Search This Blog

OC என்றால் என்ன ?

OC என்றால் என்ன ?

நம்மில் யாரேனும் எல்லாவற்றையும் இலவசமாக  அனுபவித்தால் அவரை 'ஓசி' யிலேயே எல்லாவற்றையும் அனுபவிப்பவர் என்று நாம் சொல்வதுண்டு.

அது என்ன ஓசி .. ?

இந்தியா ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு அரசாங்கக் கடிதங்களும், ஆவணங்களும் மற்ற கோப்புகளும் தபால் மூலமாக கடல்வழியாக அனுப்பப்பட்டு வந்தன.

இதில், ஒவ்வொரு கடிதத்திலும் அஞ்சல் தலைகளை கடிதங்களின் எடைக்கேற்ப மதிப்பீடு செய்யப்பட்டு ஒட்டப்பட்டது.

இங்கே இருக்கும் ஆங்கிலேய அரசிடமிருந்து இங்கிலாந்தில் இருக்கும் தலைமை அரசாங்கத்திற்கு அனுப்பப்படும் கடிதங்களுக்கு எதற்காக வீண்செலவு என்று யோசித்த பிரித்தானிய அரசு புதிய நடைமுறையைக் கொண்டுவந்தது .

அதாவது, அரசாங்கம் சம்பந்தப்பட்ட கடிதப் போக்குவரத்துகளில் தபால்தலைகளை ஒட்டி வீண் செலவு ஏற்படுத்துவதற்கு பதிலாக, அக்கடிதங்களில் O.C.S (On Company Service) என்று அச்சிடுவது என முடிவு செய்து அதன்படியே செயல்படுத்தப்பட்டது.

அதாவது, O.C.S  என்றால், பணம் செலவு செய்யாமல் கடிதங்களை அனுப்புதல் என்று பின்னாளில் நம்மக்களுக்குத் தெரிந்தது.

இதனைத் தொடர்ந்து O.C.S என்ற வார்த்தை மக்களிடையே பிரபலமடைந்தது.

அதன்பிறகு O.C.S என்ற இந்த வார்த்தை, எல்லா கட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டது.

பின்னாளில் O.C.S என்ற வார்த்தை மருவி O.C என்று சுருங்கியது.

அதன்பிறகு, எவரேனும் இலவசமாக பணமேதும் கொடுக்காமல் பொருட்களை வாங்கினால், அவரை O.C என்று அழைக்கும் பழக்கம் மக்களிடையே
ஏற்பட்டது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url