Search This Blog

6th to 10th New Tamil Book சாகித்திய அகாதமி விருது


சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள்:


1. அன்பளிப்பு (சிறுகதைகள்) – கு. அழகிரிசாமி – 1970
2. சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) – தி.ஜானகிராமன் – 1979
3. முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) – ஆதவன் – 1987
4. அப்பாவின் சிநேகதர் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்ரன் – 1996
5. மின்சாரப்பூ (சிறுகதைகள்) – மேலாண்மை பொன்னுசாமி – 2008
6. சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) – நாஞ்சில் நாடன் – 2010
7. ஒரு சிறு இசை (சிறுகதைகள் ) – வண்ணதாசன் – 2016


சாகித்திய அகாதமி விருது:

1. ஒரு சிறு இசை என்ற சிறுகதை தொகுப்பிற்காக கல்யாண்ஜிக்கு சாகித்திய அகாதாமி விருது வழங்கப்பட்ட ஆண்டு – 2016
2. சு. சமுத்திரம் எழுதிய வேரில் பழுத்த பலா என்னும் புதினம் எந்த விருதை பெற்றது – சாகித்திய அகாதமி விருது
3. புதிய உரைநடை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் – எழில்முதல்வன்
4. கோபல்லபுரத்து மக்கள் என்னும் நூலுக்கு எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது – 1991
5. விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் – சா. கந்தசாமி
6. ம.பொ.சிவஞானம் எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் நூலுக்காக 1966 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
7. ராஜம் கிருஷ்ணன் எழுதிய புதினங்கள்: வேருக்கு நீர் (சாகித்திய அகாதெமி விருது)
8. ஒரிய மொழிக் கவிஞர் மனோரமா பிஸ்வாஸின் பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம் என்னும் நூலின் மொழிபெயர்ப்பு நூலுக்காக 2011 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் – இந்திரன்
9. சி.சு. செல்லப்பாவின் சுதந்திர தாகம் புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்ட ஆண்டு
– 2001
10. வானம் வாசப்படும் என்னும் புதினத்திற்காக பிரபஞ்சன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு – 1995
11. சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய நூல்கள்: மொழிபெயர்ப்புக்காகவும் ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காகவும் இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்
12. பூமாணிக்கவாசகர் எழுதிய நூல்கள்: அஞ்ஞாடி என்னும் புதினத்திற்காக 2014 ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்
13. தோப்பில் முகமது மீரான் எழுதிய சாய்வு நாற்காலி என்னும் புதினம் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு – 1997
14. வடக்கு வீதி என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக அ. முத்துலிங்கம்
இலங்கை அரசின் சாகித்தியப் பரிசை பெற்ற ஆண்டு – 1999


தமிழக அரசின் விருது:

1. கோமகள் எழுதிய அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினை பெற்றுள்ளார்
2. சமுத்திரம் எழுதிய குற்றம் பார்க்கில் என்னும் சிறுகதைத் தொகுதி எந்த பரிசை பெற்றது – தமிழக அரசின் பரிசை
3. வம்சவிருத்தி என்னும் சிறுகதை தொகுப்புக்காக அ. முத்துலிங்கம் தமிழ்நாடு அரசின் முதல் பரிசினைப் பெற்ற ஆண்டு – 1996
4. தகப்பன் கொடி புதினத்திற்காக 2003 ஆம் ஆண்டு தமிழக அரசின் விருது பெற்றவர் – அழகிய பெரியவன்
5. தோப்பில் முகமது மீரான் எழுதிய நூல்கள் : துறைமுகம், கூனன் தோப்பு – தமிழக அரசின் விருது பெற்றுள்ளன.


6 – 10 ஆம் வகுப்பு தமிழ் இதழ்கள்:

1. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தியவர் –
பெருஞ்சித்திரனார்
2. கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர் – ராஜமார்த்தாண்டம்
3. கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வருபவர் – சுப்ரபாரதிமணியன்
4. வானம்பாடி, குயில், தென்றல் ஆகிய இதழ்களில் கவிதைகளை எழுதியவர் – தேனரசன்
5. தமது வீட்டில் வட்டத்தொட்டி என்னும் பெயரில் இலக்கிய கூட்டங்கள் நடத்தி வந்தவர் – டி.கே. சிதம்பரநாதர்
6. குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ்கள் – அருளோசை, அறிக அறிவியல்
7. இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலை போருக்கு வித்திட்டவர் – பாரதியார்
8. அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர் – மீரா
9. அயோத்திதாசர் சென்னையில் ஒருபைசாத்தமிழன் என்ற வாரஇதழை காலணா விலையில் தொடங்கிய ஆண்டு – 1907
10. அயோத்திதாசர் தொடங்கிய ஒருபைசாத்தமிழ் என்னும் வாரஇதழை ஓர் ஆண்டிற்குபின் அவ்விதழின் பெயரை ______ என மாற்றினார் – தமிழன்
11. ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை 1927 ஆம் ஆண்டு தொடங்கியவர் – அம்பேத்கர்
12. அறிஞர் அண்ணா ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் : ஹோம்ரூல், ஹோம்லேண்ட், நம்நாடு, திராவிடநாடு, மாலைமணி, காஞ்சி
13. அறிஞர் அண்ணா துணை ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள்: குடியரசு, விடுதலை
14. . தி. ஜானகிராமன் எழுதிய கதைகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசமித்திரன், ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்தன.
15. தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதியவர் – தி.ஜானகிராமன்
16. ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்த ஆண்டு – 1967
17. குடியரசு இதழின் பதிப்பாளராக பணியாற்றியவர் – நாகம்மையார் பெரியார் நடத்திய இதழ்கள் –
குடியரசு, விடுதலை, உண்மை, ரிவோல்ட் (ஆங்கில இதழ்)
18. ஹனுமான், நவஇந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசிரியராக இருந்தவர் – ந. பிச்சமூர்த்தி
19. தமிழ்ப் பண்பாடு என்ற இதழை தொடங்கியவர் – தனிநாயகம் அடிகள்
20. ஞான பாநு மாதப்பத்திரிக்கையை நடத்தியவர் – எஸ். சுப்பிரமணி சிவா
21. தென்மொழி, தமிழ்சிட்டு இதழ்களின் வாயிலாக தமிழுணர்வை பரப்பியவர் –
பாவலரேறு பெருஞ்சித்திரனார் .
22. தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணிபுரிந்தவர் – கு.ப.ராஜகோபாலன்
23. எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர் – நாகூர்ரூமி
24. தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணிபுரிந்தவர் – கு.ப.ராஜகோபாலன்
25. சுதேசமித்திரன், இந்தியா இதழ்களில் பணியாற்றியவர் . – பாரதியார்
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url