தொல்காப்பியத்தில் சிற்பக்கலை
தமிழின் தொன்மையான இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் சிற்பக்கலை பற்றிய குறிப்பு காணப்படுகிறது .
போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும் .
அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப்பெறும் .
தமிழரின் தொடக்ககாலச் சிற்பக்கலைக்குச் சான்றாக இதையும் குறிப்பிடலாம் .
சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குச் சிலைவடித்த செய்தி இடம் பெற்றுள்ளது .
மாளிகைகளில் பல சுண்ணாம்புக் கலவை ( சுதைச் சிற்பங்கள் ) இருந்ததை மணிமேகலை மூலம் அறிய முடிகிறது .