ஜூலை

சூலை 1: சோமாலியா, ருவாண்டா, புருண்டி - விடுதலை நாள், கானா - குடியரசு நாள்

* 1947 - இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது.
* 1997 - மக்கள் சீனக் குடியரசு ஹொங்கொங்கில் தனது ஆட்சியை ஆரம்பித்தது. 156 ஆண்டு கால பிரித்தானிய குடியேற்ற ஆட்சி முடிவடைந்தது.
* 2004 - காசினி-ஹியூஜென்ஸ் (படம்) விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.

அண்மைய நாட்கள்: சூன் 30 – சூன் 29 – சூலை 2
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
James Abram Garfield, photo portrait seated.jpg

சூலை 2:

* 1881 - அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் (படம்) சுடப்பட்டுப் படுகாயமடைந்து செப்டம்பர் 19இல் இறந்தார்.
* 1941 - உக்ரேனில் லூட்ஸ் நகரத்தில் 2000 யூதர்கள் ஜெர்மனிய நாசிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
* 1976 - வியட்நாம் போர் முடிவடைந்த ஓராண்டின் பின்னர் வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம்கள் மீண்டும் இணைந்து சோசலிசக் குடியரசாகியது.

அண்மைய நாட்கள்: சூலை 1 – சூன் 30 – சூலை 3
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Pinguinus impennis.jpg

சூலை 3: பெலரஸ் - விடுதலை நாள் (1944)

* 1778 - அமெரிக்க விடுதலைப் போரின் போது பென்சில்வேனியாவில் பிரித்தானிய மற்றும் இரெக்வாய்ஸ் படையினர் வயோமிங் சண்டையில் 340 அமெரிக்க வீரர்களைக் கொன்றனர்.
* 1844 - பெரிய ஓக் (படம்) பறவைகளின் கடைசி சோடி ஐஸ்லாந்தில் கொல்லப்பட்டன.
* 1962 - பிரான்சுக்கு எதிரான அல்ஜீரிய விடுதலைப் போர் நிறைவு பெற்றது.

அண்மைய நாட்கள்: சூலை 2 – சூலை 1 – சூலை 4
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Swami Vivekananda-1893-09-signed.jpg

சூலை 4: ஐக்கிய அமெரிக்கா - விடுதலை நாள்

* 1865 - ஆலிசின் அற்புத உலகம் நூல் வெளியிடப்பட்டது.
* 1902 - இந்தியாவின் சமயத் தலைவர் சுவாமி விவேகானந்தர் (படம்) இறப்பு.
* 1918 - ரஷ்ய மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் மற்றும் அவனது குடும்பத்தினர் போல்ஷெவிக்குகளால் கொல்லப்பட்டனர் (யூலியின் நாட்காட்டி).

அண்மைய நாட்கள்: சூலை 3 – சூலை 2 – சூலை 5
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Sir Isaac Newton by Sir Godfrey Kneller, Bt.jpg

ஜூலை 5: வெனிசுவேலா, அல்ஜீரியா, கேப் வேர்ட்: விடுதலை நாள்

* 1687 - ஐசாக் நியூட்டன் (படம்) தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை வெளியிட்டார்.
* 1977 - பாகிஸ்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டோ பதவி இழந்தார்.
* 1987 - கரும்புலிகள் நாள்: விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலித் தாக்குதல் மில்லரினால் யாழ்ப்பாணம், நெல்லியடி இராணுவ முகாம் மீது நடத்தப்பட்டது.

அண்மைய நாட்கள்: ஜூலை 4 – ஜூலை 3 – ஜூலை 2
தொகுப்பு

பார் – பேச்சு – தொகு – வரலாறு
L pasteur injets vaccine to J meister.jpg

ஜூலை 6: மலாவி (1964), கொமொரோஸ் (1975) - விடுதலை நாள்

* 1885 - பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்டர் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை விசர் நாய் ஒன்றினால் கடிபட்ட 9 வயது யோசப் மைசிட்டர் (படம்) என்ற சிறுவனில் வெற்றிகரமாகச் சோதனை செய்தார்.
* 1947 - சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கிகளை தயாரிக்க ஆரம்பித்தது.
* 1962 - இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவைக் கொலை செய்த குற்றத்திற்காக "சோமாராம தேரர்" என்ற பௌத்தத் துறவி தூக்கிலிடப்பட்டார்.

அண்மைய நாட்கள்: ஜூலை 5 – ஜூலை 4 – ஜூலை 3
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Ranjit Singh, ca 1835-1840.jpg

ஜூலை 7: சொலமன் தீவுகள் - விடுதலை நாள் (1978)

* 1799 - பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங் (படம்) தலைமையில் அவனது படையினர் லாகூரை அடுத்துள்ள பகுதிகளைப் பிடித்தனர்.
* 1896 - இந்தியாவில் முதற் தடவையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது.
* 2005 - லண்டனில் 4 சுரங்கத் தொடருந்து நிலையங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 56 பேர் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: ஜூலை 6 – ஜூலை 5 – ஜூலை 4
தொகுப்பு

பார் – பேச்சு – தொகு – வரலாறு
V.V.Vairamuthu.jpg

ஜூலை 8:

* 1497 - வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம்.
* 1985 - திம்புப் பேச்சுவார்த்தைகள்: இலங்கை அரசுக்கும் ஈழ விடுதலை அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
* 1989 - ஈழத்து நாடகத்துறையின் முன்னோடி, நடிகமணி வி. வி. வைரமுத்து (படம்) இறப்பு.

அண்மைய நாட்கள்: ஜூலை 7 – ஜூலை 6 – ஜூலை 5
தொகுப்பு

பார் – பேச்சு – தொகு – வரலாறு
Jacques-Louis David 017.jpg

ஜூலை 9: ஆர்ஜென்டீனா - விடுதலை நாள் (1816)

* 1810 - ஒல்லாந்து நாட்டை முதலாம் நெப்போலியன் (படம்) தனது பிரெஞ்சு இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டான்.
* 1995 - நவாலி தேவாலயத் தாக்குதல்:யாழ்ப்பாணத்தில் நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 141 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
* 2002 - ஆபிரிக்க ஒன்றியம் அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது. தென்னாபிரிக்க அதிபர் தாபோ உம்பெக்கி இவ்வமைப்பின் முதலாவது தலைவரானார்.

அண்மைய நாட்கள்: ஜூலை 8 – ஜூலை 7 – ஜூலை 6
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Carl Friedrich Gauss.jpg

ஜூலை 10: பஹாமாஸ் - விடுதலை நாள் (1973)

* 1796 - ஒவ்வொரு நேர் முழு எண்ணும் அதிகபட்சம் மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என்பதை கார்ல் பிரீடிரிஷ் காவுஸ் (படம்) கண்டுபிடித்தார்.
* 1806 - வேலூர் சிப்பாய் எழுச்சி: தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படையினர் கொல்லப்பட்டனர்.
* 1973 - வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தான் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

அண்மைய நாட்கள்: ஜூலை 9 – ஜூலை 8 – ஜூலை 7
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Avogadro Amedeo.jpg

சூலை 11: உலக மக்கள் தொகை நாள்

* 1811 - வளிமங்களின் மூலக்கூறுகள் பற்றிய தமது குறிப்புகளை இத்தாலிய அறிவியலாளர் அவகாதரோ (படம்) வெளியிட்டார்.
* 1990 - கிளிநொச்சியில் "கொக்காவில்" இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தாக்கி அழிக்கப்பட்டது.
* 2006 - மும்பை தொடருந்துக் குண்டுவெடிப்புகள்: மும்பாயில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 200 பேர் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: சூலை 10 – சூலை 9 – சூலை 12
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Umartahmbi.jpg

சூலை 12: சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி (1975), கிரிபட்டி (1979), - விடுதலை நாள்

* 1799 - ரஞ்சித் சிங் லாகூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பஞ்சாபின் ஆட்சியைப் பிடித்தான்.
* 1806 - பதினாறு ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்.
* 2006 - தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கிய உமர் தம்பி (படம்) இறப்பு.

அண்மைய நாட்கள்: சூலை 11 – சூலை 10 – சூலை 13
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Amirthalingam.jpg

சூலை 13:

* 1869 - இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.
* 1989 - இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கம் (படம்), மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
* 1997 - சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன.

அண்மைய நாட்கள்: சூலை 12 – சூலை 11 – சூலை 14
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Hubert - La Bastille.jpg

ஜூலை 14: பிரான்ஸ் - பாஸ்டில் நாள்

* 1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் மக்கள் பாஸ்டில் (படம்) சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளபாடங்களைக் கைப்பற்றினர்.
* 1889 - பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் "சர்வதேச தொழிலாளர் பாராளுமன்ற" நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை-நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது.
* 1965 - நாசாவின் மரைனர் 4 செவ்வாய்க் கோளுக்குக் கிட்டவாகச் சென்று முதற்தடவையாக வேறொரு கோளின் மிக அண்மையான படங்களைப் பூமிக்கு அனுப்பியது.

அண்மைய நாட்கள்: ஜூலை 13 – ஜூலை 12 – ஜூலை 11
தொகுப்பு

பார் – பேச்சு – தொகு – வரலாறு
காமராஜர்.jpg

ஜூலை 15:

* 1857 - சிப்பாய்க் கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.
* 1903 - பெருந்தலைவர் காமராசர் (படம்) பிறப்பு.
* 1991 - ஈழத்து எழுத்தாளர் நெல்லை க. பேரன் இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.
* 2003 - ஈழத்தின் பிரபல நாதசுவரக் கலைஞர் என். கே. பத்மநாதன் இறப்பு.

அண்மைய நாட்கள்: ஜூலை 14 – ஜூலை 13 – ஜூலை 12
தொகுப்பு

பார் – பேச்சு – தொகு – வரலாறு
Trinity shot color.jpg

சூலை 16:

* 622 - முகமது நபி மக்காவிலிருந்து மதினாவுக்கு பயணம் தொடங்கினார். இது இஸ்லாமிய நாட்காட்டியின் தொடக்கமாகும்.
* 1945 - முதலாவது அணுகுண்டு (படம்) சோதனையை ஐக்கிய அமெரிக்கா நியூ மெக்சிகோ பாலைவனத்தில் வெற்றிகரமாகச் சோதித்தது.
* 2004 - தமிழ்நாடு கும்பகோணத்தில் தனியார் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 93 பிள்ளைகள் தீயிற் கருகி மாண்டனர்.

அண்மைய நாட்கள்: சூலை 15 – சூலை 14 – சூலை 17
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Russian Royal Family 1911 720px.jpg

ஜூலை 17:

* 1918 - போல்ஷெவிக் கட்சியின் உத்தரவின் பேரில் ரஷ்ய மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் (படம்), அவனது மனைவி, பிள்ளைகள் ஐவர் உட்பட குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டனர்.
* 1945 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவின் ஹாரி எஸ். ட்ரூமன், பிரித்தானியாவின் வின்ஸ்டன் சேர்ச்சில், சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் உலகப்போர் தொடர்பான தமது கடைசி உச்சி மாநாட்டை ஜெர்மனியில் ஆரம்பித்தனர்.
* 1975 - அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலமும் சோவியத்தின் சோயுஸ் விண்கலமும் விண்வெளியில் ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது இதுவே முதற் தடவையாகும்.

அண்மைய நாட்கள்: ஜூலை 16 – ஜூலை 15 – ஜூலை 14
தொகுப்பு

பார் –

பேச்சு – தொகு – வரலாறு
Nero Glyptothek Munich 321.jpg

ஜூலை 18: உருகுவே - அரசியலமைப்பு நாள்

* 64 - ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ (படம்) மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.
* 1916 - யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் கொல்லப்பட்டனர். வீடுகள், மற்றும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன.
* 1996 - ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது.

அண்மைய நாட்கள்: ஜூலை 17 – ஜூலை 16 – ஜூலை 15
தொகுப்பு

பார் –

பேச்சு – தொகு – வரலாறு
Vipulanandar.jpg

ஜூலை 19: மியான்மார் - மாவீரர் நாள்

* 1947 - தமிழிசை ஆய்வாளர் சுவாமி விபுலாநந்தர் (படம்) இறப்பு.
* 1947 - பர்மிய தேசியவாதியான ஓங் சான் மற்றும் அவரது ஆறு அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
* 1979 - நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது.

அண்மைய நாட்கள்: ஜூலை 18 – ஜூலை 17 – ஜூலை 16
தொகுப்பு

பார் –

பேச்சு – தொகு – வரலாறு
Kingabdullahbinhussein.jpg

ஜூலை 20: கொலம்பியா - விடுதலை நாள் (1810)

* 1951 - ஜோர்தானின் மன்னர் முதலாம் அப்துல்லா (படம்) ஜெருசலேமில் அல் அக்சா மசூதியில் வெள்ளிக்கிழமைத் தொழுகையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
* 1960 - இலங்கையின் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கா தெரிவானார். இவரே நாடொன்றின் தலைவராகத் தெரிவான முதற் பெண் ஆவார்.
* 1969 - முதலாவது மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 சந்திரனில் இறங்கியது.

அண்மைய நாட்கள்: ஜூலை 19 – ஜூலை 18 – ஜூலை 17
தொகுப்பு

பார் –

பேச்சு – தொகு – வரலாறு

ஜூலை 21: குவாம் - விடுதலை நாள் (1944), சிங்கப்பூர் - இன சமத்துவ நாள்

* 1954 - வியட்நாம், வடக்கு மற்றும் தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
* 1964 – சிங்கப்பூரில் மலே இனத்தவர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் கலவரம் மூண்டதில் 23 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தனர்.
* 1969 - நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்று சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றனர்.
* 2001 - புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் (படம்) இறப்பு.

அண்மைய நாட்கள்: ஜூலை 20 – ஜூலை 19 – ஜூலை 18
தொகுப்பு

பார் – பேச்சு – தொகு – வரலாறு
Maria Magdalene crucifixion detail.jpeg

ஜூலை 22: மர்தலேன் மரியாள் (படம்) திருவிழா, π அண்ணளவு நாள்.

* 1944 - சோவியத் ஆதரவுடன் போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு நாட்டில் சீர்திருத்தங்களையும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தையும் நாசிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லும் தனது திட்டத்தையும் அறிவித்தது. போலந்தில் கம்யூனிச ஆட்சி ஆரம்பமானது.
* 1962 - நாசாவின் மரைனர் 1 விண்கலம் ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றதால் அது அழிக்கப்பட்டது.
* 2003 - ஈராக்கில் சதாம் உசேனின் இரு புதல்வர்கள் குவாசி, உதய் மற்றும் அவரது 14-வயதுப் பேரன் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: ஜூலை 21 – ஜூலை 22 – ஜூலை 23
தொகுப்பு

பார் – பேச்சு – தொகு – வரலாறு
Blackjuly.jpg

ஜூலை 23: எகிப்து - புரட்சி நாள் (1952)

* 1967 - அமெரிக்காவின் வரலாற்றில் மிகப் பெரும் கலவரம் ஆபிரிக்க அமெரிக்கர்கள் செறிந்து வாழும் டிட்ராயிட் நகரில் இடம்பெற்றது. 43 பேர் கொல்லப்பட்டு 342 பேர் காயமடைந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் எரிக்கப்பட்டன.
* 1983 - கறுப்பு யூலை: இலங்கையில் இரண்டு வாரங்களில் 3000 தமிழர்கள் சிங்கள பௌத்த இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆரம்பமானது (படம்).
* 1995 - ஹேல்-பொப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது.

அண்மைய நாட்கள்: ஜூலை 22 – ஜூலை 21 – ஜூலை 20
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Peru Machu Picchu Sunrise.jpg

சூலை 24:

* 1911 – புதிய உலக அதிசயங்களுள் ஒன்றான பெருவின் மச்சு பிக்ச்சு (படம்) என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை மீளக் கண்டுபிடிக்கப்பட்டது. இது பழைய இன்கா பேரரசின் "தொலைந்த நகரம்" எனக் கருதப்படுகிறது.
* 1923 - கிரேக்கம், பல்கேரியா மற்றும் முதலாம் உலகப் போரில் பங்குபற்றிய நாடுகள் சுவிட்சர்லாந்தில் கூடி புதிய துருக்கியின் எல்லைகளை நிர்ணயிக்கும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டனர்.
* 2001 - கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுதலைப் புலிகளிளால் தாக்கப்பட்டதில் பல விமானங்கள் அழிக்கப்பட்டன.

அண்மைய நாட்கள்: சூலை 23 – சூலை 22 – சூலை 25
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Blackjuly.jpg

சூலை 25:

* 1898 - புவேர்ட்டோ ரிக்கோ மீதான ஐக்கிய அமெரிக்காவின் படையெடுப்பு ஆரம்பமானது. முதலாவது அமெரிக்கப் படையினர் அங்கு தரையிறங்கினர்.
* 1983 - கொழும்பு வெலிக்கடைச் சிறையில் 37 தமிழ் அரசியல் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர். சிங்களப் பகுதிகளில் கறுப்பு ஜூலை (படம்) படுகொலைகள் உச்சக்கட்டத்தை எட்டியது.
* 1984 - ரஷ்யாவின் ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா விண்வெளியில் நடந்த முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

அண்மைய நாட்கள்: சூலை 24 – சூலை 23 – சூலை 26
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
FidelGuerilla.jpg

ஜூலை 26: லைபீரியா (1847), மாலைதீவு (1965) - விடுதலை நாள்

* 1953 - கியூபாவில் மொன்காடா இராணுவத் தளம் மீது பிடெல் காஸ்ட்ரோ (படம்) தலைமையில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
* 1957 - இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே பண்டா-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
* 1963 - மசிடோனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,100 பேர் வரை கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: ஜூலை 25 – ஜூலை 24 – ஜூலை 23
தொகுப்பு

பார் –

பேச்சு – தொகு – வரலாறு
Somasuntharapulavar.jpg

ஜூலை 27:

* 1953 - சோமசுந்தரப் புலவர் (படம்) இறப்பு.
* 1953 - ஐக்கிய அமெரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.
* 1975 - விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரத் தலைவர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.
* 1983 - வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்: கொழும்பு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: ஜூலை 26 – ஜூலை 25 – ஜூலை 24
தொகுப்பு

பார் –

பேச்சு – தொகு – வரலாறு
Empire state building.jpg

ஜூலை 28: பெரு - விடுதலை நாள்

* 1914 - சேர்பியா மீது ஆஸ்திரியா-ஹங்கேரி போர் தொடுத்தன. முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.
* 1945 - அமெரிக்க போர் விமானம் ஒன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் (படம்) 79ம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
* 2005 - ஐரியக் குடியரசு இராணுவம் தனது 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தது.

அண்மைய நாட்கள்: ஜூலை 27 – ஜூலை 26 – ஜூலை 25
தொகுப்பு

பார் – பேச்சு – தொகு – வரலாறு
RajivGandhi.jpg

ஜூலை 29:

* 1957 - அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
* 1987 - இலங்கை - இந்திய ஒப்பந்தம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. இதனையடுத்து இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது இலங்கை இராணுவத்தினன் ஒருவனால் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி (படம்) துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டுக் காயம் அடைந்தார்.
* 1999 - இலங்கையின் தமிழ் அரசியல்வாதி நீலன் திருச்செல்வம் தற்கொலை குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.

அண்மைய நாட்கள்: ஜூலை 28 – ஜூலை 27 – ஜூலை 26
தொகுப்பு

பார் – பேச்சு – தொகு – வரலாறு
CatherinePalaceSouthSide.jpg

ஜூலை 30: வனுவாட்டு - விடுதலை நாள் (1980)

* 1756 – ரஷ்யாவில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் கத்தரீன் அரண்மனை (படம்) கட்டி முடிக்கப்பட்டது.
* 1930 - உருகுவே முதலாவது உதைபந்தாட்ட உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் ஆர்ஜெண்டீனாவை 4-2 கணக்கில் தோற்கடித்து உலகக்கிண்ணத்தை வென்றது.
* 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் போர்க்கப்பல் அமெரிக்கக் கடற்படைக் கப்பலை மூழ்கடித்ததில் 883 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: ஜூலை 29 – ஜூலை 28 – ஜூலை 27
தொகுப்பு

பார் –

பேச்சு – தொகு – வரலாறு
Stamp159 deeran.jpg

ஜூலை 31:

* 1805 - இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் குறுநில மன்னருமான தீரன் சின்னமலை (படம்) பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்.
* 1865 - உலகின் முதலாவது குறுகிய அகல தொடருந்துப் பாதை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
* 1971 - அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் தளவுளவியை சந்திரனில் செலுத்திச் சாதனை புரிந்தனர்.

அண்மைய நாட்கள்: ஜூலை 30 – ஜூலை 29 – ஜூலை 28
தொகுப்பு


Next Post Previous Post