Search This Blog

செல்பியால் உடல்நலத்தை அளக்கும் செயலி!!



🌻 வெறும் 30 விநாடிகளுக்கு 'வீடியோ செல்பி" எடுத்துக் கொடுத்தால் போதும். ஒரு செயலி, அதை அலசி, பொதுவான உடல்நலன் குறித்த 30 விதமான காரணிகளை அளந்து சொல்லிவிடும்.

📱 ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால், கனடாவின் டொரோன்டோவிலுள்ள நியூராலாஜிக்ஸ், 'அனுரா" என்ற செயலி மூலம் இதை சாதித்துள்ளது. இந்த செயலி மொபைல் மற்றும் கணினி ஆகிய இரண்டிலும் செயல்படும்.

🌻 இதை பயன்படுத்தி ஒருவர் அரை நிமிடம் செல்பி எடுத்தால், அதை மருத்துவ ரீதியில் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஒன்று அலசி ஆராயும்.

📱 செல்பியில் தெரியும் நபரின் ரத்த அழுத்தம், மூச்சு விடும் வேகம், மனச்சுமை, செரிமானத் திறன் என்று உடல்நலத்துக்கு அடிப்படையான பல காரணிகளை இந்த செயலி அலசி, முடிவை அரை நிமிடத்தில் சொல்லிவிடுகிறது.



🌻 மனித தோலில் பிரதிபலிக்கும் ஒளி, அவரது ரத்த ஓட்டத்தையும் தெளிவாகக் காட்டும். 

📱 இது தான் செல்பி வீடியோவில் செயற்கை நுண்ணறிவுக்கு கிடைக்கிறது. இந்த தகவல்களை வைத்தே, அது ஒரு மருத்துவருக்கு இணையாக நோயறிதல் பணியை நொடிகளில் முடித்து தருகிறது.

🌻 அனுரா செயலியை ஒரு தேர்ந்த மருத்துவரின் ஆலோசனைக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடாது என, இதன் தயாரிப்பாளர்கள் எச்சரிக்கின்றனர். 

📱 தினமும் தன் உடல்நலனை கண்காணிக்க வேண்டும் என்று நினைப்போருக்கு, அனுரா செயலி ஒரு உதவியாளர் அவ்வளவு தான் என, இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url