ஜூன் – 12 - உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் (World Day Against Child Labour):
உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் 2002ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர். சட்டங்கள் இருந்தாலும் இதனை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான குழந்தைகள் மிகவும் ஆபத்தான வேலைகளை செய்து வருகின்றனர்.
குழந்தைத் தொழிலாளர்களை அதிகம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.