சனவரி

சனவரி 1: கியூபா (1899), எயிட்டி (1804), சூடான் (1956) விடுதலை நாள்

* 1883 - இலங்கையின் தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
* 1901 - பிரித்தானியக் குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா, தாஸ்மானியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஆஸ்திரேலிய பொதுநலவாயம் என்ற ஒரே நாடாக இணைந்தன.
* 1958 - இலங்கையில் வாகன இலக்கத்தகடுகளில் சிங்கள மொழியில் ஸ்ரீ எழுத்து கட்டாயமாக்கப்பட்டது.
* 1959 - பிடெல் காஸ்ட்ரோ (படம்) ஹவானாவைக் கைப்பற்றி கியூபாவில் கம்யூனிச ஆட்சியை நிறுவினார்.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 31 – டிசம்பர் 30 – டிசம்பர் 29
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Luna 1.jpg

சனவரி 2:

* 1757 - கல்கத்தாவை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியது.
* 1876 - தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இறப்பு.
* 1959 - சோவியத் ஒன்றியம் லூனா 1 (படம்) என்ற உலகின் முதலாவது செயற்கைச் செய்மதியை விண்ணுக்கு ஏவியது.
* 1993 - யாழ்ப்பாணம், கிளாலி நீரேரியில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: சனவரி 1 – டிசம்பர் 31 – டிசம்பர் 30
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Marthandan.jpg

சனவரி 3:

* 1740 - ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட கட்டபொம்மன் பிறப்பு.
* 1754 - அம்பலப்புழாவில் நடைபெற்ற சண்டையில் கொச்சி மற்றும் நாடிழந்த ஏனைய அரசர்களினது கூட்டுப்படைகளை திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் (படம்) முறியடித்தார்.
* 1833 - போக்லாந்து தீவுகளை பிரித்தானியா கைப்பற்றியது.
* 1888 - 91 சமீ முறிவுத் தொலைநோக்கி முதன்முறையாக கலிபோர்னியாவில் உபயோகிக்கப்பட்டது. இதுவே அந்நேரத்தில் உலகின் மிகப் பெரும் தொலைநோக்கி ஆகும்.
* 1974 - யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆரம்பமானது.

அண்மைய நாட்கள்: சனவரி 2 – சனவரி 1 – டிசம்பர் 31
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
NASA Mars Rover.jpg

ஜனவரி 4: பர்மா - விடுதலை நாள் (1948)

* 1912 - பிரித்தானியக் காலனித்துவ நாடுகளில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
* 1958 - முதலாவது செயற்கைக் கோள் ஸ்புட்னிக் 1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்தது.
* 2004 - ஸ்பிரிட் (படம்) என்ற நாசாவின் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கியது.

அண்மைய நாட்கள்: ஜனவரி 3 – ஜனவரி 2 – ஜனவரி 1
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Kumarponnambalam.jpg

ஜனவரி 5:

* 1896 - வில்ஹெம் ரொண்ட்ஜென் ஒரு வகைக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததாக ஆஸ்திரியப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது எக்ஸ் கதிர் எனப் பின்னர் பெயரிடப்பட்டது.
* 1902 - ரா. கிருஷ்ணசாமி நாயுடு தமிழக அரசியல்வாதி பிறப்பு
* 1971 - முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்பேர்ணில் நடைபெற்றது.
* 2000 - இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர் குமார் பொன்னம்பலம் (படம்) கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.
* 2005 - ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சிக் குழுவினர் சூரியக் குடும்பத்தில் ஏரிஸ் என்ற புதிய குறுங்கோள் ஒன்றைக் கண்டுபிடித்தனர்.

அண்மைய நாட்கள்: ஜனவரி 4 – ஜனவரி 3 – ஜனவரி 2
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Maria Montessori.jpg

ஜனவரி 6:

* 1907 - மரியா மொன்ட்டிசோரி (படம்) தனது முதலாவது பாடசாலையை தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ரோமில் ஆரம்பித்தார்.
* 1929 - அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவைச் சென்றடைந்தார்.
* 1936 - ருக்மிணிதேவி அருண்டேல் சென்னை அடையாறில் கலாசேத்திரா கலைக்கூடத்தை ஆரம்பித்தார்.
* 1997 - ஈழத் தமிழ் எழுத்தாளர் பிரமீள் இறப்பு.


அண்மைய நாட்கள்: ஜனவரி 5 – ஜனவரி 4 – ஜனவரி 3
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Jupiter.moons2.jpg

ஜனவரி 7:

* 1610 - இத்தாலிய வானியலாளர் கலிலியோ கலிலி, வியாழனின் நான்கு நிலாக்களைக் (படம்) கண்டறிந்தார்.
* 1841 - உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கில இருமொழிப் பத்திரிகையாக ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த முதலாவது பத்திரிகை இதுவாகும்.
* 1927 - அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது.
* 1979 - வியட்நாமியப் படைகளிடம் கம்போடியாவின் தலைநகர் புனோம் பென் வீழ்ந்தது. பொல் பொட்டும் அவனது கெமர் ரூச் படைகளும் பின்வாங்கினர்.

அண்மைய நாட்கள்: ஜனவரி 6 – ஜனவரி 5 – ஜனவரி 4
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Caldwell close1.jpg

ஜனவரி 8:

* 1782 - திருகோணமலை கோட்டையை பிரித்தானியர் கைப்பற்றினர்.
* 1838 - ராபர்ட் கால்டுவெல் (படம்) மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார்.
* 1916 - முதலாம் உலகப் போர்: கூட்டுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியில் இருந்து வெளியேறின.
* 1941 - சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த பேடன் பவல் இறப்பு.

அண்மைய நாட்கள்: ஜனவரி 7 – ஜனவரி 6 – ஜனவரி 5
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Ponnambalam arunachalam.jpg

ஜனவரி 9: பனாமா - மாவீரர் நாள்

* 1916 - முதலாம் உலகப் போர்: ஒட்டோமான்களின் வெற்றியுடன் கலிப்பொலி நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
* 1921 - புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.
* 1924 - இலங்கையின் தேசியத் தலைவர் சேர் பொன்னம்பலம் அருணாசலம் (படம்) இறப்பு.
* 1964 - பனாமா கால்வாயில் பனாமாவின் தேசியக்கொடியை இளைஞர்கள் ஏற்ற முயன்ற பின்னர் அமெரிக்கப் படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது. 21 பொதுமக்களும் 4 படையினரும் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: ஜனவரி 8 – ஜனவரி 7 – ஜனவரி 6
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Jaffnatamilconf1974.jpg

ஜனவரி 10:

* 1761 - தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்த ரங்கம் பிள்ளை இறப்பு.
* 1863 - உலகின் மிகப் பழமையான சுரங்க தொடருந்து பாதை லண்டனில் திறக்கப்பட்டது.
* 1946 - லண்டனில் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் முதலாவது பொதுச்சபைக் கூட்டத்தில் 51 நாடுகள் பங்குபற்றின.
* 1974 - யாழ்ப்பாணத்தில் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர் (நினைவுச்சின்னம் படத்தில்).

அண்மைய நாட்கள்: ஜனவரி 9 – ஜனவரி 8 – ஜனவரி 7
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Tirupurkumaran.jpg

ஜனவரி 11: அல்பேனியா - குடியரசு நாள் (1946)

* 1787 - யுரேனஸ் கோளின் இரண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
* 1932 - இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி திருப்பூர் குமரன் (படம்) இறப்பு.
* 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கோலாலம்பூரைக் கைப்பற்றியது.
* 1972 - கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அண்மைய நாட்கள்: ஜனவரி 10 – ஜனவரி 9 – ஜனவரி 8
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Mgrshotat.jpg

ஜனவரி 12: இந்தியா - தேசிய இளைஞர் நாள்

* 1863 - சுவாமி விவேகானந்தர் பிறப்பு.
* 1964 - புரட்சிவாதிகள் சன்சிபார் புரட்சியை முன்னெடுத்து அதனைக் குடியரசாக அறிவித்தனர்.
* 1967 - நடிகர் எம். ஆர். ராதா, எம். ஜி. ராமச்சந்திரனை துப்பாக்கியால் சுட்டுப் படுகாயப்படுத்தினார் (படம்).
* 2006 - சவுதி அரேபியாவில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 44 இந்தியர்கள் உட்பட 362 பேர் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: ஜனவரி 11 – ஜனவரி 10 – ஜனவரி 9
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Ganymede g1 true.jpg

ஜனவரி 13:

* 1610 - கலிலியோ கலிலி வியாழனின் 4வது துணைக்கோளைக் (படம்) கண்டுபிடித்தார்.
* 1915 - இத்தாலியின் அவசானோவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 29,800 பேர் கொல்லப்பட்டனர்.
* 1964 - கல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
* 1991 - சோவியத் படைவீரர்கள் லித்துவேனியாவில் சோவியத் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பொதுமக்களைத் தாக்கி 14 பேரைக் கொன்றனர்.

அண்மைய நாட்கள்: ஜனவரி 12 – ஜனவரி 11 – ஜனவரி 10
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
MiG-17 landing by StuSeeger.jpeg

ஜனவரி 14:

* 1690 - கிளாரினெட் இசைக்கருவி ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டது.
* 1761 - இந்தியாவில் பானிப்பட் நகரில் மூன்றாம் கட்டப் போர் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
* 1950 - சோவியத் ஒன்றியத்தின் மிக்-17 (படம்) போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது.
* 2005 - சனிக் கோளின் டைட்டான் என்ற நிலாவில் ஐரோப்பாவின் இயூஜென் விண்கலம் இறங்கியது.

அண்மைய நாட்கள்: ஜனவரி 13 – ஜனவரி 12 – ஜனவரி 11
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Rosa Luxemburg.jpg

சனவரி 15: யோன் சிலம்புவே நாள் (மலாவி)

* 1919 - செருமனியின் மார்க்சியவாதியான ரோசா லக்சம்பேர்க் (படம்) துணை இராணுவக்குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
* 1943 - பரப்பளவு அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றான ஐக்கிய அமெரிக்காவின் இராணுவத் தலைமையகம் பென்டகன் திறந்து வைக்கப்பட்டது.
* 1981 - தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் இறப்பு.
* 2001 - விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.

அண்மைய நாட்கள்: சனவரி 14 – சனவரி 13 – சனவரி 12
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
JosephVaz.jpg

ஜனவரி 16: தாய்லாந்து - ஆசிரியர் நாள்

* 1711 - கோவாவில் பிறந்து இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த யோசப் வாஸ் அடிகள் (படம்) கண்டியில் இறந்தார்.
* 1761 - பிரித்தானியர் பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்.
* 1993 - விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 விடுதலைப் புலிகள் வெளிநாடொன்றில் இருந்து இலங்கை திரும்புகையில் சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து இறந்தனர்.
* 2008 - 2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு அதிகாரபூர்வமாக விலகியது.

அண்மைய நாட்கள்: ஜனவரி 15 – ஜனவரி 14 – ஜனவரி 13
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
100x100px

சனவரி 17:

* 1917 - தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ம. கோ. இராமச்சந்திரன் (படம்) பிறப்பு.
* 1917 - கன்னித் தீவுகளை டென்மார்க் ஐக்கிய அமெரிக்காவுக்கு $25 மில்லியனுக்கு விற்றது.
* 1961 - கொங்கோ சனநாயகக் குடியரசின் பிரதமர் பத்திரிசு லுமும்பா இராணுவப் புரட்சியின் பின் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
* 1995 - ஜப்பானின் கோபே அருகில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 6,433 பேர் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: சனவரி 16 – சனவரி 15 – சனவரி 14
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Jeevanandham.jpg

ஜனவரி 18:

* 1788 - இங்கிலாந்தில் இருந்து 736 கைதிகளைக் கொண்ட முதலாவது தொகுதி ஆஸ்திரேலியாவின் பொட்டனி விரிகுடாவைச் சென்றடைந்தது.
* 1896 - எக்ஸ்றே இயந்திரம் முதற் தடவையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.
* 1944 - இரண்டாம் உலகப் போர்: மூன்று ஆண்டுகளாக நாசிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த லெனின்கிராட் நகரை சோவியத் படைகள் மீட்டெடுத்தன.
* 1963 - தமிழகப் பொதுவுடமைவாதி ப. ஜீவானந்தம் (படம்) இறப்பு.

அண்மைய நாட்கள்: ஜனவரி 17 – ஜனவரி 16 – ஜனவரி 15
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
ஓஷோ.jpg

ஜனவரி 19:

* 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் பர்மாவை முற்றுகையிட்டனர்.
* 1966 - இந்திரா காந்தி இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 1990 - இந்திய ஆன்மிகவாதி ஓஷோ (படம்) இறப்பு.
* 2006 - நாசாவின் புளூட்டோவை நோக்கிய முதலாவது விண்கலமான நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவி ஏவப்பட்டது.

அண்மைய நாட்கள்: ஜனவரி 18 – ஜனவரி 17 – ஜனவரி 16
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Bio Pic Of PeriasamyThooran.jpg

ஜனவரி 20:

* 1981 - ரொனால்ட் ரேகன் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி 20 நிமிடங்களில் ஈரான் தான் 444 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த 52 அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுவித்தது.
* 1987 - கருநாடக இசை அறிஞர் பெரியசாமி தூரன் (படம்) மறைவு.
* 1990 - அசர்பைஜானிய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
* 1991 - சூடான் அரசு நாடெங்கும் இஸ்லாமியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதில் நாட்டின் வடக்குப் பகுதி முஸ்லிம்களுக்கும் தெற்கில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது.

அண்மைய நாட்கள்: ஜனவரி 19 – ஜனவரி 18 – ஜனவரி 17
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Lenin 1920.jpg

ஜனவரி 21:

* 1793 - பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக மக்கள் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.
* 1924 - மார்க்சியப் புரட்சியாளர் விளாடிமிர் லெனின் (படம்) இறப்பு.
* 2004 - நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் தளவுளவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. பூமியிலிருந்து தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.

அண்மைய நாட்கள்: ஜனவரி 20 – ஜனவரி 19 – ஜனவரி 18
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Swami Gnanapirakasar.jpg

சனவரி 22:

* 1905 - உருசியாவில் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் சார் மன்னருக்கெதிரான தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
* 1947 - ஈழத்தின் பன்மொழிப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசர் (படம்) இறப்பு.
* 1999 - இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஆத்திரேலிய கிறித்தவ மதப் போதகர் கிரகாம் ஸ்டைன்சு என்பவரும் அவரது இரு மகன்களும் இந்துத் தீவிரவாதிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: சனவரி 20 – சனவரி 21 – சனவரி 23
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Vallalar.jpg

ஜனவரி 23:

* 1556 - சீனாவின் சாங்சி மாநில நிலநடுக்கத்தில் 830,000 வரையானோர் இறந்தனர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் கொல்லப்பட்ட நிலநடுக்கம் இதுவாகும்.
* 1873 - சன்மார்க்க சிந்தனையாளர், வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் (படம்) இறப்பு.
* 1943 - இரண்டாம் உலகப் போர்: பப்புவாவில் யப்பானியப் படைகள் ஆஸ்திரேலிய, மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படைகளிடம் தோல்வியுற்றது. இது பசிபிக் போரில் யப்பானியரின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.

அண்மைய நாட்கள்: ஜனவரி 22 – ஜனவரி 21 – ஜனவரி 20
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Swami Vivekananda-1893-09-signed.jpg

ஜனவரி 24:

* 1897 - சுவாமி விவேகானந்தர் (படம்) சிக்காகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். யாழ் இந்துக் கல்லூரியில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
* 1908 - பேடன் பவல் சிறுவர் சாரணிய இயக்கத்தை ஆரம்பித்தார்.
* 1966 - ஏர் இந்தியா விமானம் ஒன்று பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் வீழ்ந்ததில் 117 பேர் கொல்லப்பட்டனர்.
* 1984 - முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது.

அண்மைய நாட்கள்: ஜனவரி 23 – ஜனவரி 22 – ஜனவரி 21
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Pulavar.JPG

ஜனவரி 25:

* 1922 - சுன்னாகம் குமாரசாமிப் புலவர் (படம்) இறப்பு.
* 1971 - உகண்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து இடி அமீன் தலைவரானார். அடுத்த எட்டாண்டுகள் இவரது கடுமையான இராணுவ ஆட்சி இடம்பெற்றது.
* 1995 - யோசப் வாஸ் அடிகளார் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
* 1998 - கண்டியில் தலதா மாளிகையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 25 பேர் படுகாயமடைந்தனர்.


அண்மைய நாட்கள்: ஜனவரி 24 – ஜனவரி 23 – ஜனவரி 22
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Arthur Phillip - Project Gutenberg eText 12992.jpg

ஜனவரி 26: ஆஸ்திரேலியா நாள், இந்தியக் குடியரசு நாள்

* 1565 - கர்நாடகா மாநிலத்தில் விஜயநகரப் பேரரசுக்கும் இஸ்லாமிய தக்காணத்து சுல்தான்களுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி கண்டது.
* 1788 - ஆர்தர் பிலிப் (படம்) தலைமையில் பிரித்தானியக் கைதிகளின் முதலாவது தொகுதியைக் கொண்ட கப்பல் சிட்னியை அடைந்து ஆஸ்திரேலியாவில் புதிய குடியேற்றத்தை ஆரம்பித்தனர்.
* 2001 - குஜராத் நிலநடுக்கத்தில் 20,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: ஜனவரி 27 – ஜனவரி 25 – ஜனவரி 24
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Entrance Auschwitz I.jpg

ஜனவரி 27:

* 1924 - விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
* 1945 - இரண்டாம் உலகப் போர்: லட்சக்கணக்கான யூதர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் (படம்) எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் படையினரால் விடுவிக்கப்பட்டனர்.
* 1967 - அப்பொலோ 1 விண்வெளி வீரர்கள் மூவர் புளோரிடாவில் உள்ள விண்வெளி மையத்தில் தமது விண்கலத்தைப் பரிசோதிக்கும் போது இடம்பெற்ற தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.
* 1973 - வியட்நாம் போரை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது.

அண்மைய நாட்கள்: ஜனவரி 26 – ஜனவரி 25 – ஜனவரி 24
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Challenger explosion.jpg

ஜனவரி 28:

* 1846 - அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி ஸ்மித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றனர்.
* 1918 - பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.
* 1986 - சாலஞ்சர் மீள்விண்கலம் (படம்) புறப்பட்ட 73ஆவது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர்.
* 1987 - மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: ஜனவரி 27 – ஜனவரி 26 – ஜனவரி 25
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
First Car Replica IAA 2007 1 crop.jpg

ஜனவரி 29:

* 1863 - ஐக்கிய அமெரிக்காவின் இடாகோ மாநிலத்தில் பெயார் ஆற்றருகில் இராணுவத்தினருக்கும் ஷோஷோன் பழங்குடிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் பல நூற்றுக்கணக்கான பழங்குடிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
* 1886 – ஜெர்மனியரான கார்ல் பென்ஸ் பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான (படம்) காப்புரிமம் பெற்றார்.
* 1944 - இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கொனியூச்சி என்ற இடத்தில் சோவியத் துணை இராணுவத்தினரால் பெண்கள், குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 38 பேர் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: ஜனவரி 30 – ஜனவரி 28 – ஜனவரி 27
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Gandhi smiling 1942.jpg

சனவரி 30: இந்தியா - தியாகிகள் நாள்

* 1945 - இரண்டாம் உலகப் போர்: பால்ட்டிக் கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற செருமனியின் பயணிகள் கப்பல் சோவியத் கடற்படையால் தாக்கப்பட்டதில் அதில் பயணம் செய்த 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
* 1948 - மகாத்மா காந்தி (படம்) இந்துத் தீவிரவாதி நாதுராம் கோட்சேயினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* 1972 - வட அயர்லாந்தில் விடுதலைப் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட 14 பேர் ஐக்கிய இராச்சியத் துணை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: சனவரி 29 – சனவரி 28 – சனவரி 31
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Ham the chimp.jpg

ஜனவரி 31: நவூரு - விடுதலை நாள் (1968)

* 1953 - வட கடல் பெருக்கெடுத்தன் விளைவாக நெதர்லாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
* 1961 - நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி (படம்) ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
* 1996 - கொழும்பு மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டு 1,400 பேர் வரை படுகாயமடைந்தனர்.

அண்மைய நாட்கள்: ஜனவரி 30 – ஜனவரி 29 – ஜனவரி 28
தொகுப்பு


Next Post Previous Post