Search This Blog

இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை யார்?

சர் ஆர்தர் காட்டன்


இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர் கல்லணையைப் பல ஆண்டுக்காலம் ஆராய்ந்தார் .

கல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது . 

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளமை குன்றியது . 

இந்தச் சூழலில் 1829 இல் காவிரிப் பாசனப் பகுதிக்குத் தனிப் பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார் . 

இவர்தான் பயனற்று இருந்த கல்லணையைச் சிறு சிறு பகுதியாய்ப் பிரித்து மணல் போக்கிகளை அமைத்தார் .

 அப்போது , கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார் .

 கல்லணைக்கு கிராண்ட் அணைக்கட் என்ற பெயரையும் சூட்டினார் .

 மேலும் கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டுதான் 1873 ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார் .
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url