Search This Blog

குழல் - வகை காற்றுக்கருவி

குழல் - வகை காற்றுக்கருவி 

காடுகளில் வளரும் மூங்கிலில் வண்டுகள் துளையிடும் . அவற்றின் வழியாகக் காற்று வீசும்போது இன்னிசை எழும்பும் . இதனைக் கேட்டு மகிழ்ந்த நம் முன்னோர் அமைத்துக் கொண்டவையே குழல்கள் . இதனை வேய்ங்குழல் , புல்லாங்குழல் என்றும் அழைப்பர் . குழல் ஏழு சுரங்களை உண்டாக்குவதற்கு உரிய ஏழு துளைகளை உடையதாக இருக்கும் . இது சுமார் இருபது விரல் நீளம் உடையதாக இருக்கும் . மூங்கில் மட்டுமன்றிச் சந்தனம் , செங்காலி , கருங்காலி ஆகிய மரங்களாலும் குழல்கள் செய்யப்படுகின்றன . கொன்றைக்குழல் , முல்லைக்குழல் , ஆம்பல்குழல் எனப் பலவகையான குழல்கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது . 
"குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
 மழலைச்சொல் கேளா தவர்
  - திருக்குறள்
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url