18 வயதை அடைந்த ஜி மெயில் (Gmail at 18 years old)
இன்று குழந்தை பிறந்தால், ஜிமெயிலில் ஐடி கிடைக்கும்படியாகப் பெயர் வைக்க வேண்டும் என்றுதான் பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கிறார்கள். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாதவர்கள் கூட ஜிமெயில் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்துவிட்ட ஜிமெயிலுக்கு இன்றுடன் வயது 18 ஆகிறது.
18 ஆண்டுகளுக்கு முன் 2004-ல் இதே நாளில் (01-04-2004)
ஜிமெயில் தொடங்கப்பட்டது. அப்போது ஒரு யூஸருக்கு 1 ஜி.பிதான். இன்று 15 ஜி.பி வரை இலவசமாகத் தருகிறது ஜிமெயில். பல கோடி பேர் உலகம் முழுவதும் ஜிமெயிலைப் பயன்படுத்துகிறார்கள்.
ஜிமெயில் தொடங்கப்பட்டபோது ஹாட்மெயில், யாஹூ மெயில் என நிறைய டெக் ஜாம்பவான்கள் களத்தில் இருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் அனைவரையும் கடந்து இன்று மிகப்பெரிய சக்தியாக உருவாகியிருக்கிறது ஜிமெயில்.
வெறும் சர்ச் எஞ்சினாக மட்டுமே இருந்த கூகுளை உலகின் மிக முக்கிய டெக் சக்தியாக மாற்ற ஜிமெயில்தான் உதவியது. இன்று, உலகம் முழுவதும் தயாரிக்கப்படும் 10 மொபைல்களில் 9 ஆண்ட்ராய்டு மொபைல்தான். கூகுள் மேப்ஸ் தொடங்கி க்ரோம் வரை அதன் அத்தனை தயாரிப்புகளையும் பல கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். இதற்கெல்லாம் அடித்தளமிட்டது ஜிமெயில்தான்.
நீங்கள் முதன் முதலில் ஜிமெயில் ஐடி உருவாக்கிய தருணம் நினைவிலிருக்கிறதா? கமென்ட் பாக்ஸில் பகிர்ந்துகொள்ளுங்கள்.