செப்டம்பர்
FrThaninayagam.jpg
செப்டம்பர் 1: லிபியா - புரட்சி நாள் (1969), உஸ்பெகிஸ்தான் - விடுதலை நாள் (1991)
* 1939 - நாசி ஜேர்மனி போலந்தைத் தாக்கி இரண்டாம் உலகப் போரை ஆரம்பித்து வைத்தது.
* 1969 - முவம்மர் அல்-கதாஃபி புரட்சியின் மூலம் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
* 1980 - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தாபகர் தனிநாயகம் அடிகள் (படம்) இறப்பு.
* 1985 - அமெரிக்க, பிரெஞ்சு கூட்டு முயற்சியில் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அண்மைய நாட்கள்: ஆகஸ்ட் 31 – ஆகஸ்ட் 30 – ஆகஸ்ட் 29
தொகுப்பு
பார் –
பேச்சு – தொகு – வரலாறு
Hồ Chí Minh Official Picture.jpg
செப்டம்பர் 2: வியட்நாம் - குடியரசு நாள் (1945)
* 1666 - லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் 10,000 கட்டடங்கள் சேதமாயின.
* 1945 - இரண்டாம் உலகப் போர்: பசிபிக் போர் முடிவுக்கு வந்தது. ஜப்பானின் கடைசி அதிகாரபூர்வமான சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் "மிசூரி" என்ற அமெரிக்கக் கப்பலில் நிகழ்ந்தது.
* 1951 - எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சியை அமைத்தார்.
* 1969 - வியட்நாமின் கம்யூனிசப் புரட்சித் தலைவர் ஹோ சி மின் (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 1 – ஆகஸ்ட் 31 – ஆகஸ்ட் 30
தொகுப்பு
பார் –
பேச்சு – தொகு – வரலாறு
Beslan school no 1 victim photos.jpg
செப்டம்பர் 3: கட்டார் - விடுதலை நாள் (1971)
* 301 - உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும், உலகின் மிகவும் பழமையான குடியரசுமான சான் மரீனோ உருவாக்கப்பட்டது.
* 1976 – நாசாவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கி அதன் மிகக் கிட்டவான வண்ணப் படங்களை பூமிக்கு அனுப்பியது.
* 2004 - ரஷ்யாவில் பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள் (படம்) முடிவுக்கு வந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 344 பேர் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 2 – செப்டம்பர் 1 – ஆகஸ்ட் 31
தொகுப்பு
பார் –
பேச்சு – தொகு – வரலாறு
Franz Xaver Winterhalter Napoleon III.jpg
செப்டம்பர் 4:
* 1781 - லாஸ் ஏஞ்சலஸ் நகரம் ஸ்பானிய குடியேற்றக்காரரினால் அமைக்கப்பட்டது.
* 1870 - பிரான்ஸ் மன்னன் மூன்றாம் நெப்போலியன் (படம்) முடி துறந்தான். அரசி யூஜின் தனது பிள்ளைகளுடன் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினாள்.
* 1888 - தான் கண்டுபிடித்த படம்பிடிகருவிக்கு ஜார்ஜ் ஈஸ்ட்மன் "கோடாக்" என்பதை வர்த்தகக் குறியீடாக காப்புரிமை பெற்றுக் கொண்டார்.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 3 – செப்டம்பர் 2 – செப்டம்பர் 1
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Mother Teresa 1985 cropped.jpg
செப்டம்பர் 5: இந்தியா - ஆசிரியர் நாள்
* 1972 - ஜேர்மனியில் மியூனிக்கில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய இஸ்ரேலிய வீரர்களின் மீது பாலஸ்தீனத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
* 1990 - மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
* 1997 - அன்னை தெரேசா (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 4 – செப்டம்பர் 3 – செப்டம்பர் 2
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Ferdinand Magellan.jpg
செப்டம்பர் 6: சுவாசிலாந்து - விடுதலை நாள் (1968)
* 1522 - பேர்டினண்ட் மகலனின் (படம்) விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் ஸ்பெயினை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது.
* 1965 - இந்தியா பாகிஸ்தானின் லாகூர் நகரைத் தாக்கியது. இந்திய-பாகிஸ்தான் போர் முழு அளவில் ஆரம்பமானது.
* 1990 - யாழ்ப்பாணக் கோட்டை மீதான புலிகளின் முற்றுகையின் போது இலங்கையின் குண்டுவீச்சு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 5 – செப்டம்பர் 4 – செப்டம்பர் 3
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
LondonBombedWWII full.jpg
செப்டம்பர் 7: பிரேசில் - விடுதலை நாள் (1822)
* 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய மக்களை அச்சுறுத்தும் வகையில் ஜெர்மனியினர் லண்டன் நகரில் 300 தொன் கனவெடிகுண்டுகளையும், 13,000 எரிகுண்டுகளையும் வீசினர் (படம்). 57 நாட்கள் தொடர்ந்து குண்டுவீச்சு இடம்பெற்றது.
* 1977 - பனாமா கால்வாய் தொடர்பாக பனாமாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவுக்குக் கையளிப்பதாக அமெரிக்கா உறுதி தந்தது.
* 1978 - கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 6 – செப்டம்பர் 5 – செப்டம்பர் 4
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Beata vergine maria della mercede.jpg
செப்டம்பர் 8: உலக எழுத்தறிவு நாள், மசடோனியக் குடியரசு - விடுதலை நாள் (1991), அன்னை மரியாள் (படம்) பிறப்பு.
* 1900 - சூறாவளி கால்வெஸ்டன் டெக்சாசைத் தாக்கியதில் 8,000 பேர் கொல்லப்பட்டனர்.
* 1941 - இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் நகரின் மீது ஜேர்மனி படையெடுத்தது. மொத்தம் 1 மில்லியன் லெனின்கிராட் மக்கள் இப்போரின் போது கொல்லப்பட்டனர்.
* 1945 - சோவியத் படைகள் வட கொரியாவை ஒரு மாதத்திற்கு முன்னர் கைப்பற்றியமைக்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் தரையிறங்கின.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 7 – செப்டம்பர் 6 – செப்டம்பர் 5
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Anandacoomaswamy.jpg
செப்டம்பர் 9: தஜிகிஸ்தான் - விடுதலை நாள் (1991), வட கொரியா - குடியரசு நாள் (1948)
* 1799 - பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.
* 1947 - இந்தியக் கலைகளை ஆராய்ந்த கலாயோகி ஆனந்த குமாரசுவாமி (படம்) இறப்பு.
* 1990 - சத்துருக்கொண்டான் படுகொலை: மட்டக்களப்பில் 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 8 – செப்டம்பர் 7 – செப்டம்பர் 6
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Winterhalter Elisabeth thumbnail.jpg
செப்டம்பர் 10: கிப்ரல்டார் - தேசிய நாள் (1967)
* 1759 - பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.
* 1898 - ஆஸ்திரியாவின் அரசி எலிசபெத் (படம்) சுவிட்சர்லாந்தில் கொலை செய்யப்பட்டார்.
* 1983 - மகாத்மா காந்தி பற்றிய ஆவணப்படத்தை முதன் முதலில் தயாரித்த ஏ. கே. செட்டியார் இறப்பு.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 9 – செப்டம்பர் 8 – செப்டம்பர் 7
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
National Park Service 9-11 Statue of Liberty and WTC fire.jpg
செப்டம்பர் 11: இலத்தீன் அமெரிக்கா - ஆசிரியர் நாள்
* 1921 - மகாகவி சுப்பிரமணிய பாரதியார் இறப்பு.
* 1945 - இரண்டாம் உலகப் போர்: போர்ணியோத் தீவில் ஜப்பானியரினால் அடைக்கப்பட்டிருந்த போர்க்கைதிகளை ஆஸ்திரேலியப் படையினர் விடுவித்தனர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 2,000 பேர் செப்டம்பர் 15இல் கொல்லப்படவிருந்தனர்.
* 2001 - நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் (படம்) மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 10 – செப்டம்பர் 9 – செப்டம்பர் 8
தொகுப்பு
பார் –
பேச்சு – தொகு – வரலாறு
Selassie.jpg
செப்டம்பர் 12: எதியோப்பியா - தேசியப் புரட்சி நாள் (1974), கேப் வேர்ட் - தேசிய நாள்
* 1948 - முகமது அலி ஜின்னா மறைந்த அடுத்த நாள் இந்திய இராணுவம் பாகிஸ்தானின் ஐதராபாத் மாநிலத்துள் நுழைந்து ஐந்து நாட்களுக்குள் அதனைக் கைப்பற்றியது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
* 1959 - லூனா 2 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் ஏவியது. சந்திரனை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
* 1974 - எதியோப்பியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மன்னர் ஹைலி செலாசி (படம்) பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 11 – செப்டம்பர் 10 – செப்டம்பர் 9
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Bill Clinton, Yitzhak Rabin, Yasser Arafat at the White House 1993-09-13.jpg
செப்டம்பர் 13:
* 1948 - இந்தியப் படைகள் ஐதராபாத்தை இந்திய ஆளுகையின் கீழ் கொண்டு வந்தன.
* 1949 - இலங்கை, இத்தாலி பின்லாந்து, ஐசுலாந்து, ஜோர்தான் ஆகிய 6 நாடுகள் ஐநாவில் உறுப்பிடம் பெறுவதை நிறுத்த சோவியத் ஒன்றியம் தனது தடை அதிகாரத்தைப் பயன்படுத்தியது.
* 1993 – நோர்வேயில் இடம்பெற்ற கமுகத் (இரகசியத்) தொடர்ப் பேச்சுவார்த்தைகளை அடுத்து பாலசுத்தீனத் தலைவர் யாசர் அரபாத்துக்கும் இசுரேலியப் பிரதமர் இட்சாக் ரபீனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது (படம்).
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 12 – செப்டம்பர் 11 – செப்டம்பர் 10
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Patrice Lumumba Photo 1960 b.gif
செப்டம்பர் 14:
* 1752 – கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டதில் பிரித்தானியா பதினொரு நாட்களை இழந்தது. செப்டம்பர் 2இற்குப் பின்னர் நேரடியாக செப்டம்பர் 14இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
* 1812 - நெப்போலியனின் படைகள் மொஸ்கோவினுள் நுழைந்தனர். ரஷ்யப் படைகள் நகரை விட்டு விலகியதும் மாஸ்கோவில் தீ பரவ ஆரம்பித்தது.
* 1962 - கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் இராணுவத் தளபதி ஜோசப் மோபுட்டு இராணுவப் புரட்சியை மேற்கொண்டு பிரதமர் பத்திரிசு லுமும்பாவை (படம்) அரசு பதவியில் இருந்து அகற்றினார்.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 13 – செப்டம்பர் 12 – செப்டம்பர் 11
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Peraringnar Anna.jpg
செப்டம்பர் 15: கொஸ்டா ரிக்கா, எல் சல்வடோர், குவாத்தமாலா, ஹொண்டுராஸ், நிக்கராகுவா விடுதலை நாள் (1821), அனைத்துலக மக்களாட்சி நாள்
* 1835 – சார்ள்ஸ் டார்வின் கடல் வழியே காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.
* 1909 - பேரறிஞர் அண்ணா (படம்) பிறப்பு
* 1950 - தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்த மறைமலை அடிகள் இறப்பு.
* 1987 - திலீபன் நீராகாரம் இன்றி உண்ணாநோன்பைத் தொடங்கினார்.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 14 – செப்டம்பர் 13 – செப்டம்பர் 12
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
எம் எஸ் சுப்புலட்சுமி.jpg
செப்டம்பர் 16: மெக்சிக்கோ (1810), பப்புவா நியூ கினி (1975) விடுதலை நாள்
* 1916 - இந்திய கருநாடக இசைப் பாடகி எம். எஸ். சுப்புலட்சுமி (படம்) பிறப்பு.
* 1963 - மலாயா, சிங்கப்பூர், மற்றும் போர்ணியோவின் ஒரு பகுதி ஆகியன இணைந்து மலேசியா உருவாக்கப்பட்டது.
* 1982 - லெபனானில் பாலஸ்தீன அகதி முகாம்களில் லெபனானிய இராணுவத் துணைப்படையினரால் குறைந்தது 700 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 15 – செப்டம்பர் 14 – செப்டம்பர் 13
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Thanthai Periyar.jpg
செப்டம்பர் 17: அங்கோலா - தேசிய வீரர்கள் நாள்
* 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தில் கூட்டமைப்பினருக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கனக்கானோர் காயமடைந்தனர். இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய போராகும்.
* 1879 - தந்தை பெரியார் (படம்) பிறப்பு.
* 1953 - தமிழறிஞர் திரு வி. க. இறப்பு.
* 2004 - இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 16 – செப்டம்பர் 15 – செப்டம்பர் 14
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Dag Hammarskjold.jpg
செப்டம்பர் 18: சிலி - தேசிய நாள் (1810)
* 1502 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது நான்காவது கடைசியுமான கடற்பயணத்தின் போது கொஸ்டா ரிக்காவில் தரையிறங்கினார்.
* 1961 - ஐநாவின் பொதுச்செயலர் டாக் ஹமாஷெல்ட் (படம்) கொங்கோவில் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்றச் சென்றபோது விமான விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
* 1988 - பர்மாவில் அரசியலமைப்பு நிறுத்திவைக்கப்பட்டது. மக்களாட்சிக்கு ஆதரவானோர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 17 – செப்டம்பர் 16 – செப்டம்பர் 15
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Kbsundarambal.jpg
செப்டம்பர் 19: சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் - விடுதலை நாள் (1983)
* 1658 - யாழ்ப்பாணத்தில் ரோமன் கத்தோலிக்க மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக டச்சு அரசால் அறிவிக்கப்பட்டது.
* 1893 - சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.
* 1980 - தமிழிசை, நாடகக் கலைஞர் கே. பி. சுந்தராம்பாள் (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 18 – செப்டம்பர் 17 – செப்டம்பர் 16
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Annie Besant 1895.gif
செப்டம்பர் 20:
* 1519 - பேர்டினண்ட் மகலன் 270 பேருடன் ஸ்பெயின் நாட்டிலிருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார்.
* 1857 - கிழக்கிந்தியக் கம்பனிக்கு விசுவாசமான படைகள் டெல்லியைக் கைப்பற்றினர். சிப்பாய் எழுச்சி முடிவுக்கு வந்தது.
* 1933 - பெண் விடுதலைக்காகப் போராடிய அன்னி பெசண்ட் அம்மையார் (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 19 – செப்டம்பர் 18 – செப்டம்பர் 17
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Rajani2.jpg
செப்டம்பர் 21: உலக அமைதி நாள், விடுதலை நாள்: மோல்ட்டா (1964), பெலீஸ் (1981), ஆர்மேனியா (1991)
* 1792 - பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு அமைக்கப்பட்டது.
* 1989 - இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜினி திரணகம (படம்) யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* 2003 - கலிலியோ விண்கலத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு அது ஜுப்பிட்டர் கோளின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதவிடப்பட்டது.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 20 – செப்டம்பர் 19 – செப்டம்பர் 18
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
100px
செப்டம்பர் 22: பல்கேரியா (1908), மாலி (1960) - விடுதலை நாள்
* 1914 - முதலாம் உலகப் போர்: ஜேர்மனியின் எம்டன் நாசக்காரிக் கப்பல் (படம்) இரவு 9:30 மணிக்கு சென்னைத் துறைமுகத்தையும் மற்றும் நகரப் பகுதிகளையும் குண்டுவீசித் தாக்கியது.
* 1965 - இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் தொடர்பாக தொடங்கிய போர் ஐநாவின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று முடிவுக்கு வந்தது.
* 1995 - நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலைகள்: யாழ் நாகர்கோயில் பாடசாலை மீது 12:50 மணிக்கு இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் 30 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 21 – செப்டம்பர் 20 – செப்டம்பர் 19
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
PUChinnappa.jpg
செப்டம்பர் 23: சவுதி அரேபியா - தேசிய நாள் (1932)
* 1941 - நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சுவாயுக் கொலைகள் முதற்தடவையாகப் பரிசோதிக்கப்பட்டன.
* 1951 - தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் பி. யு. சின்னப்பா (படம்) இறப்பு.
* 1983 - இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியற் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பித்தனர்.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 22 – செப்டம்பர் 21 – செப்டம்பர் 20
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
செப்டம்பர் 24: கினி பிசாவு - விடுதலை நாள் (1973), திரினிடாட் டொபாகோ - குடியரசு நாள் (1976)
* 622 - முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்தார்.
* 1799 - கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
* 2006 - தென்னிந்திய நடிகை பத்மினி (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 23 – செப்டம்பர் 22 – செப்டம்பர் 21
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Swrd bandaranaike.gif
செப்டம்பர் 25:
* 1950 - தென் கொரியாவின் தலைநகரம் சியோல் ஐநா படையினர் வட கொரியாவிடம் இருந்து கைப்பற்றினர்.
* 1959 - இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா (படம்) புத்த பிக்கு ஒருவரினால் சுடப்பட்டுப் படுகாயமடைந்து அடுத்த நாள் மரணமானார்.
* 1983 - வட அயர்லாந்தில் 38 ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகள் சிறையை உடைத்து தப்பினர்.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 24 – செப்டம்பர் 23 – செப்டம்பர் 22
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
திலீபன்.jpg
செப்டம்பர் 26:
* 1959 - கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை இறப்பு.
* 1984 - ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கை சீனாவிடம் கையளிக்க ஒப்புக் கொண்டது.
* 1987 - தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் திலீபன் (படம்) இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தா உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்தார்.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 25 – செப்டம்பர் 24 – செப்டம்பர் 23
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Relativity3 Walk of Ideas Berlin.JPG
செப்டம்பர் 27: உலக சுற்றுலா நாள்
* 1905 - அல்பேர்ட் ஐன்ஸ்டைன் முதற் தடவையாக E=mc² (படம்) என்ற சமன்பாட்டை அறிமுகப்படுத்தினார்.
* 1996 - ஆப்கானிஸ்தானில் முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரைக் கைப்பற்றி முன்னாள் அதிபர் முகமது நஜிபுல்லாவை காபூல் நகரத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டுக் கொன்றனர்.
* 1998 - கிளிநொச்சி நகரம் விடுதலைப் புலிகளினால் ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கை மூலம் வெற்றி கொள்ளப்பட்டது.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 26 – செப்டம்பர் 25 – செப்டம்பர் 24
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Alexander Fleming.jpg
செப்டம்பர் 28: தாய்வான் - ஆசிரியர் நாள்
* 1795 - யாழ்ப்பாணத்தை ஜெனரல் ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படைகள் டச்சுக்களிடம் இருந்து கைப்பற்றினர்.
* 1889 - "நிறை மற்றும் அளைவைகளுக்கான பொது மாநாட்டில்" மீட்டரின் நீளமானது பனிக்கட்டியின் உருகுநிலையில் 10 விழுக்காடு இரிடியம் கலந்த பிளாட்டினம் கலவையின் கோள் ஒன்றின் இரண்டு கோடுகளிற்கிடையேயான நீளத்துக்கு சமனாக அறிவிக்கப்பட்டது.
* 1928 - ஸ்கொட்லாந்து அறிவியலாளர் அலெக்சாண்டர் பிளெமிங் (படம்) பெனிசிலினைக் கண்டுபிடித்தார்.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 27 – செப்டம்பர் 26 – செப்டம்பர் 25
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
JuanHFXwaterfront.jpg
செப்டம்பர் 29:
* 1941 - உக்ரேனின் கீவ் நகரில் குறைந்தது 33,771 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர்.
* 1993 - மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
* 2003 - சூறாவளி ஜுவான் கனடாவின் ஹாலிபாக்ஸ் (படம்) துறைமுகத்தைத் தாக்கிப் பேரழிவை விளைவித்தது.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 28 – செப்டம்பர் 27 – செப்டம்பர் 26
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
புதிய விக்கி சின்னம் 3.png
செப்டம்பர் 30: பொட்சுவானா - விடுதலை நாள் (1966)
* 1840 - நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
* 1949 - சோவியத் ஒன்றியத்தின் தரைவழித் தடையை அடுத்து மேற்கு ஜெர்மனிக்கு 2.3 மில்லியன் தொன் உணவுப் பொருட்கள் வான்வெளி மூலமாக அனுப்பப்பட்டது.
* 1965 - இந்தோனேசியாவில் இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின் புரட்சியை ஜெனரல் சுகார்ட்டோ முறியடித்து சுமார் ஒரு மில்லியன் கம்யூனிஸ்டுகளைக் கொன்று குவித்தார்.
* 2003 - தமிழ் விக்கிப்பீடியா (படம்) ஆரம்பிக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 29 – செப்டம்பர் 28 – செப்டம்பர் 27