அக்டோபர் 12 உலக ஆர்த்ரிடிஸ் தினம்:
👉 1996ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 12ஆம் தேதியை சர்வதேச மூட்டு அழற்சி நோய் தினம் (அ) உலக ஆர்த்ரிடிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
👉 இத்தினம் கீல்வாத மற்றும் தசை நோய்கள் (RMDs) பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.
👉 நோய்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை சமூக வலைதளங்களின் மூலம் பராமரிப்பாளர்களுக்கு தகவல் தெரிவிப்பது இத்தினத்தின் நோக்கமாகும்.