மார்ச்
மார்ச் 1: பொசுனியா எர்செகோவினா - விடுதலை நாள் (1992)
* 1896 - ஹென்றி பெக்கெரல் (படம்) கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.
* 1966 - சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வீனஸ் கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
* 1981 - ஐரியக் குடியரசு இராணுவ உறுப்பினர் பொபி சான்ட்ஸ் வட அயர்லாந்து சிறையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
அண்மைய நாட்கள்: பெப்ரவரி 28 – பெப்ரவரி 27 – பெப்ரவரி 26
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Sri Vikrama Rajasinha.jpg
மார்ச் 2:
* 1815 - கண்டி இராச்சியம் பிரித்தானியர் வசமாகியது. சிறைப் பிடிக்கப்பட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (படம்) என்ற கண்ணுச்சாமி தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டார்.
* 1930 - மகாத்மா காந்தி உப்பு அறப்போராட்டம் (சத்தியாக்கிரகம்) தொடங்குவதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை தொடங்கினார்.
* 1949 - இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை, கவிக்குயில் சரோஜினி நாயுடு இறந்தார்.
அண்மைய நாட்கள்: மார்ச் 1 – பெப்ரவரி 28 – பெப்ரவரி 27
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Sirithiran.jpg
மார்ச் 3: பல்கேரியா - விடுதலை நாள் (1878)
* 1833 - அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார்.
* 1943 - இரண்டாம் உலகப் போர்: லண்டனில் விமானக் குண்டுத்தாக்குதலின் போது சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஒதுங்கிய 173 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.
* 1996 - சிரித்திரன் இதழாசிரியர் சி. சிவஞானசுந்தரம் (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: மார்ச் 2 – மார்ச் 1 – பெப்ரவரி 28
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Pioneer 10 Construction.jpg
மார்ச் 4:
* 1899 - குயீன்ஸ்லாந்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் 300 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
* 1931 - இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பைக் கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
* 2006 - பயனியர் 10 (படம்) விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.
அண்மைய நாட்கள்: மார்ச் 3 – மார்ச் 2 – மார்ச் 1
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Joseph Stalin.jpg
மார்ச் 5:
* 1770 - பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் நிகழ்ந்த கலவரத்தை அடுத்து ஐந்து அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
* 1940 - சோவியத் உயர்பீடம் 40,100 போலந்துப் மக்களுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது.
* 1953 - சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: மார்ச் 4 – மார்ச் 3 – மார்ச் 2
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Medeleeff by repin.jpg
மார்ச் 6: கானா - விடுதலை நாள் (1957)
* 1869 - ரஷ்ய வேதியியலாளர் திமீத்ரி மென்டெலீவ் (படம்) தனது முதலாவது ஆவர்த்தன அட்டவணையை சமர்ப்பித்தார்.
* 1946 - வியட்நாம் போர்: ஹோ சி மின் பிரான்சுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பிரான்ஸ் வியட்நாமை தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஏற்றுக் கொண்டது.
* 1964 – ஒரு வானொலி ஒலிபரப்பில், அமெரிக்க குத்துச்சண்டை வீரர் காசியஸ் கிளே தான் சேர்ந்துள்ள புது மதத்தின் அடையாளமாக, தன் பெயரை முகம்மது அலி என மாற்றிக் கொள்வார் என்பதனை இஸ்லாம் தேசம் தலைவர் அறிவித்தார்.
* 1967 - திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
அண்மைய நாட்கள்: மார்ச் 5 – மார்ச் 4 – மார்ச் 3
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Alexander Graham Bell.jpg
மார்ச் 7: அல்பேனியா - ஆசிரியர் நாள்
* 1799 - பிரான்சின் முதலாம் நெப்போலியன் பாலஸ்தீனத்தின் ஜாஃபா நகரைக் கைப்பற்றினான். அவனது படைகள் கிட்டத்தட்ட 2,000 அல்பேனியர்களைக் கொன்றனர்.
* 1876 - அலெக்சாண்டர் கிரகம் பெல் (படம்) தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார்.
* 1990 - கவியோகி சுத்தானந்த பாரதியார் இறப்பு.
* 1996 - பாலஸ்தீனத்தில் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: மார்ச் 6 – மார்ச் 5 – மார்ச் 4
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Johannes Kepler.jpg
மார்ச் 8: அனைத்துலக பெண்கள் நாள்
* 1618 - ஜொஹான்னெஸ் கெப்லர் (படம்) கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.
* 1782 - ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தில் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய 90 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பென்சில்வேனியாவின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களும் அடங்குவர்.
* 1922 - சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் இறப்பு.
அண்மைய நாட்கள்: மார்ச் 7 – மார்ச் 6 – மார்ச் 5
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Firebombing of Tokyo.jpg
மார்ச் 9:
* 1945 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க பி-29 போர் விமானங்கள் டோக்கியோவில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட தீச்சூறாவளியினால் (படம்) 100,000 பேர் கொல்லப்பட்டனர்.
* 1986 - சலேஞ்சர் விண்ணோடத்தின் அழிந்த சிதைவுகளை ஐக்கிய அமெரிக்காவின் ஆழ்கடலோடிகள் கண்டுபிடித்தனர்.
* 2006 - சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: மார்ச் 8 – மார்ச் 7 – மார்ச் 6
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Cj eliezer.jpg
மார்ச் 10:
* 1876 - அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.
* 1959 - திபெத்தில் பத்தாண்டு கால சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து லாசா நகரில் நடத்தப்பட்ட போராட்டம் தோல்வியில் முடிந்தது. ஆயிரக்கணக்கானோர் சீன இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
* 2001 - கணிதவியலாளரும் தமிழ் அபிமானியுமான சி. ஜே. எலியேசர் (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: மார்ச் 9 – மார்ச் 8 – மார்ச் 7
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Gorbatschow DR-Forum 129 b2.jpg
மார்ச் 11: லித்துவேனியா - விடுதலை நாள் (1990)
* 1902 - யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறையில் இருந்து சாவகச்சேரி வரையான 21 மைல் நீள தொடருந்துப் பாதை அமைக்கப்பட்டது.
* 1918 - ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாற்றப்பட்டது.
* 1985 - மிக்கைல் கொர்பச்சோவ் (படம்) சோவியத் தலைவரானார்.
அண்மைய நாட்கள்: மார்ச் 10 – மார்ச் 9 – மார்ச் 8
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Gandhi Salt March-cropped.jpg
மார்ச் 12: மொரீசியஸ் - தேசிய நாள்
* 1930 - மகாத்மா காந்தி பிரித்தானிய ஆட்சியாளரின் உப்பு ஆதிக்கத்துக்கு எதிராக 200 மைல் நீள தண்டி யாத்திரையை ஆரம்பித்தார் (படம்).
* 1940 - பின்லாந்து மாஸ்கோவுடன் அமைதி உடன்பாட்டிற்கு வந்தது. கரேலியாப் பகுதி முழுவதும் சோவியத் ஒன்றியம் பெற்றுக் கொண்டது. பின்லாந்துப் படைகளும் மீதமிருந்த மக்களும் உடனடியாக வெளியேறினர்.
* 1993 - மும்பாயில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: மார்ச் 11 – மார்ச் 10 – மார்ச் 9
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
William Herschel01.jpg
மார்ச் 13:
* 1781 - ஜெர்மானிய வானிலையாளர் வில்லியம் ஹேர்ச்செல் (படம்) யுரேனஸ் கோளைக் கண்டுபிடித்தார்.
* 1881 - ரஷ்யாவின் இரண்டாம் அலெக்சாண்டர் மன்னன் தனது மாளிகைக்கு அருகில் நடந்த குண்டு வீச்சில் கொலை செய்யப்பட்டான்.
* 1992 - கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: மார்ச் 12 – மார்ச் 11 – மார்ச் 10
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Karl Marx.jpg
மார்ச் 14: பை நாள்
* 1883 - கம்யூனிசத்தின் தந்தை, ஜெர்மனிய மெய்யியலாளர் கார்ல் மார்க்ஸ் (படம்) இறப்பு.
* 1978 - இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானை ஆக்கிரமித்துக் கைப்பாற்றினர்.
* 1994 - லினக்ஸ் கரு (kernel) 1.0.0 வெளியிடப்பட்டது.
அண்மைய நாட்கள்: மார்ச் 13 – மார்ச் 12 – மார்ச் 11
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
0092 - Wien - Kunsthistorisches Museum - Gaius Julius Caesar.jpg
மார்ச் 15: ஜப்பான் - புத்தியிர்ப்பு விழா ஒவுனென் மட்சுறி
* கிமு 44 - யூலியஸ் சீசர் (படம்) ரோமன் குடியரசின் மேலவை உறுப்பினர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டான்.
* 1877 - முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம் இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் மெல்பேர்ணில் ஆரம்பமானது.
* 1991 - இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜேர்மனியின் ஆதிக்க நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து ஜேர்மனி முழுமையான விடுதலையைப் பெற்றது.
அண்மைய நாட்கள்: மார்ச் 14 – மார்ச் 13 – மார்ச் 12
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
My Lai massacre.jpg
மார்ச் 16:
* 1945 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 20-நிமிட விமானக் குண்டுவீச்சில் ஜெர்மனியின் வூர்ஸ்பேர்க் நகரின் 90 விழுக்காடு அழிந்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.
* 1963 - பாலியில் ஆகூங்க் மலை நெருப்பு கக்கி 11,000 பேர் வரை இறந்தனர்.
* 1968 - மை லாய் படுகொலைகள் (படம்): மை லாய் என்ற இடத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: மார்ச் 15 – மார்ச் 14 – மார்ச் 13
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Vanguard 1.jpg
மார்ச் 17:
* 1942 - மேற்கு உக்ரேனின் லிவிவ் என்ற இடத்தைச் சேர்ந்த யூதர்கள் கிழக்கு போலந்தில் பெல்செக் என்ற இடத்தில் வைத்து நாசி ஜெர்மனியரினால் நச்சு வாயு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
* 1958 - சூரிய சக்தியில் இயங்கக்கூடிய முதலாவது செய்மதி, வங்கார்ட் 1 (படம்), விண்ணுக்கு ஏவப்பட்டது. பூமியைச் சுற்றிவரும் மிகப் பழமையான செய்மதி இதுவாகும்.
* 1996 - இலங்கை அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
அண்மைய நாட்கள்: மார்ச் 16 – மார்ச் 15 – மார்ச் 14
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Leonow, Alexei.png
மார்ச் 18:
* 1915 - முதலாம் உலகப் போர்: கலிப்பொலி சமரில் பெரும் கடற்படைத் தாக்குதல் இடம்பெற்றது. பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுக் கப்பல்கள் மூன்று, ஒட்டோமான் படைகளால் மூழ்கடிக்கப்பட்டன.
* 1922 - ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இரண்டு ஆண்டுகளில் விடுதலை ஆனார்.
* 1945 - இரண்டாம் உலகப் போர்: சப்பானில் ஜப்பானுக்கும் நேச நாடுகளிக்கும் இடையில் ஒகினவா சமர் ஆரம்பமாகியது.
* 1965 - சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் (படம்) வஸ்கோத் 2 விண்கலத்தின் வெளியே 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதன் ஆனார்.
அண்மைய நாட்கள்: மார்ச் 17 – மார்ச் 16 – மார்ச் 15
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
A1 Sydney Harbour Bridge.JPG
மார்ச் 19:
* 1932 - சிட்னி துறைமுகப் பாலம் (படம்) திறந்து வைக்கப்பட்டது.
* 1972 - இந்தியாவும் வங்காள தேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
* 1988 - இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி மட்டக்களப்பில் தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.
அண்மைய நாட்கள்: மார்ச் 18 – மார்ச் 17 – மார்ச் 16
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Einstein2.jpg
மார்ச் 20: உலக வீட்டுக்குருவிகள் நாள்
* 1916 - அல்பர்ட் ஐன்ஸ்டீன் (படம்) தனது சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.
* 1815 - எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசை மீண்டும் கைப்பற்றி "நூறு நாட்கள்" ஆட்சியை ஆரம்பித்தான்.
* 2003 - ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டுப் படைகளால் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: மார்ச் 19 – மார்ச் 18 – மார்ச் 17
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
மார்ச் 21: நமீபியா - விடுதலை நாள் (1990)
* 1857 - டோக்கியோவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 100,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
* 1905 - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது புகழ் பெற்ற சிறப்புச் சார்புக் கோட்பாடு கொள்கையை வெளியிட்டார்.
* 1948 - முகமது அலி ஜின்னா (படம்) உருது மட்டுமே பாகிஸ்தானின் அரசு மொழியாக இருக்கும் என டாக்காவில் வைத்து அறிவித்தார்.
அண்மைய நாட்கள்: மார்ச் 20 – மார்ச் 19 – மார்ச் 18
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Geminiganesh.jpg
மார்ச் 22: உலக நீர் நாள்
* 1943 - இரண்டாம் உலகப் போர்: பெலாரசின் காட்டின் நகர மக்கள் அனைவரும் நாசி ஜெர்மனியரினால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
* 1995 - சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.
* 2005 - நடிகர் ஜெமினி கணேசன் (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: மார்ச் 21 – மார்ச் 20 – மார்ச் 19
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Bhagat Singh 1922.jpg
மார்ச் 23: பாகிஸ்தான் - குடியரசு நாள் (1956)
* 1931 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் (படம்) ராஜ்குரு, சுகதேவ் ஆகியோருடன் சேர்த்து தூக்கிலிடப்பட்டார்.
* 1940 - முஸ்லீம் லீக், இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கையை வெளியிட்டது.
* 1964 - யாழ்ப்பாணத்து யோக சுவாமிகள் இறப்பு.
* 2001 - ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.
அண்மைய நாட்கள்: மார்ச் 22 – மார்ச் 21 – மார்ச் 20
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
RobertKoch cropped.jpg
மார்ச் 24: அனைத்துலக காச நோய் நாள்
* 1882 - காசநோயை உருவாக்கும் நுண்ணுயிரைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் (படம்) பெர்லினில் அறிவித்தார்.
* 1947 - மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் பிரித்தானிய ஆளுநரானார்.
* 1965 - இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஏதுவாக்குவதும் வட கிழக்கில் அரச நில பகிர்ந்தளிப்பில் தமிழ் மொழி பேசுவோருக்கே முன்னுரிமை வழங்கவும் டட்லி-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அண்மைய நாட்கள்: மார்ச் 23 – மார்ச் 22 – மார்ச் 21
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Christiaan Huygens-painting.jpeg
மார்ச் 25: கிரேக்கம் - விடுதலை நாள்
* 1655 - டைட்டான் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை டச்சு வானியலாளர் கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் (படம்) கண்டுபிடித்தார்.
* 1949 - எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகியவற்றைச் சேர்ந்த 92,000 பேர் சோவியத் ஒன்றியத்தின் பல ஒதுக்கமான இடங்களுக்கு கட்டாய வேலைக்காக அனுப்பப்பட்டனர்.
* 1971 - வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்கு எதிரான தேடுதலொளி நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
அண்மைய நாட்கள்: மார்ச் 24 – மார்ச் 23 – மார்ச் 22
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Flag of Bangladesh (1971).svg
மார்ச் 26: வங்காள தேசம் - விடுதலை நாள் (1971)
* 1871 - இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்.
* 1971 - கிழக்கு பாகிஸ்தான் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. வங்காள தேச (ஆரம்ப சின்னம் படத்தில்) விடுதலைப் போர் ஆரம்பமானது.
* 2007 - கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது வான்புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
அண்மைய நாட்கள்: மார்ச் 25 – மார்ச் 24 – மார்ச் 23
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Yuri Gagarin official portrait.jpg
மார்ச் 27:
* 1892 - சுவாமி விபுலாநந்தர் பிறப்பு.
* 1964 - ஐக்கிய அமெரிக்காவின் சரித்திரத்தில் மிகப் பெரிய 9.2 ரிக்டர் நிலநடுக்கமும் அதையடுத்த ஆழிப்பேரலையும் பெரிய வெள்ளியன்று அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் கொல்லப்பட்டனர். அன்கரேஜ் என்ற நகரத்தின் பெரும் பகுதி சேதமுற்றது.
* 1968 - விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் (படம்) விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டார்.
* 1969 - நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
அண்மைய நாட்கள்: மார்ச் 26 – மார்ச் 25 – மார்ச் 24
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
மார்ச் 28: செக் குடியரசு - ஆசிரியர் நாள்
* 1979 - பென்சில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் ஐக்கிய அமெரிக்க சரித்திரத்தில் முதலாவது அணுமின் நிலைய விபத்து ஏற்பட்டது.
* 2005 - இந்தோனீசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 1,300 பேர் கொல்லப்பட்டனர்.
* 2006 - ஆன்மிகவாதி வேதாத்திரி மகரிஷி மறைவு.
அண்மைய நாட்கள்: மார்ச் 27 – மார்ச் 26 – மார்ச் 25
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Srinivasa Varadhan.jpg
மார்ச் 29:
* 1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.
* 1974 - நாசாவின் மரைனர் 10 விண்கலம் புதன் கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது.
* 2007 - கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நார்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு (படம்) அறிவிக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: மார்ச் 28 – மார்ச் 27 – மார்ச் 26
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Alaska Purchase (hi-res).jpg
மார்ச் 30:
* 1492 - ஸ்பெயினில் இருந்து அனைத்து யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
* 1867 - அலாஸ்கா மாநிலத்தை 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் (படம்) பணம் கொடுத்து ரஷ்யாவிடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா கொள்வனவு செய்தது.
* 1981 - அமெரிக்க அதிபர் றொனால்ட் றேகன் வாஷிங்டனில் வைத்து மார்பில் சுடப்பட்டார்
அண்மைய நாட்கள்: மார்ச் 29 – மார்ச் 28 – மார்ச் 27
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Toureiffel.jpg
மார்ச் 31: மால்ட்டா - விடுதலை நாள் (1979)
* 1889 - ஈபெல் கோபுரம் (படம்) தொடக்க விழா பாரிசில் கொண்டாடப்பட்டது.
* 1917 - ஐக்கிய அமெரிக்கா அமெரிக்க கன்னித் தீவுகளை டென்மார்க்கிடம் இருந்து $25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்தது.
* 1966 - சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இதுவே சந்திரனின் சுற்றுவட்டத்தை வலம் வந்த முதலாவது விண்கலமாகும்.
* 1990 - இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: மார்ச் 30 – மார்ச் 29 – மார்ச் 28