பெப்ரவரி

பெப்ரவரி 1:

* 1946 - ஐக்கிய நாடுகள் அவையின் முதலாவது பொதுச் செயலாளராக நோர்வேயின் ட்றிகிவா லீ தெரிவு செய்யப்பட்டார்.
* 1964 - தமிழ் நாடகத்துறையின் முன்னோடி பம்மல் சம்பந்த முதலியார் இறப்பு.
* 2003 - கொலம்பியா விண்ணோடம் பூமிக்குத் திரும்புகையில் புவி வளிமண்டலத்தினுள் வெடித்துச் சிதறியதில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா (படம்) உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: ஜனவரி 31 – ஜனவரி 30 – ஜனவரி 29
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
German pows stalingrad 1943.jpg

பெப்ரவரி 2:

* 1509 - போர்த்துக்கலுக்கும் துருக்கிக்கும் இடையில் இந்தியாவின் தியூ என்ற இடத்தில் கடற்சமர் மூண்டது.
* 1943 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரின் (படம்) பின்னர் கடைசி ஜேர்மனியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன. 91,000 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.
* 1989 - ஒன்பது ஆண்டு கால முற்றுகையின் பின்னர் கடைசி ரஷ்யத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின.


அண்மைய நாட்கள்: பெப்ரவரி 1 – ஜனவரி 31 – ஜனவரி 30
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Peraringnar Anna.jpg

பெப்ரவரி 3:

* 1894 - யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
* 1966 - சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.
* 1969 - தமிழ் நாட்டின் முதலமைச்சர் சி. என். அண்ணாதுரை (படம்) இறப்பு.
* 2006 - அல் சலாம் 98 என்ற எகிப்திய பயணிகள் கப்பலொன்று செங்கடலில் 1,721 பேருடன் மூழ்கியதில் 435 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 2 – பெப்ரவரி 1 – ஜனவரி 31
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Yalta summit 1945 with Churchill, Roosevelt, Stalin.jpg

பெப்ரவரி 4: இலங்கை - விடுதலை நாள் (1948)

* 1747 - இத்தாலியத் தமிழறிஞர் வீரமாமுனிவர் இறப்பு.
* 1945 - இரண்டாம் உலகப் போர்: பிராங்கிளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சில், ஜோசப் ஸ்டாலின் ஆகிய தலைவர்கள் உக்ரேனில் யால்ட்டா மாநாட்டில் (படம்) சந்தித்தனர்.
* 1957 - திருகோணமலையில் கறுப்புக் கொடியைக் கட்ட முயன்ற திருமலை நடராசன் போலீசாரினால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.
* 1976 - குவாத்தமாலா மற்றும் ஹொண்டுராஸ் நிலநடுக்கத்தில் 22,000 பேர் கொல்லப்பட்டனர்.


அண்மைய நாட்கள்: பெப்ரவரி 3 – பெப்ரவரி 2 – பெப்ரவரி 1
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Hermitage1.JPG

பெப்ரவரி 5: பாகிஸ்தான் - காஷ்மீர் நாள்

* 1782 - ஐக்கிய அமெரிக்காவில் ஒகைய்யோ மாநிலத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 90 அமெரிக்கப் பழங்குடிகள் வெள்ளை இனத்தவரால் படுகொலை செய்யப்பட்டனர்.
* 1852 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் (படம்) பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது.
* 1971 - அப்பல்லோ 14 விண்கலம் அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 4 – பெப்ரவரி 3 – பெப்ரவரி 2
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Elizabeth II (head, young).jpg

பெப்ரவரி 6:

* 1819 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி தமது வணிகத்துக்காக சிங்கப்பூர் நகரை அமைத்தார்கள்.
* 1827 - கருநாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் இறப்பு.
* 1952 - இரண்டாம் எலிசபெத் (படம்) ஐக்கிய இராச்சியம் உட்பட 7 நாடுகளுக்கு மகாராணி ஆனார்.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 5 – பெப்ரவரி 4 – பெப்ரவரி 3
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Paavaanar.jpg

பெப்ரவரி 7: கிரனாடா - விடுதலை நாள் (1974)

* 1902 - தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் (படம்) பிறப்பு.
* 1990 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது.
* 1992 - ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
* 2005 - விடுதலைப் புலிகளின் மட்டு - அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட 4 விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 6 – பெப்ரவரி 5 – பெப்ரவரி 4
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Bose.jpg

பெப்ரவரி 8:

* 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் (படம்) ஜெர்மனியை விட்டுத் தெற்காசியா நோக்கிப் புறப்பட்டார்.
* 1956 - இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் அறிவிக்கப்பட்டது.
* 1963 - கியூபாவுடனான போக்குவரத்து, பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் ஐக்கிய அமெரிக்க மக்களுக்கு தடை செய்யப்பட்டதாக அதிபர் ஜோன் எஃப். கென்னடி அறிவித்தார்.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 7 – பெப்ரவரி 6 – பெப்ரவரி 5
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Ggponnambalam.jpg

பெப்ரவரி 9:

* 1900 - இலங்கையிலும், இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
* 1977 - அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் (படம்) இறப்பு.
* 1986 - ஹேலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அண்மையில் எட்டரைக் கோடி கிமீ தூரத்தில் வந்தது.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 8 – பெப்ரவரி 7 – பெப்ரவரி 6
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Kiprensky Pushkin.jpg

பெப்ரவரி 10:

* 1815 - கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.
* 1837 - ரஷ்ய எழுத்தாளர், கவிஞர் அலெக்சான்டர் புஷ்கின் (படம்) இறப்பு.
* 1996 - ஐபிஎம் நிறுவனத்தின் சதுரங்கக் கணினி டீப் புளூ உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 9 – பெப்ரவரி 8 – பெப்ரவரி 7
தொகுப்பு

பார் – பேச்சு – தொகு – வரலாறு
Mandelaza.jpg

பெப்ரவரி 11: ஜப்பான் - நிறுவன நாள், ஈரான் - இஸ்லாமியப் புரட்சி நாள்

* 1971 - ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் சர்வதேச நீர்ப்பரப்பில் அணுவாயுதத் தடையைக் கொண்டுவர முடிவெடுத்தன.
* 1990 - தென்னாபிரிக்கக் கருப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா (படம்) 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையானார்.
* 1996 - இலங்கை இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் திருகோணமலையில் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 10 – பெப்ரவரி 9 – பெப்ரவரி 8
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Gupope.jpg

பெப்ரவரி 12:

* 1502 - இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா போர்த்துக்கலில் இருந்து ஆரம்பித்தார்.
* 1908 - தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் ஜி. யு. போப் (படம்) இறப்பு.
* 1961 - வெனேரா 1 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 11 – பெப்ரவரி 10 – பெப்ரவரி 9
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Sadavadhani.jpg

பெப்ரவரி 13:

* 1880 - எடிசன் விளைவை தொமஸ் எடிசன் அவதானித்தார். இதுவே இருமுனையம் கண்டுபிடிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.
* 1950 - தமிழறிஞர், சதாவதானி செய்குத்தம்பி பாவலர் (படம்) இறப்பு.
* 1996 - நேபாள மக்கள் புரட்சி மாவோயிசவாத போராளிகளால் ஆரம்பிக்கப்பட்டது.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 12 – பெப்ரவரி 11 – பெப்ரவரி 10
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
GPS Satellite NASA art-iif.jpg

பெப்ரவரி 14: உலக காதலர் நாள்

* 1924 - ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.
* 1989 - ஜிபிஎஸ் (படம்) திட்டத்தின் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது.
* 1989 - ஐக்கிய அமெரிக்காவின் யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் அழிவிற்காக இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக வழங்க சம்மதித்தது.
* 1998 - கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 13 – பெப்ரவரி 12 – பெப்ரவரி 11
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
David - The Death of Socrates.jpg

பெப்ரவரி 15:

* கிமு 399 - மெய்யியலாளர் சோக்கிரட்டீஸ் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார் (படம்).
* 1898 - ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் கியூபா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்கா ஸ்பெயின் மீது போரை அறிவித்தது.
* 1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் ஜப்பானிடம் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 இந்திய, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஆஸ்திரேலியாப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 14 – பெப்ரவரி 13 – பெப்ரவரி 12
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
விஜய குமாரதுங்க.jpg

பெப்ரவரி 16:

* 1796 - ஆங்கிலேயர் கொழும்பை டச்சுக்களிடம் இருந்து கைப்பற்றினர்.
* 1959 - பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் தலைவரானார்.
* 1985 - ஹெஸ்புல்லா இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
* 1988 - சிங்களத் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்க (படம்) கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 15 – பெப்ரவரி 14 – பெப்ரவரி 13
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
250px-Phantomcomics2.jpg

பெப்ரவரி 17:

* 1867 - சூயஸ் கால்வாய் ஊடாக முதலாவது கப்பல் சென்றது.
* 1936 - சிறுவர்களுக்கான அதிமேதாவி மாயாவி (படம்) முதற்தடவையாக வரைகதைகளில் தோன்றினார்.
* 1990 - இலங்கையின் ஊடகவியலாளர் ரிச்சர்ட் டி சொய்சா கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 16 – பெப்ரவரி 15 – பெப்ரவரி 14
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
President-Jefferson-Davis.jpg

பெப்ரவரி 18: காம்பியா - விடுதலை நாள் (1965)

* 1832 - இலங்கையின் பல இடங்களில் ஓர் அசாதாரண எரிமீன் தோன்றியது.
* 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் (படம்) அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் முதலாவதும் கடைசியுமான தலைவராகத் தெரிவானார்.
* 1911 - முதலாவது அதிகாரபூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவில் அலகாபாத்தில் ஆரம்பமானது.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 17 – பெப்ரவரி 16 – பெப்ரவரி 15
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Mir on 24 September 1996.jpg

பெப்ரவரி 19:

* 1942 - இரண்டாம் உலகப் போர்: 253 ஜப்பானியப் போர் விமானங்கள் ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் மீது குண்டுகளை வீசியதில் 243 பேர் கொல்லப்பட்டனர்.
* 1986 – விண்வெளியில் முதலாவது நீண்ட கால விண்நிலையம் மீர் (படம்) சோவிய ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
* 1986 - அம்பாறை உடும்பன்குளம் படுகொலை: அம்பாறையின் உடும்பன்குளத்தில் 60 விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 18 – பெப்ரவரி 17 – பெப்ரவரி 16
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
GPN-2000-001979.jpg

பெப்ரவரி 20:

* 1627 - யாழ்ப்பாணத்தைத் தாக்கிய பெரும் சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.
* 1896 - ஈழத்தின் தமிழறிஞர், புலவர் ஆணல்ட் சதாசிவம்பிள்ளை இறப்பு.
* 1965 - அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 (படம்) விண்கலம் சந்திரனுடன் மோதியது.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 19 – பெப்ரவரி 18 – பெப்ரவரி 17
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Trevithick1803Locomotive.jpg

பெப்ரவரி 21: அனைத்துலக தாய்மொழி நாள்.

* 1804 - நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து (மாதிரி படம்) இயந்திரம் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டது.
* 1848 - கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தமது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர்.
* 1960 - பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அனைத்து வியாபார நிறுவனங்களையும் அரசுடமையாக்கினார்.
* 1972 - சோவியத்தின் லூனா 20 சந்திரனில் இறங்கியது.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 20 – பெப்ரவரி 19 – பெப்ரவரி 18
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
ஹுமாயூன்.jpg

பெப்ரவரி 22: சென் லூசியா - விடுதலை நாள் (1979), புனித பேதுரு திருவிழா

* 1556 - இரண்டாவது முகலாயப் பேரரசன் ஹுமாயூன் (படம்) இறப்பு.
* 1658 - டச்சுக்காரரினால் மன்னார் கைப்பற்றப்பட்டது.
* 1862 - அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவராக ஜெபர்சன் டேவிஸ் அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 1943 - ஜெர்மனியில் வெள்ளை ரோசா இயக்க உறுப்பினர்கள் நாசிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 21 – பெப்ரவரி 20 – பெப்ரவரி 19
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Kustodiyev bolshevik.JPG

பெப்ரவரி 23: புரூணை - விடுதலை நாள் (1984), கயானா - குடியரசு நாள் (1970)

* 1917 - சென் பீட்டர்ஸ்பேர்க்கில் முதலாவது மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதன் மூலம் ரஷ்யப் புரட்சி (படம்) ஆரம்பமானது.
* 1903 - கியூபா குவாண்டானமோ விரிகுடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு முடிவற்ற குத்தகைக்குக் கொடுத்தது.
* 1997 - ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 22 – பெப்ரவரி 21 – பெப்ரவரி 20
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Rukmini Devi.jpg

பெப்ரவரி 24: எஸ்தோனியா - விடுதலை நாள் (1918)

* 1582 - கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் 13வது கிரெகரியினால் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
* 1969 - மரைனர் 6 விண்கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்பட்டது.
* 1986 - கலாசேத்திரா நடனப் பள்ளியை நிறுவிய நடனக் கலைஞர் ருக்மிணி தேவி அருண்டேல் (படம்) இறப்பு.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 23 – பெப்ரவரி 22 – பெப்ரவரி 21
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Ph pres marcos.jpg

பெப்ரவரி 25: குவெய்த் - தேசிய நாள், பிலிப்பீன்ஸ் - மக்கள் எழுச்சி நாள்

* 1986 - பிலிப்பீன்சில் மக்கள் புரட்சியைத் தொடர்ந்து அதிபர் பேர்டினண்ட் மார்க்கோஸ் (படம்) ஆட்சியைக் கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
* 1956 - சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக்கால நிர்வாகத்தைக் கண்டனம் செய்தார்.
* 1992 - அசர்பைஜானில் ஆர்மேனிய இராணுவத்தினர் 613 குடிமக்களைப் படுகொலை செய்தனர்.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 24 – பெப்ரவரி 23 – பெப்ரவரி 22
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Napoleon crop.jpg

பெப்ரவரி 26: குவெய்த் - விடுதலை நாள்

* 1815 - இத்தாலியின் எல்பாத் தீவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட் (படம்) அங்கிருந்து தப்பினான்.
* 1952 - ஐக்கிய இராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுக்குண்டு உள்ளதாக அறிவித்தார்.
* 2001 - ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை அழித்தது.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 25 – பெப்ரவரி 24 – பெப்ரவரி 23
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Reichstagsbrand.jpg

பெப்ரவரி 27: டொமினிக்கன் குடியரசு - தேசிய நாள்

* 1933 - பெர்லினில் ஜேர்மனியின் நாடாளுமன்றம் ரெய்க்ஸ்டாக் (படம்) தீ வைத்து எரிக்கப்பட்டது.
* 1951 - ஐக்கிய அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதவாறு அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.
* 2002 - குஜராத் வன்முறை 2002: அயோத்தியாவில் இருந்து தொடருந்தில் திரும்பிக்கொண்டிருந்த 59 இந்துப் பயணிகள் கோத்ரா புகையிரத நிலையத்தில் வைத்து முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் நடந்த கலவரத்தில் முஸ்லிம்கள் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 26 – பெப்ரவரி 25 – பெப்ரவரி 24
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
DNAhelixSpaceFilling.jpg

பெப்ரவரி 28: இந்தியா - தேசிய அறிவியல் நாள்

* 1947 - தாய்வானில் அரசுக்கெதிராக இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டம் முறியடிக்கப்பட்டது. 30,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
* 1953 - ஜேம்ஸ் வாட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்ஏயின் வேதியியல் அமைப்பைக் (படம்) கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
* 2007 - புளூட்டோவை நோக்கி நாசாவினால் ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் வியாழனை அண்மித்தது.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 27 – பெப்ரவரி 26 – பெப்ரவரி 25
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு

பெப்ரவரி 29:

* 1704 - பிரெஞ்சுப் படைகளும் ஐக்கிய அமெரிக்காவின் பழங்குடி இந்தியர்களும் இணைந்து மசாசுசெட்ஸ் இல் டியர்ஃபீல்ட் என்ற இடத்தில் ஆங்கிலக் குடியேறிகளைத் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர்கள் கொல்லப்பட்டனர்.
* 1944 - இரண்டாம் உலகப் போர்: ஆட்மிரால்ட்டி தீவுகள் ஐக்கிய அமெரிக்காவினால் முற்றுகைக்குள்ளாகியது.
* 1960 - மொரோக்கோவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: பெப்ரவரி 28 – பெப்ரவரி 27 – பெப்ரவரி 26
தொகுப்பு


Next Post Previous Post