Search This Blog

அக்டோபர் – 4 உலக வனவிலங்குகள் தினம் (World Animal Day):


உலக விலங்கு நாள் ( World Animal Day) ஆண்டு தோறும்
அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில்,
விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான
பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு
அக்டோபர் 4 இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அநேகமான கிறித்தவத் தேவாலயங்கள் அக்டோபர் 4 இற்குக் கிட்டவாக வரும்
ஞாயிற்றுக்கிழமையில் விலங்குகளுக்கு ஆசீர்வாதம் வழங்கும் சிறப்பு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. ஆனாலும் இன்று கிறிஸ்தவர்களால் மட்டுமல்லாமல் உலகின் விலங்கு ஆர்வலர்கள் அனைவரினாலும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
விலங்குகள் சரணாலயங்கள் இந்நாளில் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url