Search This Blog

ஹிப்பல்ஸ் பருவக்காற்று


பொ.ஆ.பி. முதல் நூற்றாண்டில் ஹிப்பல்ஸ் என்னும் பெயர் கொண்ட கிரேக்க மாலுமி , பருவக்காற்றின் உதவியினால் முசிறித் துறைமுகத்துக்கு நேரே நடுக்கடல் வழியாக விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார் .

 அது முதல் , யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேரநாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்து சென்றன .

 அந்தப் பருவக்காற்றுக்கு யவனர் , அதைக் கண்டுபிடித்தவர் பெயராகிய ஹிப்பல்ஸ் என்பதையே சூட்டினார்கள் .

 ஹிப்பல்ஸ் பருவக்காற்று வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று . 

பொ.ஆ.பி. முதல் நூற்றாண்டின் உரோமப் பேரரசை அரசாண்ட அகஸ்தஸ் சீஸர் , யவனர் - தமிழர் வணிகத்தை விரிவுபடுத்தினார் . 

உரோமபுரி அரசர்களின் உருவ முத்திரை இடப்பட்ட பழைய நாணயப் புதையல்கள் தமிழ்நாட்டில் சில இடங்களில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன .
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url