செப்டம்பர் மாதம் முதல் சனிக்கிழமை: சர்வதேச கழுகுகள் விழிப்புணர்வு தினம்:
உலகளவில் மொத்தம் 23 வகை கழுகுகள் உள்ளன. இந்தியாவில் 9 வகை கழுகுகள் உள்ளன. இக்கழுகு இனங்கள் உலகளவில் விரைவாக அழிந்து வருகின்றன. டைகுளோபினாக் மருந்தை சாப்பிட்ட கால்நடைகள் இறந்த பின்பும் அதன் உடலில் இந்த மருந்து தங்கிவிடும். இந்த கால்நடைகளை சாப்பிடும் கழுகுகள் இறந்துவிடுகின்றன.
கடந்த 1995ம் ஆண்டு வரை, இவ்வகை கழுகுகள் 15 ஆயிரம் இருந்தன. தனது வசிப்பிடத்திலிருந்து 100 கி.மீ., சுற்றளவுக்கு பறந்து சென்று, இரை தேடும் பழக்கமுடைய இவை, தற்போது 200க்கும் குறைவான எண்ணிக்கையில் தான் உள்ளன. இவ்வினத்தை காப்பாற்ற, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இத்தினம் (2ம் தேதி) அன்று கடைபிடிக்கப்படுகிறது.