Search This Blog

உலகப் பெருந்தமிழர் தமிழ்த்திரு இரா.இளங்குமரனார் .


தமிழாசிரியர் ; நூலாக்கப் பணிகளை விரும்பிச் செய்பவர் ; சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் .

  திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் " திருவள்ளுவர் தவச்சாலை ' ஒன்றை அமைத்திருப்பவர் ; பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் ; தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர் ; தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர் .

 விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர் ; அதற்காக , தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் ; இன்றளவும் இவ்வாறே எழுதித் தமிழுக்குத் தனிப்பெரும் புகழை நல்கி வருபவர் .

 பற்பல நூல்களை எழுதியிருப்பினும் இலக்கண வரலாறு , தமிழிசை இயக்கம் , தனித்தமிழ் இயக்கம் , பாவாணர் வரலாறு , குண்டலகேசி உரை , யாப்பருங்கலம் உரை , புறத்திரட்டு உரை , திருக்குறள் தமிழ் மரபுரை , காக்கைப் பாடினிய உரை , தேவநேயம் முதலியன இவர்தம் தமிழ்ப் பணியைத் தரமுயர்த்திய நல்முத்துகள் . அவர்தான் உலகப் பெருந்தமிழர் தமிழ்த்திரு இரா.இளங்குமரனார் .
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url