மீன்கள் தகவல் பரிமாறுவது எப்படி?
மீன்கள் தகவல் பரிமாறுவது எப்படி?
🐠 கார்ட்டூன் படங்களில் மீன்கள் பேசலாம். ஆனால், நீர் நிலைகளில் உள்ள அசல் மீன்களால் வாய் வழியே நிச்சயம் ஒலி எழுப்ப முடியாது என்றுதான் நீங்கள் நினைத்திருப்பீர்கள்.
💌 ஆனால் ஒரு புதிய ஆய்வின்படி, உலகிலுள்ள மூன்றில் இரண்டு பங்கு மீன்கள், ஒலி எழுப்புவதன் மூலம்தான், பிற மீன்களுடன் தொடர்பு கொள்கின்றன.
🐠 அமெரிக்காவிலுள்ள கார்னெல் பல்கலைக்ககழக விஞ்ஞானிகள், கூர் முனைத் துடுப்புகளைக் கொண்ட மீன் வகைகளை ஆராய்ந்தனர்.
💌 இந்த வகைப்பாட்டின் கீழ், உலகிலுள்ள 99 சதவீத மீன்கள் வந்துவிடும்.
🐠 இவற்றுக்கு ஒலி எழுப்பும் தசைகள், காற்றை அடைக்கும் உறுப்பு, குறிப்பிட்ட வகை எலும்புகள் போன்றவை உள்ளனவா என்று கவனித்தனர்.
💌 ஆய்வின் முடிவில், 175 வகை மீன்கள் ஓலி மூலம் பிற மீன்களுக்கு தகவல்களைத் தருகின்றன என்பது தெரியவந்தது.
🐠 தங்கள் இருப்பிடம், அதன் எல்லைகள், உணவு இருக்குமிடம் போன்றவற்றை பிற மீன்களுடன் ஒலிகளை எழுப்பித்தான் பகிர்ந்து கொள்கின்றன என்பது உறுதியானது.
💌 மீன்கள், நீரிலிருந்து எம்பி குதிப்பது, கரையின் மீது விழுந்து துள்ளிவிட்டு மீண்டும் நீருக்குள் போவது என்று பல அசாத்தியமான வேலைகளைச் செய்கின்றன. அவைகளால் ஒலி எழுப்ப முடியாமலா போகும்?