அக்டோபர்
அக்டோபர் 1: விடுதலை நாள்: சைப்பிரஸ்; நைஜீரியா (இரண்டும் 1960); துவாலு (1978); பலாவு (1994).
* 1799 - புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டான்.
* 1854 - இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.
* 1949 - மா சே துங் (படம்) மக்கள் சீனக் குடியரசை அறிவித்தார்.
* 1953 - ஆந்திரா மாநிலம் உருவாக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 30 – செப்டம்பர் 29 – செப்டம்பர் 28
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
காமராஜர்.jpg
அக்டோபர் 2: விடுதலை நாள்: கினி (1958), காந்தி ஜெயந்தி, அனைத்துலக வன்முறையற்ற நாள்
* 1904 - இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாத்திரி பிறப்பு.
* 1941 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனிப் படைகள் மாஸ்கோவுக்கு எதிரான தமது மூன்று மாதத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
* 1968 - மெக்சிகோவில் இடம்பெற்ற மாணவர்களின் அமைதிப் போராட்டத்தின் முடிவில் நூற்றக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
* 1975 - இந்திய அரசியல் தலைவர், தமிழ்நாட்டு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 1 – செப்டம்பர் 30 – செப்டம்பர் 29
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Pravda-otsovruk-c.jpg
அக்டோபர் 3: ஜெர்மனி - இணைப்பு நாள் (1990)
* 1908 - பிராவ்டா (படம்) செய்திப்பத்திரிகையின் முதல் இதழ் லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது சகாக்களினால் வியென்னாவில் வெளியிடப்பட்டது.
* 1981 - வட அயர்லாந்தில் "மேஸ்" சிறைச்சாலையில் ஐரிஷ் குடியரசு இராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.
* 1990 - ஜெர்மன் சனநாயகக் குடியரசு மேற்கு ஜெர்மனியுடன் இணைந்தது.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 2 – அக்டோபர் 1 – செப்டம்பர் 30
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Francisbyelgreco.jpg
அக்டோபர் 4: லெசோத்தோ - விடுதலை நாள் (1966), அசிசியின் புனித பிரான்சிசின் (படம்) திருவிழா, உலக விலங்கு நாள்
* 1582 - கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக அக்டோபர் 15 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
* 1957 - முதலாவது செயற்கைச் செய்மதி ஸ்புட்னிக் 1 சோவியத் ஒன்றியத்தால் பூமியைச் சுற்றி வர விண்ணுக்கு ஏவப்பட்டது.
* 1957 - பண்டா - செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக பௌத்த மத குருக்களால் கண்டிக்கு நடைப்பயணம் நடத்தப்பட்டது.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 3 – அக்டோபர் 2 – அக்டோபர் 1
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Vallalar.jpg
அக்டோபர் 5: போர்த்துக்கல் - குடியரசு நாள் (1910)
* 1795 - இலங்கையின் மன்னார்ப் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர்.
* 1823 - இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் இராமலிங்க அடிகளார் (படம்) பிறப்பு.
* 1864 - இந்தியாவின் கல்கத்தா நகரத்தில் இடம்பெற்ற சூறாவளியினால் சுமார் 60,000 பேர் கொல்லப்பட்டனர்.
* 1987 - விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் 12 பேர் இந்தியப் படையின் காவலில் இருக்கும்போது நஞ்சருந்தி மரணமானார்கள்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 4 – அக்டோபர் 3 – அக்டோபர் 2
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
51pegasi-b.jpg
அக்டோபர் 6:
* 1847 - சாமுவேல் பிஸ்க் கிறீன் பருத்தித்துறையை வந்தடைந்தார்.
* 1889 - தோமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது அசையும் படத்தைக் காண்பித்தார்.
* 1976 - தாய்லாந்தில் அரசுக்கெதிராக இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
* 1995 - சூரியனுக்கு அடுத்ததாக கோளைத் தன்னகத்தே கொண்ட பெரும் விண்மீன் 51 பெகாசி (படம்) கண்டுபிடிக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 5 – அக்டோபர் 4 – அக்டோபர் 3
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Moon PIA00304.jpg
அக்டோபர் 7:
* 1949 - ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டது.
* 1959 - சோவியத் விண்கலம் லூனா 3 முதற்தடவையாக எடுத்த சந்திரனின் அதி தூரத்திய புகைப்படங்களை (படம்) பூமிக்கு அனுப்பியது.
* 2001 - ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா மூன்று முறை விமானத்தாக்குதல் நடத்தியது. வலிமையான கட்டிடங்களையும் ஊடுருவித் தாக்கும் டொமஹாக் ரக ஏவுகணைகளை ஏவியது.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 6 – அக்டோபர் 5 – அக்டோபர் 4
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Pattucottai.jpg
அக்டோபர் 8:
* 1959 - கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (படம்) இறப்பு.
* 1967 - கெரில்லா தலைவர் சே குவேராவும் அவரது சகாக்களும் பொலிவியாவில் கைதானார்கள்.
* 2005 - காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மொத்தம் 74,500 பேர் கொல்லப்பட்டு 106,000 பேர் காயமடைந்தனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 7 – அக்டோபர் 6 – அக்டோபர் 5
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
CheHigh.jpg
அக்டோபர் 9: உகாண்டா - விடுதலை நாள் (1962)
* 1888 - வாஷிங்டன் நினைவுச் சின்னம், அக்காலத்தில் உலகின் உயரமான கட்டிடம், வாஷிங்டன் டிசியில் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
* 1910 - மாறுவேடத்தில் உலகப் பயணம் மேற்கொண்ட பின்னர் வ. வே. சு. ஐயர் புதுச்சேரி திரும்பினார்.
* 1967 - கெரில்லா தலைவர் சே குவேரா (படம்) பொலிவியாவில் புரட்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 8 – அக்டோபர் 7 – அக்டோபர் 6
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Papanasamsivan.jpg
அக்டோபர் 10: பீஜி - தேசிய நாள் (1970); தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்
* 1943 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியரின் பிடியில் இருந்த சிங்கப்பூரின் துறைமுகம் மீதான தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக 57 அப்பாவிகள் ஜப்பானியர்களினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர்.
* 1973 - கருநாடக, மற்றும் தமிழிசை அறிஞர் பாபநாசம் சிவன் (படம்) இறப்பு.
* 1987 - விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 9 – அக்டோபர் 8 – அக்டோபர் 7
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Pawan23.jpg
அக்டோபர் 11:
* 1865 - ஜமெய்க்காவில் நூற்றுக்கும் அதிகமான கறுப்பின மக்கள் அரசுக்கெதிரான எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இது அன்றைய பிரித்தானிய அரசால் நசுக்கப்பட்டதில் நானூறுக்கும் அதிகமான கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
* 1958 - நாசாவின் முதலாவது விண்கலம் பயனியர் 1 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இது சந்திரனை அடையாமலே மீண்டும் இரண்டு நாட்களில் பூமியில் வீழ்ந்து எரிந்தது.
* 1987 - விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை பவான் நடவடிக்கை (படம்) என்ற பெயரில் போரை ஆரம்பித்தனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 10 – அக்டோபர் 9 – அக்டோபர் 8
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Voskhod 1 and 2.png
அக்டோபர் 12: எக்குவடோரியல் கினி - விடுதலை நாள் (1968)
* 1492 - கொலம்பஸ் கிழக்காசியாவைத் தான் அடைந்ததாக எண்ணி, கரிபியனின் பஹாமாசில் கால் வைத்தார்.
* 1798 - இலங்கை பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
* 1964 - சோவியத் ஒன்றியம் வஸ்கோத் 1 (படம்) விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இதுவே ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்களை விண்ணுக்குக் கொண்டு சென்ற முதலாவது கப்பலாகும்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 11 – அக்டோபர் 10 – அக்டோபர் 9
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Claudius (M.A.N. Madrid) 01.jpg
அக்டோபர் 13:
* 54 - ரோமப் பேரரசன் குளோடியஸ் (படம்) அவனது நான்காவது மனைவியினால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டதினால் அவளது மகன் நீரோ ரோமப் பேரரசனானான்.
* 1943 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் புதிய அரசு நட்பு நாடுகளின் பக்கம் சாய்ந்ததைத் தொடர்ந்து அச்சு அணி நாடுகள் மீது போரை அறிவித்தது.
* 1972 - உருகுவாய் விமானம் ஒன்று ஆர்ஜெண்டீனாவுக்கும் சிலிக்கும் இடையில் அண்டீஸ் மலைகளில் மோதியது. அதில் பயணம் செய்த 45 பேர்களில் 16 பேர் மட்டும் 10 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 12 – அக்டோபர் 11 – அக்டோபர் 10
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Ambedkar P25.gif
அக்டோபர் 14: உலகத் தர நிர்ணய நாள்
* 1948 - இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.
* 1956 - இந்தியத் தலித் தலைவர் அம்பேத்கர் (படம்) தனது 385,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்.
* 1964 - லியோனிட் பிரெஷ்னெவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நாயகமும் ஆனார். நிக்கிட்டா குருசேவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
* 1968 - விண்ணிலிருந்தான முதலாவது நேரடி தொலைக்காட்சி அஞ்சல் அப்போலோ 7 விண்கலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டது.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 13 – அக்டோபர் 12 – அக்டோபர் 11
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
A P J Abdul Kalam.jpg
அக்டோபர் 15:
* 1582 - இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகள் யூலியின் நாட்காட்டியில் இருந்து கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறிய முதலாவது உலக நாடுகளாகின.
* 1917 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனிக்காக உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட டச்சு நடன மாது மாட்ட ஹரி பாரிசில் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாள்.
* 1931 இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் (படம்)பிறப்பு.
* 1966 - ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகளை வென்றெடுக்கவென கருஞ்சிறுத்தைக் கட்சி என்ற பெயரில் மார்க்சிய இயக்கம் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 14 – அக்டோபர் 13 – அக்டோபர் 12
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Liaquat Ali Khan.jpg
அக்டோபர் 16: உலக உணவு நாள்
* 1799 - பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டான்.
* 1951 - பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் லியாகத் அலி கான் (படம்) ராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
* 2003 - தமிழ் விக்கிப்பீடியாவில் முதலாவது கட்டுரை சிரின் எபாடி பற்றி எழுதப்பட்டது.
* 2006 - 1987 இல் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இணைக்கப்பட்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லாது என இலங்கை உயர் நீதிமன்றம் அறிவித்தது.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 15 – அக்டோபர் 14 – அக்டோபர் 13
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Mother Teresa.jpg
அக்டோபர் 17: உலக வறுமை ஒழிப்பு நாள்
* 1979 - அன்னை தெரேசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
* 1981 - புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான கண்ணதாசன் இறப்பு.
* 1995 - யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றும் நோக்கில் இலங்கை இராணுவம் ரிவிரெச நடவடிக்கையை ஆரம்பித்தது.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 16 – அக்டோபர் 15 – அக்டோபர் 14
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Regency transistor radio.jpg
அக்டோபர் 18: ஐக்கிய அமெரிக்கா - அலாஸ்கா நாள்
* 1867 - ரஷ்யாவிடம் இருந்து அலாஸ்கா மாநிலத்தை ஐக்கிய அமெரிக்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது.
* 1922 - பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
* 1954 - முதலாவது டிரான்சிஸ்டர் வானொலி (படம்) அறிமுகப்படுத்தப்பட்டது.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 17 – அக்டோபர் 16 – அக்டோபர் 15
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Lightmatter chimp.jpg
அக்டோபர் 19: நியுயே: அரசியலமைப்பு நாள் (1974)
* 1812 - பிரான்சின் நெப்போலியன் பொனபார்ட் மாஸ்கோவில் இருந்து பின்வாங்கினான்.
* 1976 - சிம்பன்சி (படம்) உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது.
* 2000 - பிபிசியின் யாழ்ப்பாண நிருபர் நிமலராஜன் துணை இராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்.
* 2001 - 400 அகதிகளை ஏற்றிச் சென்ற இந்தோனீசியப் படகு கிறிஸ்துமஸ் தீவில் கவிழ்ந்ததில் 353 பேர் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 18 - அக்டோபர் 17 – அக்டோபர் 16
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Guru nanak.jpg
அக்டோபர் 20:
* 1469 - சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ் (படம்) பிறப்பு.
* 1973 – சிட்னி ஒப்பேரா மாளிகையை இரண்டாம் எலிசபெத் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.
* 1982 - மாஸ்கோவில் இடம்பெற்ற பன்னாட்டு உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 66 பேர் இறந்தனர்.
* 2004 - உபுண்டு லினக்ஸ் வெளியிடப்பட்டது.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 19 – அக்டோபர் 18 – அக்டோபர் 17
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Kragujevac oktobar 1941.jpg
அக்டோபர் 21:
* 1879 - தொமஸ் எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்குமிழைப் பரிசோதித்தார். இது 13 மணி நேரம் எரிந்தது.
* 1944 - கிறகுஜேவாச் படுகொலைகள் (படம்): நாசி ஜெர்மனியப் படைகள் 7000 சேர்பியரைப் படுகொலை செய்தனர்.
* 1987 - ஈழப்போர்: யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இந்திய இராணுவத்தினர் சுட்டதில் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 20 – அக்டோபர் 19 – அக்டோபர் 18
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
AMathavaiya.jpg
அக்டோபர் 22:
* 1925 - தமிழக எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாசிரியர் அ. மாதவையா (படம்) இறப்பு.
* 1943 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் காசெல் நகரம் மீது பிரித்தானிய விமானப்படை குண்டுவீச்சு நடத்தியதில் 10,000 பேர் கொல்லப்பட்டு 150,000 பேர் வீடுகளை இழந்தனர்.
* 2007 - எல்லாளன் நடவடிக்கை: இலங்கையின் அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் கரும்புலிகள் 21 பேரும், இலங்கை படையினர் 14 பேரும் கொல்லப்பட்டு பல வானூர்திகள் அழிக்கப்பட்டன.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 21 – அக்டோபர் 20 – அக்டோபர் 19
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Lenin 1920.jpg
அக்டோபர் 23: ஹங்கேரி - தேசிய நாள் (1956)
* 1917 - லெனின் (படம்) அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.
* 1941 - உக்ரேனின் "ஒடேசா" நகரில் 19,000 யூதர்கள், ருமேனியா மற்றும் ஜெர்மன் படையினரால் உயிருடன் எரிக்கப்பட்டனர். அடுத்த நாள் மேலும் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
* 1956 - ஹங்கேரியப் புரட்சி: ஹங்கேரியில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராகவும் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். இது நவம்பர் 4இல் நசுக்கப்பட்டது.
* 2001 - வட அயர்லாந்தில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் ஐரியக் குடியரசு இராணுவம் ஆயுதக் களைவில் ஈடுபட்டது. அண்மைய நாட்கள்: அக்டோபர் 22 – அக்டோபர் 21 – அக்டோபர் 20
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Periyamaruthu.jpg
அக்டோபர் 24: ஐக்கிய நாடுகள் நாள் (1945), சாம்பியா - விடுதலை நாள் (1964)
* 1801 - பெரிய மருது (படம்), அவரது சகோதரர் மற்றும் 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தார் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
* 1960 - சோவியத் ஒன்றியத்தின் பாய்க்கனூர் விண்தளத்தில் ஏவுகணை வெடித்ததில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
* 1994 - கொழும்பில் தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்கா உட்பட 52 பேர் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 23 – அக்டோபர் 22 – அக்டோபர் 21
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Winter Palace on Night.jpg
அக்டோபர் 25: கசக்ஸ்தான் - குடியரசு நாள் (1990)
* 1917 - ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி (பழைய ஜூலியன் நாட்காட்டியின் படி), இடம்பெற்றது. விளாடிமிர் லெனின் தலைமையில் கம்யூனிஸ்டுகள் குளிர்கால அரண்மனையை (படம்) கைப்பற்றினர்.
* 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கூட்டு நாடுகளிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து சீனக் குடியரசு தாய்வானை இணைத்துக் கொண்டது.
* 2000 - பிந்துனுவேவா படுகொலைகள்: இலங்கையில் பண்டாரவளை சிறைச்சாலை மீது சிங்களவர்கள் நடத்திய தாக்குதலில் தமிழ் அரசியல் கைதிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 24 – அக்டோபர் 23 – அக்டோபர் 22
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Kashmir-Accession-Document-a.jpg
அக்டோபர் 26: ஆஸ்திரியா - தேசிய நாள் (1955)
* 1876 - இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான முடிவு பக்கிங்ஹாம் அரசரால் எடுக்கப்பட்டது.
* 1947 - காஷ்மீர் மகாராஜா "ஹரி சிங்" இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்கச் சம்மதித்தார் (படம்).
* 2002 - மொஸ்கோவில் நாடக மாளிகை ஒன்றில் செச்னியா தீவிரவாதிகள் மூன்று நாட்களாகப் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்தது. 150 பணயக் கைதிகளும் 50 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 25 – அக்டோபர் 24 – அக்டோபர் 23
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Akbar - Project Gutenberg eText 14134.jpg
அக்டோபர் 27: விடுதலை நாள் - செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் (1979), துருக்மெனிஸ்தான் (1991)
* 1605 - முகலாய மன்னன் அக்பர் (படம்) இறப்பு.
* 1795 - ஸ்பானியக் குடியேற்றநாடுகளுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டது.
* 1990 - வட இலங்கை முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம்: யாழ்ப்பாண மாவட்டத்தைத் தாயகமாக கொண்ட முஸ்லிம்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 26 – அக்டோபர் 25 – அக்டோபர் 24
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Statofliberty.jpg
அக்டோபர் 28:
* 1834 - சுவான் ஆற்றுக் குடியேற்றத்தில் (தற்போதய மேற்கு அவுஸ்திரேலியாவில்) பழங்குடிகளுக்கும் ஆங்கிலேயக் குடியேற்ற வாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பல பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.
* 1886 - நியூ யார்க்கில் அமெரிக்க அதிபர் குரோவர் கிளீவ்லாண்ட் பிரான்ஸ் அன்பளிப்புச் செய்த விடுதலைச் சிலையைத் (படம்) திறந்து வைத்தார்.
* 1941 - லித்துவேனியாவின் கௌனாஸ் என்ற இடத்தில் நாசி ஜேர்மனியர் 9,000 யூதர்களை சுட்டுக் கொன்று அதே இடத்தில் புதைத்தனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 27 – அக்டோபர் 26 – அக்டோபர் 25
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Ponniyinselvan.jpg
அக்டோபர் 29: துருக்கி - குடியரசு நாள் (1923)
* 1863 - சுவிட்சர்லாந்தில் கூடிய 16 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர்.
* 1929 - "கருப்பு செவ்வாய்" என அழைக்கப்பட்ட இந்நாளில் நியூ யோர்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. பெரும் பொருளியல் வீழ்ச்சி ஆரம்பமானது.
* 1950 - அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் (படம்) தொடர் வரலாற்றுப் புதினம் முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்தது.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 28 – அக்டோபர் 27 – அக்டோபர் 26
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
PMThevar.gif
அக்டோபர் 30:
* 1963 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் (படம்) இறப்பு.
* 1964 - இலங்கையின் மலையகத் தமிழர்களை நாடு கடத்தும் சட்டமாக சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
* 1995 - கனடாவில் இருந்து பிரிந்து செல்ல கியூபெக் மாநிலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு 50.6% to 49.4% என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 29 – அக்டோபர் 28 – அக்டோபர் 27
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Indira2.jpg
அக்டோபர் 31: ஹாலோவீன்
* 1931 - தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.
* 1961 - ஜோசப் ஸ்டாலினின் உடல் மாஸ்கோவில் உள்ள லெனின் நினைவகத்தில் இருந்து அகற்றப்பட்டது.
* 1984 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி (படம்) இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 2000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 30 – அக்டோபர் 29 – அக்டோபர் 28