சாலரா - வகை கஞ்சக்கருவி
சாலரா - வகை கஞ்சக்கருவி
இது பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்டிருக்கும் . அதன் உட்புறம் குவிந்து இருக்கும் . இதனை ஒன்றோடு ஒன்று பொருத்தியும் விளிம்பின் மீது தட்டியும் தாளத்தின் தேவைக்கு ஏற்ப இசைப்பர் . இதனைப் பாண்டில் எனவும் அழைப்பர் . இது கோயில் கூட்டு வழிபாட்டின் போதும் இன்னிசை அரங்குகளிலும் இசைக்கப்படும் இன்றியமையாத இசைக்கருவி ஆகும் . இதனை இக்காலத்தில் ' ஜால்ரா ' என்பர் .