12th std - தமிழ் - சொல்லும் பொருளும் - பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் : பொதுத்தமிழ் - பகுதி - அ - இலக்கணம் -
12th- சொல்லும் பொருளும்
நெடுநல்வாடை
1. புதுப்பெயல் - புதுமழை
2. ஆர்கலி - வெள்ளம்;
3. கொடுங்கோல் - வளைந்த கோல்
4. புலம்பு - தனிமை
5. கண்ணி - தலையில் சூடும் மாலை
6. கவுள் - கன்னம்
7. மா - விலங்கு
ராமாயணம்
8. அமலன் - இராமன்
9. இளவல் - தம்பி
10. நளிர்கடல் - குளிர்ந்தகடல்
11. துன்பு - துன்பம்
12. உன்னேல் - எண்ணாதே
13. அனகன் - இராமன்
14. உவா - அமாவாசை
15. உடுபதி - சந்திரன்
16. செற்றார் - பகைவர்
17. கிளை - உறவினர்
புறநானூறு
18. வாயிலோயே - வாயில் காப்போனே
19. வள்ளியோர் - வள்ளல்கள்
20. வயங்குமொழி - விளங்கும் சொற்கள்
21. வித்தி - விதைத்து
22. உள்ளியது - நினைத்தது
23. உரன் - வலிமை
24. வறுந்தலை - வெறுமையான இடம்
25 . காவினெம் - கட்டிக்கொள்ளுதல்
26. கலன் - யாழ்
27. கலப்பை - கருவிகளை வைக்கும் பை
28.மழு - கோடரி
தேவாரம்
29. மலிவிழா - விழாக்கள் நிறைந்த
30. மடநல்லார் - இளமை பொருந்திய பெண்கள்
31. கலிவிழா - எழுச்சி தரும் விழா
32. பலிவிழா - திசைதோறும் பூசையிடும் உத்திரவிழா
33. ஒலிவிழா - ஆரவார விழா
அகநானூறு
34. வேட்டம் - மீன் பிடித்தல்
35. கழி - உப்பங்கழி
36. செறு - வயல்
37.கொள்ளை - விலை
38. என்றூழ் - சூரியனின் வெப்பம்
39. விடர - மலைவெடுப்பு
40. கதழ் - விரைவு
41. உமணர் - உப்பு வணிகர்
42. எல்வளை- ஒளிரும் வளையல்
43. தெளிர்ப்ப - ஒலிப்ப
44. விளிஅறி - குரல்கேட்ட
45. ஞமலி - நாய்
46. வெரீஇய. அஞ்சிய
47. மதர்கயல்- அழகிய மீன்
48. புனவன் - கானவன்
49. அள்ளல் - சேறு
50. பகடு- எருது
சிலப்பதிகாரம்
51. புரிகுழல் - சுருண்ட கூந்தல்
52. கழை - மூங்கில்
53. கண் - கணு
54. விரல் - ஆடவர் கைப் பெருவிரல்
55. உத்தரப் பலகை - மேல் இடும் பலகை
56. பூதர் - ஐம்பூதங்கள்
57. ஓவிய விதானம் - ஓவியம் தீட்டப்பட்ட பந்தல்
58. நித்திலம் - முத்து
59. விருந்து - புதுமை
60. மண்ணிய - கழுவிய
61. நாவலம்பொலம் - சாம்பூநதம் என்னும் உயர்ந்த வகைப் பொன்
62. தலைக்கோல் - நாடகக் கணிகையர் பெறும் பட்டம்
63. ஓடை - முக படாம்
64. அரசு உவா - பட்டத்து யானை
65. பரசினர் - வாழ்த்தினர்
66. பல்இயம் - இன்னிசைக் கருவி
67. குயிலுவ மாக்கள் - இசைக் கருவிகள் வாசிப்போர்
68. தோரிய மகளிர் - ஆடலில் தேர்ந்த பெண்கள்
69. வாரம் - தெய்வப்பாடல்
70. ஆமந்திரிகை - இடக்கை வாத்தியம்
71. இலைப்பூங்கோதை - அரசன் அணிந்துள்ள பச்சை மாலை
72. கழஞ்சு - ஒரு வகை எடை அளவு
மெய்ப்பாட்டியல்
73. நகை - சிரிப்பு
74. இளிவரல் - சிறுமை
75. மருட்கை - வியப்பு
76. பெருமிதம் - பெருமை
77. வெகுளி - சினம்
78. உவகை - மகிழச்சி
புறநானூறு
79. காய்நெல் - விளைந்த நெல்.
80. மா - ஒருநில அளவு ஜர் ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு).
81.செறு - வயல்
82. தமித்து - தனித்து
83.புக்கு - புகுந்து.
84. யாத்து - சேர்த்து
85. நந்தும் - தழைக்கும்
86. வரிசை - முறைமை
87. கல் - ஒலிக்குறிப்பு
88. பரிவு - அன்பு
89.தப - கெட
90. பிண்டம் - வரி
91. நச்சின் - விரும்பினால்
இரட்சணிய யாத்திரிகம்
92. உன்னலிர் - எண்ணாதீர்கள்
93. பிணித்தமை - கட்டியமை
94. நீச - இழிந்த
95. நேசம் - அன்பு
96. வல்லியதை - உறுதியை
97. ஓர்மின் - ஆராய்ந்து பாருங்கள்
98. பாதகர் - கொடியவர்
99. குழுமி - ஒன்றுகூடி
100. பழிப்புரை - இகழ்ச்சியுரை
101. மட ஏதமில் - குற்றமில்லாத
102. ஊன்ற - அழுந்த
103. மாற்றம் - சொல்
104. நுவன்றிலர் - கூறவில்லை
105. ஆக்கினை - தண்டனை
106. நிண்ணயம் - உறுதி
107. கூவல் - கிணறு
108. ஒண்ணுமோ - முடியுமோ
109. உததி - கடல்
110. ஒடுக்க - அடக்க.
111. களைந்து - கழற்றி
112. திகழ - விளங்க
113. சேர்த்தினர் - உடுத்தினர்
114. சிரத்து - தலையில்;
115. பெய்தனர் - வைத்து அழுத்தினர்.
116. கைதுறும் - கையில் கொடுத்திருந்த;
117. கண்டகர் - கொடியவர்கள்;
118. வெய்துற - வலிமை மிக
119. வைதனர். - திட்டினர்
120. மறங்கொள் - முரட்டுத் தன்மையுள்ளவர்
121. மேதினி - உலகம்
122, கீண்டு - பிளந்து
123. வாரிதி - கடல்
124. சுவறாதது - வற்றாதது
125. வல்லானை - வலிமை வாய்ந்தவரை
126. நிந்தை - பழி
127. பொல்லாங்கு - கெடுதல், தீமை.
சிறுபாணாற்றுப்படை
128. வளமலை - வளமான மலை முலைநாடு இன்று பழநி மலை என்று அழைக்கப்படுகிறது;
129. கவாஅன் - மலைப்பக்கம்
130. கலிங்கம் - ஆடை
131 சுரும்பு - வண்டு
132. நாகம் - சுரபுன்னை, நாகப்பாம்பு
133. பிறங்கு - விளங்கும்;
134. பறம்பு - பறம்பு மலை
135. கறங்கு - ஒலிக்கும்
136. வாலுளை - வெண்மையான தலையாட்டம்
137. மருள - வியக்க
138. நிழல் - ஒளி வீசும்
139. நீலம் - நீலமணி
140. ஆலமர் செல்வன் - சிவபெருமான் (இறைவன்)
141. அமர்ந்தனன் - விரும்பினன்
142. சாவம் - வில்;
143. மால்வரை - பெரியமலை (கரிய மலையுமாம்);
144. கரவாது - மறைக்காது
145. துஞ்சு - தங்கு;
146. நளிசினை - செறிந்த கிளை பெரிய கிளை);
147. போது - மலர்
148. கஞாலிய - நெருங்கிய;
149. நாகு - இளமை
150. குறும்பொறை - சிறு குன்று;
151. கோடியர் - கூத்தர்
152.மலைதல் - போரிடல்
153. உறழ் - செறிவு
154. நுகம் - பாரம்.