Search This Blog

வான்படைப் பிரிவு

 

 இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு , வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக , ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் . அந்த 45 பேர் கொண்ட பயிற்சிப் பிரிவின் பெயர்தான் டோக்கியோ கேடட்ஸ் . 

யுத்தச் சூழலுக்கு நடுவில் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் டோக்கியோ செல்வது ஒரு சவாலாக இருந்தது . பர்மாவில் இருந்து காட்டுவழியாகப் பயணம் செய்து சயாம் மரண ரயில் பாதையைக் கடந்து அங்கிருந்து படகு வழியாகத் தப்பிச் சென்று பழைய கப்பல் ஒன்றில் ஏறி , சீறும் அலைகளில் சிக்கித் தவித்து முடிவில் ஜப்பானின் " கியூசு " தீவை அடைந்தனர் . அந்தத் தீவு , கடற்படையின் வசம் இருந்தது . அங்கே , கடற்படைக்கான பயிற்சிகள் நடைபெற்றன . 

காலை 5 மணிக்கு எழுந்து மூன்று மைல் தூரம் ஓடவேண்டும் . அப்போது குளிர் , பூஜ்யத்திற்குக் கீழ் இருக்கும் . உதடுகள் வெடித்து வலி தாங்க முடியாது . 

பனிப்புகை படர்ந்த மைதானத்தில் ஓடுவார்கள் . மூன்று மைல் தூரம் ஓடியதும் ஐந்து நிமிடங்கள் ஓய்வு , பிறகுதான் சிறப்புப் பயிற்சிகள் . அதை முடித்துக்கொண்டு அவசரமாகக் குளித்துத் தயாராகி வர வேண்டும் .

 - பசும்பொன் மடல் , மடல் 32 , இதழ் 8 , ஜனவரி 2018 , ப.14-16
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url