Vijay Maths

முக்கிய தினங்கள், TNPSC,TNTET Study Material, பொது தகவல்கள், சுவாரஸ்யமான தகவல்கள்

Breaking

Jun 9, 2017

ஜூன் 07- உலக பூச்சிகள் தினம் :

உலக பூச்சிகள் தினம் ஜூன் 07,
விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இந்தியா உட்பட பல நாடுகள் தீவிரம்
கொசுக்கள் உட்பட பற்பல பூச்சிகளால் உண்டாகும் நோய்களை எதிர்கொள்ள இந்தியா உள்ளடங்கிய பல நாட்டு வர்த்தக அமைப்புகள் இணைந்துள்ளன.

ஜூன் 07, 2017,
பெய்ஜிங்
உலகில் முதல் முறையாக பெய்ஜிங்கில் நடைபெற்ற மாநாட்டில் உலகின் பல நாடுகள் பங்கேற்றன.

இந்தியாவின் சார்பில் உலக பூச்சிகள் தினத்தில் பங்கேற்ற இந்திய பூச்சிகள் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் ராஜூ பாருலேகர் கூறும் போது, “ இதற்கு முன்னர் நடந்த பல மாநாடுகளின் தொடர்ச்சியாக முதல் முறையாக இக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்திய அமைப்பு உலகாளவிய இம்முயற்சியை ஆதரிக்கிறது. முக்கிய காராணம் நாம், மலேரியா, டெங்கு மற்றும் சிக்குங்குனியா போன்ற நோய்களால் பாதிக்கிறது என்பதேயாகும்” என்றார்.

பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலம் இந்நாளை உலகம் முழுதும் அனுசரிக்க அர்ப்பணிக்கப்பட்ட தினமாக இருக்கும் என்றும் பாருலேகர் கூறினார்.

“இம்முயற்சியின் மூலமாக நோய்களை கட்டுப்படுத்தும் யோசனைகளையும், வழிகளையும் பரிமாறிக் கொள்ளவும் வசதி கிட்டும்” என்றார் அவர்.

சீன பூச்சி கட்டுப்பாடு அமைப்பினால் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி விழுப்புணர்ச்சியை உருவாக்கவும், பொது உடல் நலத்தை அறிவியல் மூலமும், தொழில்முறை பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள் மூலமும் பராமரிக்கவும் முனையும் என்று சீன அரசு ஊடகம் கூறியது.

உலகம் முழுதும் 30 நாடுகள் இம்முயற்சியில் இணைந்துள்ளன. சீன அமைப்பின் தலைவர் ஜியாங்குவோ சமீபகாலங்களில் பூச்சிகளாலும், எலி போன்ற ஊர்வனவற்றால் ஏற்படும் நோய்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தினத்தை அனுசரிப்பது பொருத்தமானது என்றார்.

உலகம் முழுதும் புவி வெப்பமடைதல், நகர்மயமாதல் மற்றும் வர்த்தகம் மற்றும் சுற்றுலா போன்றவை இந்நோய்கள் அதிகரிக்க காரணங்களாக இருந்து வருகின்றன என்றார் ஜியாங்குவோ.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையொன்று நோய்களினால் உலகம் முழுதும் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுகையில், ஒரு மில்லியன் மக்கள் பலியாகின்றனர் என்கிறது.

தொற்று நோய்களினால் ஏற்படும் மொத்தச் செலவில் 17 சதவீதத்திற்கும் அதிகமாக இந்த நோய்களினால் ஏற்படும் செலவு இருக்கிறது.

இந்திய அமைப்பு அனைத்து கண்டங்களிலும் உள்ள அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் என்கிறார் அதன் தலைவர்.

டெல்லியில் இந்நாளை அனுசரித்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அடுத்த வருடத்திலிருந்து இந்த நாள் வழக்கமாக அனுசரிக்கப்படும் நாளாக உருவாகும் என்றும், உலகம் முழுவதும் அது அவ்வாறு அனுசரிக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் பாருலேகர்.

No comments:

Post a Comment

CATEGORIES

அன்பு அறிந்து கொள்வோம் அறிவோம் அறிவோம் அறிவியல் அறிவோம் கணிதம் அறிவோம் தமிழ் ஆன்மீகம் இன்று பிறந்தவர் இன்று பிறந்தவர்கள் இயற்கை மருத்துவம் இலக்கியம் உங்களுக்குத் தெரியுமா? உடல்நலம் ஏன்? எதற்கு? எப்படி? கணித மேதைகள் கண்டுபிடிப்பாளர்கள் கண்டுபிடிப்பு கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கலைச்சொல் கல்வி உளவியல் காரணம் அறிவோம் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் கொரோனா கோவில் சந்திர கிரகணம் சுவாரசியமான தகவல்கள் சூரிய கிரகணம் சொல்லும் பொருளும் ஜனவரி ஜோதிடம் டி.என்.பி.எஸ்.சி டெட் தமிழர் இசைக்கருவிகள் தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கணம் தமிழ் எண்ணுறு திராவிட மொழிக் குடும்பம் திருக்குறள் திருவிழா திரைப்படம் தெரிந்துகொள்வோம் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நலத்திட்டங்கள் நாளைந்து கேள்விகள் நீதிக் கதைகள் நூலகம் பற்றிய செய்திகள் TNPSC நெல் நோபல் பரிசு பள்ளிப்பாடப்புத்தகம் பழமொழிகள் பாடல் வரிகள் பாரதியார் பிரித்தெழுதுக பிறந்தநாள் புவிசார் குறியீடு பூக்கள் பொங்கல் விழா பொது அறிவியல் பொது அறிவு பொதுத்தமிழ் மகாகவி பாரதியாரின் அரிய புகைப்படங்கள் மரம் மரம் தகவல்கள் முக்கிய ஆண்டுகள் முக்கிய தினங்கள் முதன் முதலில் முதல் தமிழ்க் கணினி முதல் பெண்மணி யார் இவர் ராஜராஜ சோழர் ராயப்பனூர் வரலாறு வரலாற்றில் இன்று வாழ்க்கை வாழ்வியல் சிந்தனை விருதுகள் விருந்தோம்பல் விவசாயம்