நவம்பர் 21- உலக மீனவர்கள் தினம்
நவம்பர் 21- உலக மீனவர்கள் தினம்
கடலில் மீனவர்களுக்கு ஏற்படும் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் 40 நாடுகளின் மீனவப் பிரதிநிதிகள் 21.11.1997-ல் டெல்லியில் கூடி விவாதித்தனர்.
அப்போது உலகளவில் இணைந்து மீனவர் உரிமைக்குக் குரல் கொடுத்துப் போராடுவதற்காக மீன்பிடி தொழிலாளர்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினர்.
இதன்மூலம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பிரச்சனைகள், பாரம்பரிய மீனவர்களின் உரிமைகள், சுற்றுச்சு+ழல் பாதிப்பால் கடல் மாசடைந்து மீன்வளம் குன்றி மீன்பிடித் தொழில் அழிவுப் பாதையில் செல்வது உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நவம்பர் 21ஆம் தேதி உலக மீனவர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது.