மே 20 உலக அளவியல் தினம் (World Metrology Day):
நாம் இவ்வுலகில்
காணக்கூடிய மற்றும் பயன்படுத்தக்கூடிய அனைத்துமே நிறை மீட்டர் அடி கொள்ளளவு என்று
அளவியல் சார்ந்து உள்ளன. எனவே அளவியலின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதற்காக
ஒவ்வொரு ஆண்டும் மே 20 ஆம் தேதி உலக
அளவியல் தினம் கொண்டாடப்படுகிறது.
முதன்முதலாக 1875ஆம் ஆண்டு 17 நாடுகள் ஒன்று சேர்ந்து உலகில் உள்ள அனைத்து
நாடுகளும் ஒரே அளவினை பயன்படுத்த சர்வதேச அளவியலை உருவாக்கினர். இதன்மூலமாக
வெவ்வேறிடத்தில் உற்பத்தியாகும் பொருட்களை ஒன்றிணைக்க சர்வதேச அளவியல்
பயன்படுகிறது.