நவம்பர்

நவம்பர் 1: அன்டிகுவா பர்புடா - விடுதலை நாள் (1981), அல்ஜீரியா - தேசிய நாள்

* 1755 - போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 60,000-90,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
* 1904 - இலங்கையின் வட மாகாணத்துக்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபட்டது.
* 1954 - புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.
* 1959 - தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் தியாகராஜ பாகவதர் (படம்) இறப்பு.

அண்மைய நாட்கள்: அக்டோபர் 31 – அக்டோபர் 30 – அக்டோபர் 29
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Tamilselvan.jpg

நவம்பர் 2:

* 1834 - முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரீசியஸ் சென்றனர்.
* 2000 - பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர்.
* 2007 - இலங்கை வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் (படம்) உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: நவம்பர் 1 – அக்டோபர் 31 – அக்டோபர் 30
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Laika1.jpg

நவம்பர் 3: பனாமா (1903), டொமினிக்கா (1978), மைக்குரோனீசியா (1986) - விடுதலை நாட்கள்

* 1957 - உலகில் முதன் முதலில் மிருகம் ஒன்றை, லைக்கா (படம்) என்னும் நாயை சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கப்பலில் விண்வெளிக்கு அனுப்பியது.
* 1963 - தி.மு.க. செயற்குழு திராவிட நாடு, தனிநாடு கோஷத்தைக் கைவிடுவதாக அறிவித்தது.
* 1988 - இலங்கையின் தமிழ்க் குழுவான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரால் மாலை தீவுகள் அரசை அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி இந்திய இராணுவத்தினரால் 24 மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.

அண்மைய நாட்கள்: நவம்பர் 2 – நவம்பர் 1 – அக்டோபர் 31
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Mgrshotat.jpg

நவம்பர் 4:

* 1956 - ஹங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் படைகள் ஹங்கேரியை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் கொல்லப்பட்டு லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.
* 1967 - நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கில் (படம்) நடிகர் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
* 1979 - ஈரானியத் தீவிரவாதிகள் டெஹ்ரானில் ஐக்கிய அமெரிக்கத் தூதராலயத்தை முற்றுகையிட்டு 53 அமெரிக்கர்கள் உட்பட 90 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.

அண்மைய நாட்கள்: நவம்பர் 3 – நவம்பர் 2 – நவம்பர் 1
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Jaan Anvelt 1925.jpg

நவம்பர் 5:

* 1556 - முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. பேரரசர் அக்பர் இந்தியாவின் அரசனானார்.
* * 1814 - இலங்கையின் வடக்கு மற்றும் வட-மேற்குப் பகுதிகளில் இடம்பெற்ற பெரும் சுழற்காற்று யாழ்ப்பாணம், விடத்தல் தீவு, மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தின.
* 1917 - அக்டோபர் புரட்சி: எஸ்தோனியாவில் கம்யூனிசத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் (படம்) புரட்சியாளர்களுக்குத் தலைமை வகித்துச் சென்று அரசைக் கைப்பற்றினார்.

அண்மைய நாட்கள்: நவம்பர் 4 – நவம்பர் 3 – நவம்பர் 2
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Abraham Lincoln head on shoulders photo portrait.jpg

நவம்பர் 6: - அரசியலமைப்பு நாள் - டொமினிக்கன் குடியரசு (1844), தஜிகிஸ்தான் (1994)

* 1759 - பாளையக்காரர் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலைக் கோட்டையை இசபல்கான் கான்சாகிப் என்பவனின் படைகள் வெடிகுண்டுகள் கொண்டு தாக்கின. ஆனாலும் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை.
* 1860 - ஆபிரகாம் லிங்கன் (படம்) அமெரிக்காவின் 16வது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது தலைவராவார்.
* 1943 - இந்தியாவின் வங்காளத்தில் "நவகாளி"யில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக மகாத்மா காந்தி கல்கத்தாவில் இருந்து நவகாளி வந்து சேர்ந்தார்.

அண்மைய நாட்கள்: நவம்பர் 5 – நவம்பர் 4 – நவம்பர் 3
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Vaariyar.jpg

நவம்பர் 7: பெலருஸ் - அக்டோபர் புரட்சி நாள் (1917)

* 1917 - அக்டோபர் புரட்சி: விளாடிமிர் லெனின் தலைமையில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ரஷ்யாவின் இடைக்கால அரசைக் கவிழ்த்தனர்.
* 1941 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் மருத்துவக் கப்பல் ஜெர்மனிய விமானங்களின் குண்டுவீச்சினால் மூழ்கியதில் அகதிகள், காயமடைந்த போர்வீரர்கள் உட்பட 5,000 பேர் வரையில் இதில் கொல்லப்பட்டனர்.
* 1993 - முருக பக்தர் திருமுருக கிருபானந்த வாரியார் (படம்) இறப்பு.

அண்மைய நாட்கள்: நவம்பர் 6 – நவம்பர் 5 – நவம்பர் 4
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Wilhelm Conrad Röntgen (1845--1923).jpg

நவம்பர் 8:

* 1895 - எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் (படம்) எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.
* 1923 - மியூனிக் நகரில் ஹிட்லர் தலைமையில் ஜேர்மனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
* 1958 - ஈழத்துத் தமிழறிஞர் சி. கணேசையர் இறப்பு.
* 2006 - வாகரை குண்டுத்தாக்குதல்: மட்டக்களப்பில் இலங்கை இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அண்மைய நாட்கள்: நவம்பர் 7 – நவம்பர் 6 – நவம்பர் 5
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
JacktheRipperPuck.jpg

நவம்பர் 9: கம்போடியா - விடுதலை நாள் (1953)

* 1799 - பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்கு வந்தது. நெப்போலியன் பொனபார்ட் பிரான்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.
* 1888 - லண்டனில் கிழிப்பர் ஜேக் (படம்) என்ற மர்ம நபர் தனது கடைசிக் கொலையைச் செய்தான்.
* 1921 - ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக அல்பேர்ட் ஐன்ஸ்டீன் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
* 1938 – நாசி இட்லரின் யூதப் பகைமைக் கொள்கையின் ஒரு பகுதியாக செருமனியில் கிறிஸ்டல் இரவு நிகழ்வு இடம்பெற்றது. 90 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 25,000 பேர் கைது செய்யப்பட்டு நாசி வதை முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
* 2006 - தமிழ் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் மறைவு.

அண்மைய நாட்கள்: நவம்பர் 8 – நவம்பர் 7 – நவம்பர் 6
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Raviraj.jpg

நவம்பர் 10:

* 1970 - சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு "லூனாகோட்" எனப்படும் தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது.
* 1971 - கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் புனோம் பென் நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 44 பேரைக் கொன்று பல விமானங்களை அழித்தனர்.
* 2006 - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் (படம்) கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அண்மைய நாட்கள்: நவம்பர் 9 – நவம்பர் 8 – நவம்பர் 7
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Armisticetrain.jpg

நவம்பர் 11: பொதுநலவாய நாடுகள் - நினைவுறுத்தும் நாள், விடுதலை நாள் - போலந்து (1918), அங்கோலா (1975)

* 1887 - ஐக்கிய அமெரிக்காவின் சிக்காகோ நகரில் மே 4, 1886இல் இடம்பெற்ற தொழிலாளர் எழுச்சி நாளில் கைது செய்யப்பட்ட தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
* 1918 - பிரான்சில் "கொம்பியேன் காடு" என்ற இடத்தில் தொடருந்துப் பெட்டி ஒன்றில் ஜேர்மனிக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது (படம்). முதலாம் உலகப் போர் 11:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.
* 1933 - யாழ் பொது நூல் நிலையம் அமைக்கப்பட்டது.
* 2004 - யாசர் அரபாத் இறந்து விட்டதாக பாலஸ்தீன விடுதலை இயக்கம் அறிவித்தது.

அண்மைய நாட்கள்: நவம்பர் 10 – நவம்பர் 9 – நவம்பர் 8
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Satguru Sivaya Subramuniyaswami (Gurudeva).jpg

நவம்பர் 12: பஹாய் நம்பிக்கை - புனித நாள் (பஹாவுல்லா பிறந்த நாள்)

* 1927 - மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.
* 1927 - லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சோவியத்தின் முழு அதிகாரத்தையும் ஜோசப் ஸ்டாலின் தனதாக்கிக் கொண்டார்.
* 1991 - கிழக்குத் திமோரில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இந்தோனீசிய இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர்.
* 2001 - இந்து அமெரிக்க ஆன்மிகவாதி சத்குரு சிவாய சுப்ரமணியசுவாமி (படம்) இறப்பு.

அண்மைய நாட்கள்: நவம்பர் 11 – நவம்பர் 10 – நவம்பர் 9
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Rohana2.jpg

நவம்பர் 13:

* 1970 - கிழக்குப் பாகிஸ்தானில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியில் 500,000 பேர் வரையில் உயிரிழந்தனர். இது 20ம் நூற்றாண்டின் மிகப் பெரும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது.
* 1971 - ஐக்கிய அமெரிக்காவின் மரைனர் 9 விண்கப்பல் செவ்வாய்க் கோளை சுற்றி வந்தது. இதுவே பூமியை விட வேறொரு கோளைச் சுற்றிவந்த முதலாவது விண்கப்பலாகும்.
* 1989 - தென்னிலங்கையில் உலப்பனையில் தனது தோட்ட வீட்டில் முதல் நாள் கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் றோகண விஜேவீர (படம்) இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* 1993 - யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீது இலங்கை விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

அண்மைய நாட்கள்: நவம்பர் 12 – நவம்பர் 11 – நவம்பர் 10
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Bundesarchiv Bild 183-61849-0001, Indien, Otto Grotewohl bei Ministerpräsident Nehru cropped.jpg

நவம்பர் 14: இந்தியா: குழந்தைகள் நாள்

* 1889 - முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு (படம்) பிறப்பு.
* 1922 - பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.
* 1971 - நாசாவின் மரைனர் 9 விண்கலம் செவ்வாய் கோளை சென்றடைந்தது. இதுவே பூமியை விட வேறொரு கோளின் செயற்கைச் செய்மதியாகச் செயற்பட்ட முதலாவது விண்கலமாகும்.

அண்மைய நாட்கள்: நவம்பர் 13 – நவம்பர் 12 – நவம்பர் 11
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Tea estate workers.jpg

நவம்பர் 15: பிரேசில்: குடியரசு நாள் (1889)

* 1505 - போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்ஸ் டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
* 1948 - இலங்கையில் மலையகத் தமிழரின் (படம்) வாக்குரிமை பறிக்கப்பட்டது.
* 1949 - நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்டே மகாத்மா காந்தியைக் கொலை செய்ததற்காகத் தூக்கிலிடப்பட்டனர்.
* 1988 - பாலஸ்தீன நாடு பாலஸ்தீன தேசிய கவுன்சிலினால் அறிவிக்கப்பட்டது.

அண்மைய நாட்கள்: நவம்பர் 14 – நவம்பர் 13 – நவம்பர் 12
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Flag of UNESCO.svg

நவம்பர் 16: உலக சகிப்புத் தன்மை நாள்

* 1945 - பனிப்போர்: ஐக்கிய அமெரிக்காவின் இராணுவம் ஜெர்மனியின் அறிவியலாளர்கள் 88 பேரை தனது வானியல் தொழில்நுட்பத்தில் உதவுவதற்காக இரகசியமாக நாட்டுக்குள் அனுமதித்தது.
* 1945 - யுனெஸ்கோ (படம்) நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
* 1965 - சோவியத்தின் வெனேரா 3 விண்கப்பல் வெள்ளி கோளுக்கு செலுத்தப்பட்டது. வேறொரு கோளின் தரையை அடைந்த முதலாவது விண்கப்பல் இதுவாகும்.

அண்மைய நாட்கள்: நவம்பர் 15 – நவம்பர் 14 – நவம்பர் 13
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Tenzin Gyatzo foto 1.jpg

நவம்பர் 17: அனைத்துலக மாணவர் நாள்

* 1869 - ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் கப்பல் போக்குவரத்தை ஏற்படுத்தும் முகமாக மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.
* 1950 - டென்சின் கியாட்சோ, 14வது தலாய் லாமா (படம்) தனது 15வது வயதில் திபெத்தின் அரசுத் தலைவரானார்.
* 1970 - சோவியத்தின் லூனாக்கொட் 1 சந்திரனில் தரையிறங்கியது. தொலைவில் இருந்து இயக்கக்கூடிய தானியங்கி ஒன்று வேறோர் உலகத்தில் தரையிறங்கியது இதுவே முதற் தடவை ஆகும்.

அண்மைய நாட்கள்: நவம்பர் 16 – நவம்பர் 15 – நவம்பர் 14
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Voc1.jpg

நவம்பர் 18: லாத்வியா - விடுதலை நாள் (1918)

* 1936 - கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்பிள்ளை (படம்) இறப்பு.
* 1943 - உக்ரேனில் லூவிவ் என்ற இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த 6,000 யூதர்கள் நாசி ஜெர்மனியரினால் கொல்லப்பட்டனர்.
* 1978 - கயானாவில் மக்கள் கோயிலில் இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலை நிகழ்வுகளில் 270 குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.

அண்மைய நாட்கள்: நவம்பர் 17 – நவம்பர் 16 – நவம்பர் 15
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Indira2.jpg

நவம்பர் 19: மாலி: விடுதலை நாள்

* 1493 - கொலம்பஸ் முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா எனப் பெயர் சூட்டினார்.
* 1917 - முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி (படம்) பிறப்பு.
* 1941 - இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் சிட்னி, மற்றும் கோர்மரன் என்ற போர்க்கப்பல்களுக்கிடையில் நிகழ்ந்த மோதலில் இரண்டும் மூழ்கியதில் 645 அவுஸ்திரேலிய, 77 நாசி ஜெர்மனியக் கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
* 1991 - தமிழீழ காவல்துறை நிறுவப்பட்டது.

அண்மைய நாட்கள்: நவம்பர் 18 – நவம்பர் 17 – நவம்பர் 16
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Zarya from STS-88.jpg

நவம்பர் 20: அனைத்துலக குழந்தைகள் நாள், வியட்நாம் - ஆசிரியர் நாள்

* 1977 - ஆறு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின்னர் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் றோகண விஜேவீர விடுதலை செய்யப்பட்டார்.
* 1998 - பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சாரியா (படம்) கசக்ஸ்தானில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
* 1999 - மன்னார் மடு தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 42 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: நவம்பர் 19 – நவம்பர் 18 – நவம்பர் 17
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Edison and phonograph edit2.jpg

நவம்பர் 21: உலகத் தொலைக்காட்சி நாள்

* 1877 - ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராஃப் (படம்) என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தோமஸ் எடிசன் அறிவித்தார்.
* 1905 - ஆற்றலுக்கும் திணிவுக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை அல்பேர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்டார்.
* 1970 - நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் சர் சி. வி. இராமன் மறைவு.

அண்மைய நாட்கள்: நவம்பர் 20 – நவம்பர் 19 – நவம்பர் 18
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
John F. Kennedy, White House color photo portrait.jpg

நவம்பர் 22: லெபனான் - விடுதலை நாள் (1943)

* 1943 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானை போரில் தோற்கடிக்கும் வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, மற்றும் சீனத் தலைவர்கள் சியாங் காய்-செக் ஆகியோர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சந்தித்தனர்.
* 1963 - அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப். கென்னடி (படம்) டெக்சாசில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* 1974 - ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் பார்வையாளர் தகுதியைப் பெற்றது.

அண்மைய நாட்கள்: நவம்பர் 21 – நவம்பர் 20 – நவம்பர் 19
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Manchester Martyrs 02.jpg

நவம்பர் 23:

* 1867 - இரண்டு ஐரியர்களைச் சிறையிலிருந்து வெளியேற உதவியமைக்காக மூன்று ஐரியத் தேசியவாதிகள் (படம்) இங்கிலாந்து, மான்செஸ்டரில் தூக்கிலிடப்பட்டனர்.
* 1971 - மக்கள் சீனக் குடியரசின் பிரதிநிதிகள் முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
* 1978 - இலங்கை கிழக்கு மாகாணத்தில் பெரும் சூறாவளி தாக்கியது.
* 1990 - ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர்.

அண்மைய நாட்கள்: நவம்பர் 22 – நவம்பர் 21 – நவம்பர் 20
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Origin of Species title page.jpg

நவம்பர் 24:

* 1642 - ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாஸ்மானியா எனப் பெயர் பெற்றது.
* 1859 - சார்ல்ஸ் டார்வின் தனது உயிரினங்களின் தோற்றம் (படம்) நூலை வெளியிட்டார். இதன் பிரதிகள் அனைத்தும் முதல் நாளிலேயே முழுவதுமாக விற்பனையாகின.
* 1926 - பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் பொறுப்பை அன்னையிடம் ஒப்படைத்து விட்டு அரவிந்தர் இளைப்பாறினார்.

அண்மைய நாட்கள்: நவம்பர் 23 – நவம்பர் 22 – நவம்பர் 21
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
U-Thant-10617.jpg

நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கும் அனைத்துலக நாள்; சுரிநாம் - விடுதலை நாள் (1975)

* 1120 - இங்கிலாந்து மன்னன் முதலாம் என்றியின் மகன் "வில்லியம் அடெலின்" பயணித்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் கொல்லப்பட்டான்.
* 1839 - இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
* 1936 - சப்பான், செருமனி ஆகியன சோவியத் ஒன்றியம் தம் மீது படையெடுத்தால் அதனைக் கூட்டாக எதிர்கொள்ள பெர்லின் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.
* 1974 - முன்னாள் ஐநா செயலாளர், பர்மியரான ஊ தாண்ட் (படம்) மறைவு.

அண்மைய நாட்கள்: நவம்பர் 24 – நவம்பர் 23 – நவம்பர் 22
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Sirponramanathan.jpg

நவம்பர் 26:

* 1922 - பண்டைய எகிப்திய பாரோ துட்டன்காமன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் இக்கல்லறைக்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே.
* 1930 - இலங்கையின் தேசியத் தலைவர் சேர் பொன்னம்பலம் இராமநாதன் (படம்) மறைவு.
* 1957 - சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார்.

அண்மைய நாட்கள்: நவம்பர் 25 – நவம்பர் 24 – நவம்பர் 23
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
AlfredNobel adjusted.jpg

நவம்பர் 27: தமிழ் ஈழம் - மாவீரர் நாள்

* 1895 - பாரிசில் அல்பிரட் நோபல் (படம்) நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.
* 1964 - ஜவகர்லால் நேரு அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் ரஷ்யாவையும் கேட்டுக் கொண்டார்.
* 2006 - கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்' என்ற அங்கீகாரத்தை கனடிய நாடாளுமன்றம் வழங்கியது.

அண்மைய நாட்கள்: நவம்பர் 26 – நவம்பர் 25 – நவம்பர் 24
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Teheran conference-1943.jpg

நவம்பர் 28: விடுதலை நாள் - அல்பேனியா (1912), மவுரித்தேனியா (1960)

* 1520 - தென்னமெரிக்கா ஊடாகப் பயணித்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் பசிபிக் பெருங்கடலை அடைந்தான். இவனே அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடலை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவான்.
* 1943 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியையும், ஜப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகிய மூவரும் டெஹ்ரானில் சந்தித்தார்கள். (படம்)
* 1979 - நியூசிலாந்து விமானம் ஒன்று அண்டார்டிக்காவின் எரெபஸ் எரிமலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 257 பேரும் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: நவம்பர் 27 – நவம்பர் 26 – நவம்பர் 25
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
EdisonPhonograph.jpg

நவம்பர் 29:

* 1877 - தோமஸ் அல்வா எடிசன் போனோகிராஃப் (படம்) என்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.
* 1947 - பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐநா பொதுச் சபை முடிவெடுத்தது.
* 1961 - நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது பூமியை இரு தடவைகள் சுற்றிவந்து புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது).
* 1989 - திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் மருதகாசி மறைவு.

அண்மைய நாட்கள்: நவம்பர் 28 – நவம்பர் 27 – நவம்பர் 26
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Crystal Palace.PNG

நவம்பர் 30: பார்படோஸ் - விடுதலை நாள் (1966)

* 1872 - உலகின் முதலாவது அனைத்துலக காற்பந்துப் போட்டி கிளாஸ்கோவில் ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது.
* 1936 - லண்டனில் பளிங்கு அரண்மனை (படம்) தீயினால் அழிந்தது.
* 1962 - பர்மாவைச் சேர்ந்த யூ தாண்ட் ஐக்கிய நாடுகள் சபையின் 3வது செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டார்.

அண்மைய நாட்கள்: நவம்பர் 29 – நவம்பர் 28 – நவம்பர் 27
தொகுப்பு


Next Post Previous Post