Search This Blog

அக்டோபர் 4 ஆம் நாள் முதல் - அக்டோபர் 10 நாளில் முடிய உலக விண்வெளி வாரம்( World Space Week (WSW ):

உலக விண்வெளி வாரம்( World Space Week (WSW ) அக்டோபர் 4 ஆம் நாள் முதல் - அக்டோபர் 10 நாளில் முடிய, இந்த இடைப்பட்ட நாட்களை உலக விண்வெளி வாரமாக கொண்டாடப்படுகிறது. 1957 ஆம் ஆண்டு, அக்டோபர் 4 இல் ஸ்புட்னிக் 1 ( Sputnik 1 ) என்ற செயற்கைகோள் உலகின் முதன்முதலாக செலுத்தப்பட்ட செயற்கைகோளாகும். 1967 இல்
அக்டோபர் 10 ஆம் நாளில் புற
விண்வெளி அமைதி உடன்படிக்கை செய்யப்பட்டு, உலக நாடுகளிடையே ஒப்பந்தம் கையொப்பம் ஆனதாக அறியப்படுகிறது.

யாது? எப்போது? :

சர்வதேச விண்வெளி வாரமென்பது, அறிவியல், தொழினுட்பம் மற்றும் மனித மேம்பாட்டிற்கும், அமையபெற்று தங்கள் பங்களிப்பை கொடுப்பதாகும். 1999 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுசபையால்
அக்டோபர் 4 - 10 இரு நாட்கள் (இரு நிகழ்வுகள்) இடைநாட்கள், நினைவுகூரும் வகையில் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

உரிப்பொருள் :

ஒவ்வொரு ஆண்டும், உலக விண்வெளி வாரக் கழக வாரியத்தின் ( World Space Week Association Board ) பணிப்பாளர்கள் மனிதத்துவத்துக்கு அறைகூவல் விடுத்து விண்வெளி அம்சம் பற்றிய முன்னிலைப்படுத்த கருப்பொருள் சேர்க்கிறது. இந்த குழு அவர்களின் திட்டங்கள் உள்ளடக்கத்தை உலக விண்வெளி வாரப் பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது.

1957 அக்டோபர் 4 இல், மனிதனால் உருவாக்கப்பட்ட, பூமியின் முதல்
செயற்கைக்கோள் ஸ்புட்னிக் 1 ஏவப்பட்டு விண்வெளி ஆய்விற்கு வழிவகுத்தது.

1967 அக்டோபர் 10 இல், விண்வெளி கோட்பாடுகள், மாநிலங்களின் செயல்பாடுகளை காணல், அமைதியான முறையில் சந்திரன் மற்றும் இதர கோள்கள் உள்ளிட்ட விண்வெளி பயன்கள் ஒப்பந்தம் நிர்வாகக்குழுவால் கையொப்பமானது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url