🎀 ஐ.நா சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ஆம் தேதி உலக இரத்ததான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஏ, பி, ஓ ரத்த வகையை கண்டறிந்த கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் பிறந்த நாளையும், இரத்தம் தானம் வழங்குபவர்களை கௌரவிக்கவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக இரத்த வழங்குநர் நாளாக கொண்டாடிவருகிறது.
2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள், ஏபிஓ இரத்த குழு அமைப்பைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும்.
இரத்தத்தில் உள்ள வகைகளை முதன்முதலில் கார்ல் லான்ட்ஸ்டைனர் என்பவர் 1901ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.
இதன்மூலம் மனித இரத்தத்தை மற்றொருவருக்கு செலுத்துவது சாத்தியமானது.
இரத்த தானம் செய்வதன்மூலம் பலரின் உயிர்கள் காப்பாற்றப்படுகிறது.
இரத்தத்தை பணம் பெறாமல் தானம் வழங்குபவர்கள் உள்ளனர்.
அவர்களை கௌரவிக்கவே உலக இரத்தக் கொடையாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment