Search This Blog

தூக்கம் பற்றிய சில தகவல்கள்:

மனிதன் மற்றும் பல விலங்குகளுக்கு தூக்கம் என்பது கண்டிப்பான வாழ்நாள் முழுவதும் தேவையான ஒரு செயல் ஆகும்.

பெரும்பாலும் இரவு நேரம் என்பதே தூக்கத்துக்காக ஒதுக்கப்பட்டது தான். ஆனால் இப்பொழுதெல்லாம் இரவு நேரப் பணிகளைப் பார்த்து விட்டு பகலில் தூங்குகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இவ்வளவு நேரம் தான் தூங்க வேண்டும் என்று ஒரு அளவு கோல் இருந்தாலும், தூக்கம் அவரவரின் பழக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.

இரவில் மிக சீக்கிரமாக உறங்கி காலையில் தாமதமாக எழுந்திருப்பவர்கள் உண்டு. இரவு எவ்வளவு தாமதமாக படுத்தாலும் காலையில் வெகு சீக்கிரமாக அதிகாலையிலேயே எழுந்து விடுபவர்களும் உண்டு.

சரியாக தூங்காதவர்களை கண்களை பார்த்தே கண்டுபிடித்து விடலாம். மனிதனின் மனதைக் கட்டுப்படுத்த, கெட்ட எண்ணங்களை சீர்படுத்த, கோபம், ஆத்திரத்தைக் குறைக்க இயற்கையாக படைக்கப்பட்ட ஒரு செயல் தூக்கம்.

தூக்கத்துக்கு அந்த அளவுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு. நமது உடலில் இரண்டு வகையான தசைகள் இருக்கின்றன. நமது கட்டுப்பாட்டில் உள்ள தசைகள், கை கால்கள், தோள்பட்டை, மார்பு, முதுகு முதலியவற்றிலுள்ள கடினமான தசைகள், நமது கட்டுப்பாட்டிலுள்ள தசைகளாகும். இந்த தசைகளெல்லாம் நாம் நடப்பதற்கும், நகர்வதற்கும், உருண்டு புரள்வதற்கும் உபயோகப்படும் தசைகளாகும்.

ஆண்களின் உடலில் சுமார் 42 சதவீதமும், பெண்களின் உடலில் சுமார் 36 சதவீதமும் கட்டுப்பாட்டில் உள்ள தசைகள் இருக்கின்றன.
தூக்கத்தின்போது கட்டுப்பாட்டிலுள்ள தசைகள் பெரும்பாலும் தற்காலிகமாக செயலிழந்து விடுகின்றன.

நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள்(inVoluntary Muscles) இரைப்பை, இருதயம், உணவுக்குழாய், காற்றுக்குழாய், வயிற்றின் உள்ளே உள்ள உறுப்புகள், சிறுநீர்ப்பை, ரத்தக்குழாய்கள் மற்றும் உடலின் உறுப்புகளுக்கு உள்ளே உள்ள மெல்லிய தசைகள், இவை எல்லாமே நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகளாகும்.

தூங்கும் போது கட்டுப்பாட்டிலுள்ள தசைகள் மட்டுமே செயலிழக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் நாம் தூங்கினாலும் தூங்காவிட்டாலும் நம்மை கண்டு கொள்ளாது.

பாலூட்டி, விலங்குகள், பறவைகள், தவளை, மீன் போன்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் தூக்கம் உண்டு.

தூக்கத்தை பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கடந்த 1937ம் ஆண்டில் முதன் முதலாக ஆல்பிரெட் லூமிஸ் என்பவர் தூக்கத்தை பற்றி ஆராய்ச்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url