ஆகஸ்ட்

Baden-Powell USZ62-96893 (retouched and cropped).png

ஆகஸ்ட் 1: சுவிட்சர்லாந்து - தேசிய நாள்

* 1907 - சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் (படம்) இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.
* 1944 - போலந்தில் வார்சா நகரில் நாசிகளுக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.
* 1952 - தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் துவக்கி வைத்தார்.

அண்மைய நாட்கள்: ஜூலை 31 – ஜூலை 30 – ஜூலை 29
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Einstein-Roosevelt-letter.png

ஆகஸ்ட் 2:

* 1939 - அணுவாயுதத்தை தயாரிக்க அறிவுறுத்துமாறு ஐன்ஸ்டைன் அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டிற்குக் கடிதம் (படம்) எழுதினார்.
* 1989 - யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பேர் கொல்லப்பட்டனர்.
* 1990 - ஈராக் குவைத்தின் மீது படையெடுத்து இரண்டு நாட்களில் அதனைக் கைப்பற்றியது.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 1 – ஜூலை 31 – ஜூலை 30
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Chinmayananda.jpg

ஆகஸ்ட் 3: நைஜர் - விடுதலை நாள் (1960)

* 1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கத்தோலிக்க அரசினால் வெளியேற்றப்பட்டனர்.
* 1990 - கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.
* 1993 - வேதாந்த தத்துவத்தைப் பரப்பிய இந்திய ஆன்மிகவாதி சுவாமி சின்மயானந்தா (படம்) இறப்பு.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 2 – ஆகஸ்ட் 1 – ஜூலை 31
தொகுப்பு

பார் – பேச்சு – தொகு – வரலாறு
PonGaneshamoorthy.jpg

ஆகஸ்ட் 4:

* 1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி பெல்ஜியத்தின் மீது படையெடுத்ததன் காரணமாக ஐக்கிய இராச்சியம் ஜெர்மனி மீது போரை அறிவித்து உலகப் போரில் முதன் முறையாகக் குதித்தது.
* 1975 - மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஜப்பானிய செம்படையினர் ஏஐஏ கட்டிடத்தைத் தாக்கி அமெரிக்கத் தூதுவர் உட்பட 50 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். பின்னர் இப்பயணக்கைதிகளை விடுவித்து சிறைக்கைதிகளாயிருந்த தமது 5 தோழர்களுடன் லிபியா பயணமாயினர்.
* 2006 - ஈழத்துக் கலைஞர் பொன் கணேசமூர்த்தி (படம்) யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* 2006 - வறுமைக்கு எதிரான அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 3 – ஆகஸ்ட் 2 – ஆகஸ்ட் 1
தொகுப்பு

பார் – பேச்சு – தொகு – வரலாறு
MMONROE1.jpg

ஆகஸ்ட் 5: புர்கினா பாசோ - விடுதலை நாள் (1960)

* 1962 - 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை.
* 1962 – அமெரிக்க நடிகை மரிலின் மன்றோ (படம்) லாஸ் ஏஞ்ஜெலீசில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
* 2006 - வறுமைக்கு எதிரான அமைப்பு என்ற பிரெஞ்சு அரச சார்பற்ற அமைப்பின் 15 தமிழ்ப் பணியாளர்கள் மூதூரில் இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 4 – ஆகஸ்ட் 3 – ஆகஸ்ட் 2
தொகுப்பு

பார் – பேச்சு – தொகு – வரலாறு
Atombombe Little Boy 2.jpg

ஆகஸ்ட் 6: பொலிவியா (1825), ஜமெய்க்கா (1962) - விடுதலை நாள்

* 1806 - கடைசி புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரான்சிஸ் நெப்போலியனுடனான போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அப்பேரரசு முடிவுக்கு வந்தது.
* 1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா சின்னப் பையன் (படம்) என்று அழைக்கப்பட்ட அணுகுண்டை வீசியதில் சுமார் 88,000 பொதுமக்கள் அதே இடத்தில் கொல்லப்பட்டனர்.
* 2002 - தமிழ்நாடு, ஏர்வாடியில் நிகழ்ந்த தீ விபத்தில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 11 பெண்கள் உட்பட 28 மன நோயாளிகள் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 5 – ஆகஸ்ட் 4 – ஆகஸ்ட் 3
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Calcuttaflag.png

ஆகஸ்ட் 7: கோட் டிவார் - விடுதலை நாள் (1960)

* 1906 - கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி (படம்) உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.
* 1933 - ஈராக்கில் சுமைல் கிராமத்தில் 3,000 அசிரிய மக்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.
* 1941 - நோபல் பரிசு பெற்ற கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் இறப்பு.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 6 – ஆகஸ்ட் 5 – ஆகஸ்ட் 4
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Vijayanagara.jpg

ஆகஸ்ட் 8:

* 1509 - விஜயநகரப் பேரரசின் மன்னராக கிருஷ்ணதேவராயன் (படம்) முடிசூடினார். இவரது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகக் கருதப்படுகிறது.
* 1942 - பம்பாயில் கூட்டப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* 1992 - யாழ்ப்பாணம், அராலியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் இலங்கை இராணுவ வட பிராந்தியத் தளபதி கொப்பேக்கடுவ கொல்லப்பட்டார்.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 7 – ஆகஸ்ட் 6 – ஆகஸ்ட் 5
தொகுப்பு

பார் – பேச்சு – தொகு – வரலாறு
Nagasakibomb.jpg

ஆகஸ்ட் 9: சிங்கப்பூர் - விடுதலை நாள் (1965)

* 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நகரான நாகசாக்கியின் மீது அமெரிக்கா வீசிய கொழுத்த மனிதன் எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டு 39,000 வரையான பொதுமக்களை அதே இடத்தில் கொன்றது (படம்).
* 1965 - சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனி நாடாகியது.
* 1991 - யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் ஜூலை 10இல் ஆரம்பித்த ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். எனினும் 2000ம் ஆண்டில் மீளத் தாக்குதல் மேற்கொண்டு தளத்தைக் கைப்பற்றினர்.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 8 – ஆகஸ்ட் 7 – ஆகஸ்ட் 6
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
De Lannoy Surrender.JPG

ஆகஸ்ட் 10: ஈக்குவடோர் - விடுதலை நாள்

* 1741 - திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியுடனான போரில் டச்சுத் தளபதி இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் என்பவனைச் சிறைப்பிடித்தார் (படம்).
* 1790 - தமிழ் டச்சு அறிஞர் பிலிப்பு தெ மெல்லோ இறப்பு.
* 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசில் கிளர்ச்சியாளர்கள் அரண்மனையை முற்றுகையிட்டு பதினாறாம் லூயி மன்னனைக் கைது செய்தனர். பிரெஞ்சு முடியாட்சி தற்காலிகமாக முடிவுக்குக் வந்தது.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 9 – ஆகஸ்ட் 8 – ஆகஸ்ட் 7
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு

ஆகஸ்ட் 11: சாட் - விடுதலை நாள் (1960)

* 1954 - குமரி விடுதலைப் போராட்டம்: கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கு பற்றிய 16 தமிழர்கள் காவற்துறையினரால் சுடப்பட்டு மாண்டனர்.
* 1965 - கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வாட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
* 2006 - யாழ் குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 10 – ஆகஸ்ட் 9 – ஆகஸ்ட் 8
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
IBM PC 5150.jpg

ஆகஸ்ட் 12: அனைத்துலக இளையோர் நாள்

* 1981 - ஐபிஎம் தனி மேசைக் கணினி (படம்) வெளியிடப்பட்டது.
* 1985 - ஜப்பானில் இரண்டு பயணிகள் விமானங்கள் மோதிக் கொண்டதில் 520 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காப்பாற்றப்பட்டனர்.
* 1990 - வீரமுனைப் படுகொலைகள், 1990: அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
* 2005 - இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் கொழும்பில் அவரது வீட்டில், நீச்சல் தடாகத்தில் நீராடும் போது சுடப்பட்டு அடுத்த நாள் இறந்தார்.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 11 – ஆகஸ்ட் 10 – ஆகஸ்ட் 9
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Berlinermauer.jpg

ஆகஸ்ட் 13: சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் நாள், மத்திய ஆபிரிக்கக் குடியரசு - விடுதலை நாள்

* 1961 - ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு பேர்லினின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளை மூடி கிழக்கு ஜேர்மனியினர் தப்பிச் செல்லாவண்ணம் பேர்லின் சுவரைக் (படம்) கட்ட ஆரம்பித்தது.
* 2004 - புருண்டியில் கடும்பா அகதிகள் முகாமில் இருந்த 156 டூட்சி இன அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
* 2006 -யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணைவீச்சில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 12 – ஆகஸ்ட் 11 – ஆகஸ்ட் 10
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Cologne Cathedral.jpg

ஆகஸ்ட் 14: பாகிஸ்தான் - விடுதலை நாள் (1947)

* 1248 - உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றான ஜெர்மனியின் கொலோன் கதீட்ரல் (படம்) கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இது 1880 இலேயே கட்டி முடிக்கப்பட்டது.
* 1947 - பிரித்தானிய இந்தியாவில் இருந்து ஐக்கிய இராச்சியத்தின் நிர்வாகத்தின் கீழ் பாகிஸ்தான் விடுதலை அடைந்து பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இணைந்தது.
* 2006 - முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய விமானத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் கொல்லப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர்.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 13 – ஆகஸ்ட் 12 – ஆகஸ்ட் 11
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
சேக் முஸிபுர் ரஃமான்.jpg

ஆகஸ்ட் 15: இந்தியா (1947), தென் கொரியா (1948) - விடுதலை நாள்

* 1947 - இந்தியா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று பொதுநலவாய அமைப்பின் கீழ் தனி நாடாகியது. ஜவகர்லால் நேரு முதலாவது தலைமை அமைச்சர் ஆனார்.
* 1975 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமான் (படம்) மற்றும் அவரது குடும்பத்தினர் (ஷேக் ஹசீனா தவிர) அனைவரும் கொல்லப்பட்டனர்.
* 1977 - இலங்கையில் தமிழருக்கெதிரான இனப்படுகொலை ஆரம்பித்தது. கொழும்பிலும் பிற நகரங்களிலும் 400ற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு 10,000 பேர் வரை காயமடைந்தனர்.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 14 – ஆகஸ்ட் 13 – ஆகஸ்ட் 12
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Ramakrishna at studio.jpg

ஆகஸ்ட் 16: ரக்ஷா பந்தன் (2008)

* 1868 - பெருவில் இடம்பெற்ற 8.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 25,000 பேர் கொல்லப்பட்டனர்.
* 1886 - இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் (படம்) இறப்பு.
* 1987 - அமெரிக்காவின் மிச்சிகனில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர். ஒரு 4-வயதுக் குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 15 – ஆகஸ்ட் 14 – ஆகஸ்ட் 13
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
General Zia-ul-Haq.jpg

ஆகஸ்ட் 17: இந்தோனேசியா (1945), காபோன் (1960) - விடுதலை நாள்

* 1947 - இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிளிஃப் எல்லைக்கோடு வெளியிடப்பட்டது.
* 1962 - கிழக்கு ஜெர்மனியில் இருந்து பேர்லின் சுவரைக் கடந்து தப்பித்துச் செல்ல முயன்ற 18-வயது பேட்டர் ஃபெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சுவரைக் கடந்து செல்ல முயன்று இறந்த முதலாவது நபர் இவராவார்.
* 1988 - பாகிஸ்தான் ஜனாதிபதி சியா உல் ஹக் (படம்), பாகிஸ்தானின் அமெரிக்கத் தூதுவர் ஆகியோர் விமான விபத்தில் கொல்லப்பட்டனர்.
* 1999 - துருக்கியில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 16 – ஆகஸ்ட் 15 – ஆகஸ்ட் 14
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Bose.jpg

ஆகஸ்ட் 18:

* 1868 - பிரெஞ்சு வானியல் நிபுணர் பியேர் ஜான்சென் ஹீலியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார்.
* 1945 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (படம்) தாய்வானில் விமான விபத்தில் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
* 1971 - வியட்நாம் போர்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியன தமது படைகளை திரும்ப அழைக்க முடிவு செய்தன.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 16 – ஆகஸ்ட் 15
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Hồ Chí Minh Official Picture.jpg

ஆகஸ்ட் 19: ஆப்கானிஸ்தான் - விடுதலை நாள் (1919)

* 1945 - ஹோ சி மின் (படம்) தலைமையில் வியெட் மின் படைகள் வியட்நாமின் ஹனோய் நகரைக் கைப்பற்றினர்.
* 1960 - சோவியத்தின் ஸ்புட்னிக் 5 விண்கலம் பெல்கா, ஸ்ட்ரெல்கா என்ற இரு நாய்களையும், 42 எலிகளையும், பல வகைத் தாவரங்களையும் கொண்டு சென்றது.
* 1991 - ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றில் சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பசோவ் "கிறிமியா" என்ற சுற்றுலா மையத்தில் ஓய்வெடுக்கும் போது கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். எனினும் அவர் மூன்று நாட்களில் மீண்டும் பதவிக்கு வந்தார்.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 18 – ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 16
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Bundesarchiv Bild 183-R15068, Leo Dawidowitsch Trotzki.jpg

ஆகஸ்ட் 20:

* 1940 - மெக்சிக்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் ரஷ்யப் புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி (படம்) படுகாயமுற்று அடுத்த நாள் இறந்தார்.
* 1948 - இலங்கை நாடாளுமன்றத்தில் "இலங்கை குடியுரிமை சட்டம்" கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 10 இலட்சம் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.
* 2006 – கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்தில், அல்லைப்பிட்டியில் காணமால் போனார்கள்.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 19 – ஆகஸ்ட் 18 – ஆகஸ்ட் 17
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
ChandraNobel.png

ஆகஸ்ட் 21:

* 1770 - கப்டன் ஜேம்ஸ் குக் கிழக்கு அவுஸ்திரேலியாவில் தரையிறங்கி அதனை பெரிய பிரித்தானியாவுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டான்.
* 1911 - லியனார்டோ டா வின்சியின் ஓவியமான மோனா லிசா பாரிசின் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.
* 1986 - கமரூனில் நியோஸ் ஆற்றில் காபனீரொட்சைட்டு வளிமம் கசிந்ததில் 1,800 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
* 1995 - இந்திய வானியல்-இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் (படம்) இறப்பு.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 20 – ஆகஸ்ட் 19 – ஆகஸ்ட் 18
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Jean Henri Dunant.jpg

ஆகஸ்ட் 22:

* 1639 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னை) அமைத்தார்கள்.
* 1864 - ஹென்றி டியூனாண்ட் (படம்) தலைமையில் 12 ஐரோப்பிய நாடுகள் இணைந்து செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தார்கள்.
* 1991 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பிராவ்தா பத்திரிகை மூடப்பட்டது.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 20 – ஆகஸ்ட் 19 – ஆகஸ்ட் 18
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
MolotovRibbentropStalin.jpg

ஆகஸ்ட் 23:

* 1839 - ஹாங்காங், ஐக்கிய இராச்சியத்தினால் கைப்பற்றப்பட்டது.
* 1939 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியும் சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கைச்சாதிட்டனர் (படம்). எனினும் இரண்டு ஆண்டுகளில் ஜேர்மனி சோவியத் மீது படையெடுத்தது.
* 1975 - லாவோசில் கம்யூனிசப் புரட்சி வெற்றி பெற்றது.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 22 – ஆகஸ்ட் 21 – ஆகஸ்ட் 20
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Namakalkavi.jpg

ஆகஸ்ட் 24: உக்ரேன் - விடுதலை நாள் (1991)

* 1690 - கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது.
* 1814 - பிரித்தானியப் படையினர் வாஷிங்டன், டி.சி.யை முற்றுகையிட்டு வெள்ளை மாளிகை உட்படப் பல கட்டிடங்களுக்குத் தீ வைத்தனர்.
* 1972 - நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை (படம்) இறப்பு.
* 2006 - புளூட்டோ ஒரு கோள் அல்லவென அறிவிக்கப்பட்டது.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 23 – ஆகஸ்ட் 22 – ஆகஸ்ட் 21
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Vaariyar.jpg

ஆகஸ்ட் 25: உருகுவே - விடுதலை நாள் (1825)

* 1609 - இத்தாலிய வானியல் அறிஞர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியைக் காட்சிப்படுத்தினார்.
* 1906 - திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் (படம்) பிறப்பு.
* 1944 – இரண்டாம் உலகப் போர்: பாரிஸ் நாசி ஜெர்மனியிடம் இருந்து நட்பு நாடுகளால் விடுவிக்கப்பட்டது.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 24 – ஆகஸ்ட் 23 – ஆகஸ்ட் 22
தொகுப்பு

பார் – பேச்சு – தொகு – வரலாறு
Mother Teresa 1985 cropped.jpg

ஆகஸ்ட் 26:

* 1910 - அல்பேனிய உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி, நோபல் பரிசு பெற்ற அன்னை தெரேசா (படம்) பிறப்பு.
* 1920 - ஐக்கிய அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
* 1942 - உக்ரைனில் நாசி ஜெர்மனியர் காலை 2.30 மணிக்கு யூதர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியகற்றி குழந்தைகள், நோயாளிகள் உட்பட 500 பேரை கொன்று குவித்தனர்.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 25 – ஆகஸ்ட் 24 – ஆகஸ்ட் 23
தொகுப்பு

பார் – பேச்சு – தொகு – வரலாறு
Mountbatten.jpg

ஆகஸ்ட் 27: மால்டோவா - விடுதலை நாள் (1991)

* 1883 – இந்தோனீசியாவில் கிரகட்டோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,000 பேர் கொல்லப்பட்டனர்.
* 1896 - ஆங்கிலேயர்களுக்கும் சன்சிபாருக்கும் இடையில் இடம்பெற்ற போர் உலகில் மிககுறைந்த நேரத்தில் (09:02 - 09:40) நிகழ்ந்து முடிந்த போராகும்.
* 1979 - அயர்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த மவுண்ட்பேட்டன் பிரபு (படம்) ஐரியக் குடியரசு இராணுவத்தினரின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டர்.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 26 – ஆகஸ்ட் 25 – ஆகஸ்ட் 24
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Caldwell close1.jpg

ஆகஸ்ட் 28:

* 1845 - அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிவியல் இதழான சயன்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது.
* 1891 - பிரித்தானியத் தமிழறிஞரும், திராவிட மொழி நூலின் தந்தையுமான ராபர்ட் கால்டுவெல் (படம்) இறப்பு.
* 1988 - ஜெர்மனியில் வான வேடிக்கை விழா ஒன்றின் போது மூன்று விமானங்கள் மோதி பார்வையாளர்கள் மீது வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டு 346 பேர் படுகாயமடைந்தனர்.


அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 27 – ஆகஸ்ட் 26 – ஆகஸ்ட் 25
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Quebec Bridge - Pont de Québec.jpg

ஆகஸ்ட் 29: இந்தியா - தேசிய விளையாட்டு நாள்

* 1782 - திருகோணமலை கோட்டையை பிரெஞ்சுக்காரர் பிரித்தானியரிடம் இருந்து மீளக் கைப்பற்றினர்.
* 1907 - கனடாவில் கியூபெக் பாலம் (படம்) அமைக்கப்படும்போது இடிந்து வீழ்ந்ததில் 75 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
* 1991 - சோவியத் உயர்பீடம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கியது.
* 2005 - அமெரிக்காவின் லூசியானா முதல் புளோரிடா வரையான கரையோரப் பகுதிகளை சூறாவளி கத்ரீனா தாக்கியதில் 1,836 பேர் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 28 – ஆகஸ்ட் 27 – ஆகஸ்ட் 26
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Nsk.jpg

ஆகஸ்ட் 30: அனைத்துலக காணாமற்போனோர் நாள்

* 1918 – சோவியத் கம்யூனிசப் புரட்சித் தலைவர் விளாடிமிர் லெனின் சுடப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.
* 1957 - நகைச்சுவை நடிகர், பாடகர் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் (படம்) இறப்பு.
* 1999 - கிழக்குத் தீமோர் மக்கள் ஐக்கிய நாடுகள் அவையின் சார்பில் நடத்தப்பட்ட அனைத்து மக்கள் வாக்கெடுப்பில் இந்தோனீசியாவிடம் இருந்து விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 29 – ஆகஸ்ட் 28 – ஆகஸ்ட் 27
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Princess Diana 1985.jpg

ஆகஸ்ட் 31: விடுதலை நாள் - மலேசியா (1957), திரினிடாட் டொபாகோ (1962), கிர்கிஸ்தான் (1991)

* 1942 - மேற்கு உக்ரைனில் 5,000 யூதர்கள் பெல்செக் என்ற நாசி வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர்.
* 1978 - இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய புதிய அரசியல் யாப்பு வெளியிடப்பட்டது.
* 1997 - இளவரசி டயானா (படத்தில்) பாரிஸில் வாகன விபத்தில் கொல்லப்பட்டார்.

அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 30 – ஆகஸ்ட் 29 – ஆகஸ்ட் 28
Next Post Previous Post