மே 19 உலக குடும்ப மருத்துவர் தினம் (World Family Doctor Day):
ஒவ்வொரு ஆண்டும்
மே 19-ஆம் தேதி உலக குடும்ப
மருத்துவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பராமரிப்பு
அமைப்புகளுக்குக் குடும்ப மருத்துவர்கள் வழங்கி வரும் பங்கையும் சேவையையும் முதன்மைப்
படுத்த தேசிய கல்லூரிகள் கழகங்களின் உலக அமைப்பு (உலகக் குடும்ப மருத்துவர்
அமைப்பு – WONCA) 2010-ல் முதன் முதலாக
இந்நாளை அறிவித்தது.
அனைத்து
நோயாளிகளுக்கும் தனிப்பட்ட, விரிவான மற்றும்
தொடர் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதில் மருத்துவர்களுக்கு இருக்கும் திறனின்
மையப் பங்கை அங்கீகரிக்க இந்நாள் ஓர் அற்புதமான வாய்ப்பாகும். குடும்ப
மருத்துவத்தில் அடைந்துள்ள முன்னேற்றத்தையும் உலகம் முழுவதும் குடும்ப
மருத்துவர்கள் வழங்கி வரும் சிறப்பான சேவையையும் கொண்டாட இது மேலும் ஒரு வாய்ப்பு
எனலாம்.
இந்நாளைக்
கொண்டாடுவதின் நோக்கம்:
உலக அளவில்
குடும்ப மருத்துவர்களின் பணியைக் கவனத்தில் கொண்டு வருவது. குடும்ப
மருத்துவர்களை அங்கீகரிப்பது.
குடும்ப
மருத்துவர்களின் மனத்திண்மையை வலிமைப்படுத்துவது.
குடும்ப
மருத்துவர்களோடு தொடர்புடைய முக்கியப் பிரச்சினைகளையும், உலகம் முழுவதும் சுகாதாரப்
பராமரிப்பாளர்களுக்கு ஆதரவாக அவர்கள் பணியாற்றுவதையும் முக்கியத்துவத்துக்குக்
கொண்டுவருதல்.