Search This Blog

நாகசுரம் (நாதஸ்வரம்)

 இந்திய இசையின் அழகான நுட்பங்களைத் தெளிவாக வாசித்துக் காட்டக்கூடிய இசைக் கருவிகளில் நாகசுரமும் ஒன்று .

 மங்கலமான பல நிகழ்வுகளில் இக்கருவி இசைக்கப்படுகிறது . 

இந்தச் சிறப்பான கருவி 600 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழகத்தில் வாசிக்கப்பட்டது . 

13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கீத இரத்னாகரம் என்னும் நூலில் இந்தக் கருவி கூறப்படவில்லை . 

13 ஆம் நூற்றாண்டு வரையிலுள்ள எந்தப் பதிவுகளிலும் இந்தக் கருவி பற்றிக் குறிப்பிடப்படவில்லை . 

தமிழகப் பழைமை வாய்ந்த கோவில் சிற்பங்களிலும் இந்தக் கருவி காணப்படவில்லை . 

ஆகவே இந்தக் கருவி இடைக் காலத்திற்குப் பின் ஏற்பட்டிருக்கலாம் என்று அறியமுடிகிறது . 

நாகசுரம் என்ற பெயரே சரியானது . நாகசுரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது . 

வெட்டப்பட்ட ஆச்சா மரத்துண்டுகளை நீண்ட நாள்கள் வைத்திருந்த பிறகே இக்கருவி உருவாக்கப்படுகிறது . 

எனவே பழைய வீடுகளிலிருந்து பிரிக்கப்பட்ட ஆச்சா மரக்கட்டைகளைக் கொண்டே நாகசுரம் செய்யப்படுகிறது . 

நாகசுரத்தின் மேல்பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படுகிறது . 

சீவாளி , நாணல் என்ற புல் வகையைக்கொண்டு செய்யப்படுகிறது .
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url