செப்டம்பர் 1: உலக கடித தினம்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது.
உலக கடித தினம் என்று அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.
உலக கடித தினம் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்றைய கணிப்பொறி உலகில் கடிதம் எழுதுவது என்பது ஒரு தனிப்பட்ட அனுபவமாகும்.
எனவே அதனை கொண்டாடும் விதமாக இத்தினத்தை அறிமுகப்படுத்தினார்.