்கியவழக்கு . ஆனால் இன்று நடைமுறையில் பலரும் பட்டிமன்றம் என்றே குறிப்பிடுகிறார்கள் . பேச்சுவழக்கையும் ஏற்றுக்கொள்கிறோம் .
பட்டிமண்டபம் என்ற சொல் பயின்று வரும் நூல்கள்:
"மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன் , பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்"
- சிலப்பதிகாரம் ( காதை 5 , அடி 102 )
"பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து
ஏறுமின்"
- மணிமேகலை ( காதை 1 , அடி 16 )
"பட்டிமண்டபம் ஏற்றினை , ஏற்றினை ; எட்டினோடு இரண்டும் அறியேனையே "
- திருவாசகம் ( சதகம் 41 )
"பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்"
- கம்பராமாயணம் ( பாலகாண்டம் , நகரப் படலம் 154 )