Search This Blog

நவம்பர் 21- உலகத் தொலைக்காட்சி நாள் ( World Television Day) :

நவம்பர் 21- உலகத் தொலைக்காட்சி நாள் ( World Television Day) :

உலகெங்கும் ஆண்டுதோறும் நவம்பர் 21 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 21, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத்
தொலைகாட்சிக் கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21 ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது.
இக்கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் கூடிய முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது.
உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது.
இதன்படி முதல் தொலைக்காட்சி நாள் 1997 -ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
ஐநாவின் டிசம்பர் 17 , 1996 இல் நடந்த 99வது கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 51/205 சாசனத்தில்  இது பற்றிய அறிவித்தல் வெளியிடப்பட்டது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url