சூன்

Jaffnalibrary.jpg

சூன் 1: பன்னாட்டு குழந்தைகள் நாள்

* 1981 - தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் (படம்) மே 31 நள்ளிரவில் சிங்களக் காவல் துறையினரால் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.
* 1979 - 90 ஆண்டுகளுக்குப் பின்னர் ரொடீசியாவில் முதற்தடவையாக கறுப்பினத்தவர்களின் அரசு பதவியேற்றது.
* 2001 - நேபாள மன்னர் பிரேந்திராவும் அவரது குடும்பமும் படுகொலை செய்யப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: மே 31 – மே 30 – மே 29
தொகுப்பு

பார் – பேச்சு – தொகு – வரலாறு
Marconi.jpg

சூன் 2:

* 1896 - மார்க்கோனி (படம்) தான் புதிதாகக் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
* 1924 - ஐக்கிய அமெரிக்காவில் பிறந்து அதன் எல்லைகளுக்குள் வாழும் அனைத்து பழங்குடிகளுக்கும் அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் சட்டமூலத்தை அதிபர் கால்வின் கூலிட்ஜ் அறிமுகப்படுத்தினார்.
* 1966 - நாசாவின் சேர்வெயர் 1 விண்கலம் சந்திரனில் இறங்கியது. சந்திரனில் மெதுவாக இறங்கிய முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும்.

அண்மைய நாட்கள்: சூன் 3 – சூன் 1 – மே 31
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
EdwardWhite.jpeg

சூன் 3:

* 1924 - தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி பிறப்பு.
* 1965 - எட்வேர்ட் வைட் (படம்) 21 நிமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆவார்.
* 1984 - அம்ரித்சரில் சீக்கியர்களின் புனிதப் பொற்கோயிலுள் இந்திய இராணுவத்தினர் புகுந்தனர்.


அண்மைய நாட்கள்: சூன் 4 – சூன் 2 – சூன் 1
தொகுப்பு

பார் – பேச்சு – தொகு – வரலாறு
Vvsiyer.jpg

சூன் 4: தொங்கா - விடுதலை நாள் (1970)

* 1707 - ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினர்.
* 1925 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ. வே. சு. ஐயர் (படம்) இறப்பு.
* 1987 - பூமாலை நடவடிக்கை: இலங்கையின் ஆளுகைக்குட்பட்ட வான்பரப்பில் அத்து மீறி உள்நுழைந்த இந்திய விமானங்கள் யாழ் குடாநாட்டின் மீது உணவுப் பொதிகளை வீசியது.
* 1989 - சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. பல மாணவர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: சூன் 5 – சூன் 3 – சூன் 2
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Sivakumar.jpg

சூன் 5: உலக சுற்றுச்சூழல் நாள்

* 1956 - இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
* 1974 - பொன். சிவகுமாரன் (படம்) உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.
* 1984 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியர்களின் பொற்கோயிலில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

அண்மைய நாட்கள்: சூன் 4 – சூன் 3 – சூன் 6
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
1944 NormandyLST.jpg

சூன் 6: தமிழீழ மாணவர் எழுச்சி நாள்

* 1711 - யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது.
* 1944 - இரண்டாம் உலகப் போர்: நோமண்டி சண்டை (படம்) ஆரம்பமானது.
* 1984 - இந்திய இராணுவத்தினர் அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதில் 576 பேர் கொல்லப்பட்டு 335 பேர் காயமுற்றனர்.
* 2004 - இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

அண்மைய நாட்கள்: சூன் 5 – சூன் 4 – சூன் 7
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Gandhi Sept1944.jpg

சூன் 7:

* 1494 - ஸ்பெயினும் போர்த்துக்கல்லும் தாம் புதிதாகக் கண்டுபிடித்த அமெரிக்க, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைத் தமக்கிடையே பகிர்ந்து கொள்ளும் உடன்பாட்டை எட்டினர்.
* 1692 - ஜமெய்க்காவில் மூன்றே நிமிடங்கள் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1600 பேர் கொல்லப்பட்டு 3000 பேர் படுகாயமடைந்தனர்.
* 1893 - மகாத்மா காந்தி (படம்) தனது முதலாவது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார்.

அண்மைய நாட்கள்: சூன் 6 – சூன் 5 – சூன் 8
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Lakagigar Iceland 2004-07-01.jpg

சூன் 8:

* 1783 - ஐஸ்லாந்தில் லாக்கி எரிமலை (படம்) வெடிக்க ஆரம்பித்ததில் எட்டு மாதங்களில் வரட்சி, மற்றும் வறுமை காரணமாக 9,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
* 1995 - படிவ நிரலாக்க மொழி பி.எச்.பி வெளியிடப்பட்டது.
* 2006 - நோர்வேயில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகுவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்தனர்.

அண்மைய நாட்கள்: சூன் 7 – சூன் 6 – சூன் 9
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
CareyEngraving.jpg

சூன் 9:

* 68 - ரோமப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான்.
* 1834 - பைபிளைப் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்த்த வில்லியம் கேரி (படம்) இறப்பு.
* 1903 - அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார்.

அண்மைய நாட்கள்: சூன் 8 – சூன் 7 – சூன் 10
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
NASA Mars Rover.jpg

சூன் 10: போர்த்துக்கல் - தேசிய நாள்

* 1801 - சிவகங்கையின் சின்னமருது "ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை உதறித்தள்ளி சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும்" என்ற தனது விடுதலைப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டார்.
* 2000 - இலங்கை அரசுக்கெதிராக விடுதலைப் புலிகள் தமது இரண்டாம் கட்ட ஈழப்போரை ஆரம்பித்தனர்.
* 2003 - நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி (படம்) செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

அண்மைய நாட்கள்: சூன் 9 – சூன் 8 – சூன் 11
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Phoebe cassini.jpg

சூன் 11:

* 1838 - ஈழத்து நவீன உரைநடை இலக்கியத்தின் முன்னோடி எம். சி. சித்திலெப்பை பிறப்பு.
* 1963 - தெற்கு வியட்நாமில் மத விடுதலையை வலியுறுத்தி திக் குவாங் டுக் என்ற பௌத்த மதகுரு தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார்.
* 2004 - நாசாவின் கசீனி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனிக் கோளின் ஃபீபி துணைக்கோளை (படம்) அண்டிச் சென்றது.

அண்மைய நாட்கள்: சூன் 10 – சூன் 9 – சூன் 12
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Mandelaza.jpg

சூன் 12: பிலிப்பீன்ஸ் - விடுதலை நாள் (1898)

* 1964 - தென்னாபிரிக்காவின் கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு (படம்) ஆயுள்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
* 1967 - சோவியத் ஒன்றியம் வெனேரா 4 விண்கலத்தை வெள்ளி கோளை நோக்கி ஏவியது. வேறொரு கோளின் வளிமண்டலத்துள் சென்று தகவல்களைப் பூமிக்கு அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
* 1991 - இலங்கை, மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: சூன் 11 – சூன் 10 – சூன் 13
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
New horizons Pluto.jpg

சூன் 13:

* 1917 - முதலாம் உலகப் போர்: லண்டன் நகர் மீது ஜெர்மனியப் போர் விமானங்கள் தாக்கியதில் 46 குழந்தைகள் உட்பட 162 பேர் கொல்லப்பட்டனர்.
* 1983 - பயனியர் 10 சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் ஆனது.
* 2006 - நியூ ஹரைசன்ஸ் (படம்) விண்கலம் தனது பயண வழியில் 101,867 கிமீ தூரத்தில் 132524 ஏபிஎல் என்ற சிறுகோளை சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது.

அண்மைய நாட்கள்: சூன் 12 – சூன் 11 – சூன் 14
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Arbeit macht frei sign, main gate of the Auschwitz I concentration camp, Poland - 20051127.jpg

சூன் 14:

* 1940 - போலந்தின் 728 போர்க் கைதிகள் நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை முகாமின் (படம்) முதலாவது சிறைக்கைதிகளாக சேர்க்கப்பட்டனர்.
* 1967 - மரைனர் 5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது.
* 1982 - போக்லாந்து தீவுகளில் நிலைகொண்டிருந்த ஆர்ஜெண்டீனப் படைகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்ததை அடுத்து போக்லாந்து போர் முடிவுக்கு வந்தது.

அண்மைய நாட்கள்: சூன் 13 – சூன் 12 – சூன் 15
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Benjamin Franklin by Jean-Baptiste Greuze.jpg

சூன் 15:

* 1752 - மின்னல் ஒரு மின்சாரம் என்பதை பெஞ்சமின் பிராங்கிளின் (படம்) நிறுவினார்.
* 1984 - யாழ்ப்பாணம் காரைநகரில் இலங்கையின் கடல் விமானம் ஒன்று விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
* 2007 - உலகின் மிகவும் நீளமான 34 கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்குக் கீழாக அமைக்கப்பட்டது.

அண்மைய நாட்கள்: சூன் 14 – சூன் 13 – சூன் 16
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Chittaranjan Das.JPG

சூன் 16: தென்னாபிரிக்கா - இளைஞர் நாள்

* 1883 - இங்கிலாந்தில் நாடக அரங்கில் இடம்பெற்ற சிறுவர் நிகழ்ச்ச்சி ஒன்றில் நெரிசலில் சிக்கி 183 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
* 1925 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் (படம்) இறப்பு.
* 1963 - உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரர் ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார்.

அண்மைய நாட்கள்: சூன் 15 – சூன் 14 – சூன் 17
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Ranilaxmibai-1.JPG

சூன் 17: ஐஸ்லாந்து - விடுதலை நாள் (1944)

* 1858 - இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை ராணி லட்சுமிபாய் (படம்) என்ற ஜான்சிராணி இறப்பு.
* 1911 - செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு சாவடைந்தான்.
* 1953 - பெர்லினில் கிழக்கு ஜெர்மனி அரசுக்கெதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சோவியத் படைகளினால் நசுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: சூன் 16 – சூன் 15 – சூன் 18
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
SallyRide.jpeg

சூன் 18:

* 1869 - இந்திய ரூபாய் அதன் துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது.
* 1983 - சலி றைட் (படம்) சாலஞ்சர் மீள்விண்கலத்தில் சென்று விண்ணுக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆனார்.
* 1985 - விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.

அண்மைய நாட்கள்: சூன் 17 – சூன் 16 – சூன் 19
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Maximilian I of Mexico portrait standing.jpg

சூன் 19:

* 1867 - மெக்சிகோவின் மன்னன் முதலாம் மாக்சிமிலியன் (படத்தில்) மரண தண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டான்.
* 1870 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அனைத்து தெற்கு மாநிலங்களும் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்ட பின்னர், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு முடிவுக்கு வந்தது.
* 1961 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து குவெய்த் விடுதலை பெற்றது.

அண்மைய நாட்கள்: சூன் 18 – சூன் 17 – சூன் 20
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Suratha.jpg

சூன் 20: உலக அகதிகள் நாள்

* 1858 - இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 முடிவுக்கு வந்தது.
* 1971 - ஈழத்துக் கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தி இறப்பு.
* 1877 - அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வணிகத் தொலைபேசிச் சேவையை கனடாவின் ஹமில்ட்டன் நகரில் ஆரம்பித்தார்.
* 2006 - தமிழகக் கவிஞர் சுரதா (படம்) இறப்பு.

அண்மைய நாட்கள்: சூன் 19 – சூன் 18 – சூன் 21
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Plutonian system.jpg

சூன் 21: கனடா - தேசிய பழங்குடிகள் நாள்

* 1945 - இரண்டாம் உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுற்றது.
* 1990 - மன்னாரில் கொண்டச்சி இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.
* 2006 - புளூட்டோவின் (படம்) புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட துணைக்கோள்கள் நிக்ஸ் மற்றும் ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது.

அண்மைய நாட்கள்: சூன் 20 – சூன் 19 – சூன் 22
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
80 Napoleon II.jpg

சூன் 22:

* 1658 - போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.
* 1815 - நெப்போலியன் பொனபார்ட் இரண்டாம் தடவையாக பதவியிழந்தான். 4 வயதான இரண்டாம் நெப்போலியன் (படம்) இரண்டு வாரங்களுக்கு பிரான்சின் பேரரசனானான்.
* 1941 - சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான லித்துவேனியாவின் விடுதலைப் போர் ஆரம்பமான வேளை நாசி செருமனியினர் சோவியத் ஒன்றியத்தை முற்றுகையிட்டனர்.

அண்மைய நாட்கள்: சூன் 21 – சூன் 20 – சூன் 23
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Clive.jpg

சூன் 23: எஸ்தோனியா - வெற்றி நாள்

* 1658 - இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் கைப்பற்றினர்.
* 1757 - இந்தியாவில் பலாசி என்ற இடத்தில் வங்காளத்தின் கடைசி நவாப் சிராஜ் உல் டாவுலா தலைமையிலான இந்திய இராணுவத்தினரை (படம்) பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் தோற்கடித்தனர்.
* 1985 - அயர்லாந்தில் அட்லாண்டிக் கடலின் மேல் பறந்து கொண்டிருந்த இந்திய விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 329 பேர் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: சூன் 22 – சூன் 21 – சூன் 24
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Chitti.jpg

சூன் 24:

* 1894 - பிரெஞ்சு அரசுத் தலைவர் மரீ பிரான்சுவா சாடி கார்னோ இத்தாலிய அரச எதிர்ப்பாளன் ஒருவனால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
* 1948 - சோவியத் ஒன்றியம் ஜெர்மனியின் தமது கட்டுப்பாட்டிலுள்ள பெர்லினின் மேற்குப் பகுதியுடன் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சுக்கள் வசம் இருந்த பகுதிகளுடனான தரைவழித் தொடர்புகளைத் துண்டித்தது.
* 2006 - மணிக்கொடி எழுத்தாளர், திரைப்பட விமர்சகர் சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் (படம்) இறப்பு.

அண்மைய நாட்கள்: சூன் 23 – சூன் 22 – சூன் 25
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Progress M-52.jpg

சூன் 25: மொசாம்பிக் - விடுதலை நாள்

* 1944 - இரண்டாம் உலகப் போர்: நோர்டிக் நாடுகளின் மிகப் பெரும் சமர் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக பின்லாந்தில் ஆரம்பமானது.
* 1967 - நம் உலகம் என்ற உலகின் முதலாவது செய்மதித் தொலைக்காட்சி நிகழ்ச்சியை 30 நாடுகளில் 400 மில்லியன் பேர் கண்டு களித்தனர்.
* 1997 - புரோகிரஸ் (படம்) என்ற ஆளில்லா விண்கலம் ரஷ்ய விண்வெளி ஆய்வுக்கூடம் மீருடன் மோதியது.

அண்மைய நாட்கள்: சூன் 24 – சூன் 23 – சூன் 26
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
CN Tower.JPG

சூன் 26: சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள், மடகஸ்கார் - விடுதலை நாள்

* 1975 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார்.
* 1976 - உலகிலேயே தனித்து நிற்கும் அதி உயர் கோபுரமான கனடாவின் சி.என் கோபுரம் (படம்) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

அண்மைய நாட்கள்: சூன் 25 – சூன் 24 – சூன் 27
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
KLIA MTB&Tower.jpg

சூன் 27:

* 1954 - இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.
* 1954 - உலகின் முதலாவது அணுக்கரு ஆற்றல் உற்பத்தி மையம் மாஸ்கோவுக்கு அருகில் ஓப்னின்ஸ்க் என்னும் இடத்தில் அமைக்கப்பட்டது.
* 1998 - கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (படம்) திறக்கப்பட்டது.

அண்மைய நாட்கள்: சூன் 26 – சூன் 25 – சூன் 28
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Armisticetrain.jpg

சூன் 28:

* 1914 - ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசன் பிரான்ஸ் பேர்டினண்ட், மற்றும் அவனது மனைவி சோஃபி இருவரும் சேர்பியாவில் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு இதுவே காரணியாக அமைந்தது.
* 1919 - பாரிசில் போர்நிறுத்த ஒப்பந்தம் (படம்) ஜெர்மனிக்கும் நேச நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டு முதல் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
* 1995 - ஈழப்போர்: மண்டைதீவு இராணுவப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர்.

அண்மைய நாட்கள்: சூன் 27 – சூன் 26 – சூன் 29
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Mir on 12 June 1998edit1.jpg

சூன் 29: செஷெல் - விடுதலை நாள் (1976)

* 1814 - மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர்.
* 1880 - பிரான்ஸ் டெஹீட்டி தீவைக் கைப்பற்றியது.
* 1995 - அட்லாண்டிஸ் விண்கலம் ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதற்தடவையாக இணைந்தது (படம்).

அண்மைய நாட்கள்: சூன் 28 – சூன் 27 – சூன் 30
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Albert Einstein Head.jpg

சூன் 30: கொங்கோ - விடுதலை நாள் (1960)

* 1905 - சார்புக் கோட்பாட்டுத் தத்துவத்தை அறிமுகப்படுத்தும் ஐன்ஸ்டீனின் (படம்) இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது.
* 1971 - சோவியத்தின் சோயுஸ் 11 விண்கலத்தில் ஏற்பட்ட காற்றுக் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர்.
* 1997 - ஹாங்காங் நாட்டின் அதிகாரம் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்குக் கைமாறியது.

அண்மைய நாட்கள்: சூன் 29 – சூன் 28 – சூலை 1
தொகுப்பு


Next Post Previous Post