டிசம்பர்

டிசம்பர் 1: மத்திய ஆபிரிக்கக் குடியரசு - விடுதலை நாள் (1958), உலக எய்ட்ஸ் நாள் (எதிர்ப்பை குறிக்கும் சிகப்பு நாடா சின்னம் படத்தில்)

* 1958 - சிக்காகோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் கொல்லப்பட்டனர்.
* 1959 - பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
* 1960 - கொங்கோ அதிபர் பத்திரிசு லுமும்பா இராணுவத் தளபதி மொபுட்டுவினால் கைது செய்யப்பட்டார்.

அண்மைய நாட்கள்: நவம்பர் 30 – நவம்பர் 29 – நவம்பர் 28
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Enrico Fermi 1943-49.jpg

டிசம்பர் 2: தேசிய நாள் - ஐக்கிய அரபு அமீரகம் (1971), லாவோஸ் (1975)

* 1804 - பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் பேரரசனாக முடிசூடினான்.
* 1911 - தமிழறிஞர் பாண்டித்துரைத் தேவர் மறைவு.
* 1942 - மன்காட்டன் திட்டம்: என்றிக்கோ பெர்மி (படம்) தலைமையிலான குழுவினர் செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை ஆரம்பித்தனர்.
* 1995 - யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை இராணுவத்திடம் வீழ்ச்சி அடைந்தது.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 1 – நவம்பர் 30 – நவம்பர் 29
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
MuralitharanBust2004IMG.JPG

டிசம்பர் 3: அனைத்துலக ஊனமுற்றோர் நாள்

* 1973 - வியாழனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.
* 1984 - இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.
* 2007 - இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் (படம்) தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 2 – டிசம்பர் 1 – நவம்பர் 30
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Venustransit 2004-06-08 07-49.jpg

டிசம்பர் 4: இந்தியா - கடற்படையினர் நாள்

* 1639 - ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார் (படம்).
* 1976 - தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர் ந. பிச்சமூர்த்தி மறைவு.
* 2006 - பிரான்ஸ் தொண்டு நிறுவனத்தின் 17 தமிழ் ஊழியர்கள் இலங்கை, கிழக்கு மாகாணத்தின் மூதூரில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 3 – டிசம்பர் 2 – டிசம்பர் 1
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Connemara Public Library.jpg

டிசம்பர் 5: தாய்லாந்து - தேசிய நாள்

* 1896 - சென்னை கன்னிமாரா பொது நூலகம் (படம்) ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக் என்பவரால் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.
* 1995 - இலங்கை அரசு தமிழர் தாயகப் பிரதேசமான யாழ்ப்பாணத்தைத் தாம் முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்தது.
* ஆன்மிகவாதிகள் ஆறுமுக நாவலர் (1879), ஸ்ரீ அரவிந்தர் (1950), எழுத்தாளர் கல்கி (1954) மறைவு.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 4 – டிசம்பர் 3 – டிசம்பர் 2
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Babri rearview.jpg

டிசம்பர் 6: பின்லாந்து - விடுதலை நாள் (1917); ஸ்பெயின் - அரசியல் சாசன நாள்; புனித நிக்கலஸ் நாள்

* 1768 - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.
* 1917 - கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஹலிஃபாக்ஸ் துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வேறொரு கப்பலுடன் மோதி வெடித்ததில் 1900 பேர் கொல்லப்பட்டு நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது.
* 1992 - அயோத்தியாவில் 16ம் நூற்றாண்டு பழமைவாய்ந்த பாபர் மசூதி (படம்) இந்துத் தீவிரவாதிகளால் இடித்து அழிக்கப்பட்டது.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 5 – டிசம்பர் 4 – டிசம்பர் 3
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
USS West Virginia;014824.jpg

டிசம்பர் 7: இந்தியா - கொடி நாள்

* 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர் ஹவாயின் பேர்ள் துறைமுகத்தைத் (படம்) தாக்கினர்.
* 1988 - ஆர்மேனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 25,000 பேர் கொல்லப்பட்டு 400,000 பேர் வீடுகளை இழந்தனர்.
* 1995 - கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 6 – டிசம்பர் 5 – டிசம்பர் 4
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Lie In 15 -- John rehearses Give Peace A Chance.jpg

டிசம்பர் 8: ருமேனியா - அரசியல் சாசன நாள்

* 1941 - பெரும் இன அழிப்பு: போலந்தின் லோட்ச் என்ற இடத்தில் யூதர்களைக் கொல்லுவதற்கு நாட்சி ஜெர்மனியர் முதன் முதலாக நச்சு வாயுவைப் பயன்படுத்தினர்.
* 1980 - பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த ஜான் லெனன் (படம்) சுட்டுக் கொல்லப்பட்டார்.
* 1991 - சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென ரஷ்யா, பெலாரஸ், உக்ரேன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர்.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 7 – டிசம்பர் 6 – டிசம்பர் 5
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
EM smallpox, grown via tissue, isolate by centrifuge.jpg

டிசம்பர் 9: தான்சானியா - விடுதலை நாள் (1961)

* 1905 - பிரான்சில் அரசையும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
* 1979 - பெரியம்மை (படம்) நோய் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.
* 1986 - இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 8 – டிசம்பர் 7 – டிசம்பர் 6
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
AlfredNobel2.jpg

டிசம்பர் 10: மனித உரிமைகள் நாள்

* 1655 - யாழ்ப்பாண ஆளுநர் "அன்டோனியோ டி மெனேசா" மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் "முகத்துவாரம்" என்னும் இடத்தில் சிறைப்பிடிக்கப்பட்டார்.
* 1898 - ஸ்பெயின்-அமெரிக்கா போர் நிறுத்த உடன்பாடு பாரிசில் கைச்சாத்திடப்பட்டது. இதன்படி ஸ்பெயின் கியூபாவை அங்கீகரித்தது. குவாம், பிலிப்பீன்ஸ், புவேர்ட்டோ ரிக்கோ ஆகியவற்றை அமெரிக்காவுக்கு $20 மில்லியன் டாலர்களுக்கு விற்றது.
* 1901 - சுவீடன் வேதியியலாளர் அல்பிரட் நோபல் (படம்) நினைவாக முதலாவது நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 9 – டிசம்பர் 8 – டிசம்பர் 7
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
எம் எஸ் சுப்புலட்சுமி.jpg

டிசம்பர் 11: புர்கினா பாசோ - குடியரசு நாள் (1958)

* 1882 - மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறப்பு.
* 1946 - ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அமைக்கப்பட்டது.
* 1964 - நியூயோர்க் நகரில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் சே குவேரா உரையாற்றினார். இவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஐநா கட்டடத்தின் மீது இனந்தெரியாத ஒருவரினால் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
* 2004 - கருநாடக இசைக் கலைஞர் எம். எஸ். சுப்புலட்சுமி (படம்) மறைவு.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 10 – டிசம்பர் 11 – டிசம்பர் 12
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Viswanadhadas.jpg

டிசம்பர் 12: கென்யா - விடுதலை நாள் (1963)

* 1911 - இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.
* 1940 - இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் நாடக நடிகருமான தியாகி விஸ்வநாததாஸ் (படம்) மறைவு.
* 1948 - மலேசியாவில் நிலை கொண்டிருந்த ஸ்கொட்லாந்துப் படையைச் சேர்ந்த 14 பேர் பட்டாங் காலி என்ற இடத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.
* 1997 - களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்: இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 11 – டிசம்பர் 10 – டிசம்பர் 9
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
AbelTasman.jpg

டிசம்பர் 13: மால்டா - குடியரசு நாள் (1974)

* 1642 - டச்சு நாடுகாண் பயணி ஏபெல் டாஸ்மான் (படம்) நியூசிலாந்தை அடைந்தார். இவரே நியூசிலாந்தை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவார்.
* 1987 - எழுத்தாளர், இதழாசிரியர் நா. பார்த்தசாரதி இறப்பு.
* 2001 - இந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் தீவிரவாதிகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
* 2003 - முன்னாள் ஈராக் அரசுத் தலைவர் சதாம் உசேன் அவரது சொந்த ஊரான திக்ரித்துக்கு அருகே அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 12 – டிசம்பர் 11 – டிசம்பர் 10
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Balasingham anton.jpg

டிசம்பர் 14: இந்தியா - எரிபொருள் சேமிப்பு நாள்.

* 1962 - நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளி கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.
* 2004 - தென் பிரான்சில் வான் வீதி என அழைக்கப்படும் மில்லோ என்ற உலகின் மிகு உயர் பாலம் திறக்கப்பட்டது.
* 2006 - தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் (படம்) மறைவு.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 13 – டிசம்பர் 12 – டிசம்பர் 11
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Walt disney portrait.jpg

டிசம்பர் 15:

* 1941 - பெரும் இன அழிப்பு: உக்ரேனின் ஆர்க்கிவ் நகரில் 15,000 யூதர்கள் நாசிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
* 1966 - உலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி (படம்) இறப்பு.
* 1970 - சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகும். இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.
* 2006 - இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இனம் தெரியாதோரால் கடத்தப்பட்டார். இவர் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 14 – டிசம்பர் 13 – டிசம்பர் 12
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
1971 surrender.jpg

டிசம்பர் 16: பாஹ்ரேன் - தேசிய நாள் (1971), வங்காள தேசம் - வெற்றி நாள் (1971), கசக்ஸ்தான் - விடுதலை நாள் (1991)

* 1920 - சீனாவில் 8.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 180,000 பேர் கொல்லப்பட்டனர்.
* 1925 - கொழும்பு வானொலி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
* 1971 - வங்காளதேச விடுதலைப் போரில் (படம்) பாகிஸ்தான் இராணுவம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 15 – டிசம்பர் 14 – டிசம்பர் 13
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Wrightflyer crop.jpg

டிசம்பர் 17: பூட்டான் - தேசிய நாள் (1907)

* 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் டென்னசி, மிசிசிப்பி, கென்டக்கி ஆகிய மாநிலங்களில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
* 1903 - ரைட் சகோதரர்கள் வடக்கு கரொலைனாவில் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் (படம்) பறந்தனர்.
* 1961 - கோவாவை இந்தியா, போர்த்துக்கலிடம் இருந்து கைப்பற்றியது.
* 1967 - ஆஸ்திரேலியப் பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் விக்டோரியா மாநிலத்தில் கடலில் நீந்தும்போது காணாமல் போனார். இவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 16 – டிசம்பர் 15 – டிசம்பர் 14
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Chandrika Kumaratunga.jpg

டிசம்பர் 18: நைஜர் - குடியரசு தினம் (1958)

* 1987 - லரீ வோல் தனது பேர்ள் கணினி நிரலாக்க மொழியை வெளியிட்டார்.
* 1999 - கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க (படம்) மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் அவர் தனது வலது கண்ணை இழந்தார்.
* 2005 - சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதில் ஏற்பட்ட நெருக்கடியில் 42 பேர் உயிரிழந்தனர்.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 17 – டிசம்பர் 16 – டிசம்பர் 15
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
HaroldHoltPortrait1953.JPG

டிசம்பர் 19: கோவா - விடுதலை நாள்

* 1961 - டாமன் டையூ 450 ஆண்டுகள் போர்த்துக்கேயரின் ஆட்சியின் பின்னர் இந்தியாவின் ஆட்சியின் கீழ் வந்தது.
* 1967 - இரு நாட்களின் முன்னர் கடலில் நீந்தும்போது காணாமல் போன ஆஸ்திரேலியப் பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் (படம்) இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
* 1984 - ஹாங்காங்கின் ஆட்சி அதிகாரத்தை சீனாவுக்கு ஜூலை 1, 1997 இல் கையளிக்கும் ஒப்பந்தம் சீனாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டது.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 18 – டிசம்பர் 17 – டிசம்பர் 16
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
First four nuclear lit bulbs.jpeg

டிசம்பர் 20:

* 1942 - இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா ஜப்பானியர்களின் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.
* 1951 - அணுவாற்றலினாலான மின்சாரம் முதற்தடவையாக ஐடஹோவில் பிறப்பிக்கப்பட்டது. இது நான்கு 200-வாட் மின்குமிழ்களை எரிக்கப் பயன்பட்டது (படம்).
* 1987 - பிலிப்பீன்சில் பயணிகள் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 4,000 (அதிகாரபூர்வமாக 1,749) பேர் கொல்லப்பட்டனர்.
* 1999 - போர்த்துக்கல் மக்காவு நாட்டை சீனாவிடம் கையளித்தது.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 19 – டிசம்பர் 18 – டிசம்பர் 17
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Apollo8 Prime Crew.jpg

டிசம்பர் 21:

* 1968 - சந்திரனுக்கான மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. பூமியின் ஈர்ப்பைத் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் (படம்) இதுவாகும்.
* 1988 - ஸ்கொட்லாந்தில் லொக்கர்பி என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானத்தில் குண்டு வெடித்ததில் 270 பேர் கொல்லப்பட்டனர்.
* 1991 - கசக்ஸ்தானில் கூடிய பதினொரு சோவியத் குடியரசுகளின் தலைவர்கள் தனிநாடுகளின் பொதுநலவாய அமைப்பு உருவாகியவுடன் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி டிசம்பர் 26 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 20 – டிசம்பர் 19 – டிசம்பர் 18
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Brandenburger Tor DRI filtered.jpg

டிசம்பர் 22:

* 1851 - இந்தியாவின் முதலாவது சரக்கு தொடருந்து வண்டி உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.
* 1915 - மலேசியாவின் இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்று பெயரிடப்பட்ட விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
* 1989 - கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பேர்லினில் பிரித்த "பிராண்டன்பேர்க் கதவு" (படம்) 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 21 – டிசம்பர் 20 – டிசம்பர் 19
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Replica-of-first-transistor.jpg

டிசம்பர் 23:

* 1947 - முதலாவது டிரான்சிஸ்டர் (படம்) நியூ ஜேர்சியின் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
* 1954 - முதலாவது மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஐக்கிய அமெரிக்காவின் மசாசுசெட்சில் மேற்கொள்ளப்பட்டது.
* 1972 - நிக்கராகுவா நாட்டின் தலைநகர் மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000க்கு மேற்பட்டோர் இறந்தனர்.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 22 – டிசம்பர் 21 – டிசம்பர் 20
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Thanthai Periyar.jpg

டிசம்பர் 24: லிபியா - விடுதலை நாள் (1951)

* 1690 - யாழ்ப்பாணத்தில் நத்தார் இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
* 1973 - திராவிட எழுச்சிக்கு ஊக்குசக்தியாக இருந்த பெரியார் ஈ. வெ. ராமசாமி (படம்) மறைவு.
* 1987 - தமிழ்நாடு முதலமைச்சர், நடிகர் எம். ஜி. இராமச்சந்திரன் மறைவு.
* 2005 - இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு தேவாலயம் ஒன்றில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 23 – டிசம்பர் 22 – டிசம்பர் 21
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Velunachiyar.jpg

டிசம்பர் 25: கிறிஸ்துமஸ் பண்டிகை

* 1796 - ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி வேலு நாச்சியார் (படம்) இறப்பு.
* 1932 - சீனாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் 70,000 பேர் கொல்லப்பட்டனர்.
* 1941 - இரண்டாம் உலகப் போர்: ஹொங்கொங் மீதான ஜப்பானின் ஆக்கிரமிப்பு ஆரம்பமாயிற்று.
* 1991 - சோவியத் தலைவர் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பச்சோவ் விலகினார். அடுத்த நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 24 – டிசம்பர் 23 – டிசம்பர் 22
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
2004-tsunami.jpg

டிசம்பர் 26: குவான்சா - முதல் நாள் விழா

* 1792 - பாரிசில் பதினாறாம் லூயி மன்னனுக்கெதிரான கடைசி விசாரணைகள் ஆரம்பமாயின.
* 1898 - ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டது.
* 1991 - சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
* 2004 - இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை இலங்கை, இந்தியா, இந்தோனீசியா, தாய்லாந்து, மாலை தீவுகள், மலேசியா ஆகிய நாடுகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது (படத்தில் தாய்லாந்தில் ஆழிப்பேரலை). 3 லட்சம் மக்கள் வரை இறந்தனர்.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 25 – டிசம்பர் 24 – டிசம்பர் 23
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Hafizullah Amin.jpg

டிசம்பர் 27:

* 1864 - இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
* 1945 - உலக வங்கி 28 நாடுகளின் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டது.
* 1956 - தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
* 1979 - சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானின் அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர். அதிபர் ஹபிசுல்லா அமீன் (படம்) மற்றும் 300 பேர் சோவியத் படைகளினால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 26 – டிசம்பர் 25 – டிசம்பர் 24
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Fratelli Lumiere.jpg

டிசம்பர் 28:

* 1612 - நெப்டியூன் கிரகம் கலிலியோ கலிலியினால் கண்டுபிடிக்கப்பட்டது.
* 1885 - இந்தியாவின் வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் 72 பேர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை ஆரம்பிப்பதற்கு பம்பாயில் கூடினர்.
* 1895 - பிரான்சின் லூமியேர சகோதரர்கள் (படம்) பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குக் கட்டணத்துடன் திரையிட்டனர்.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 27 – டிசம்பர் 26 – டிசம்பர் 25
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Iqbal.jpg

டிசம்பர் 29:

* 1890 - தெற்கு டகோட்டாவில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 400 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.
* 1930 - அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் (படம்) முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.
* 1996 - குவாத்தமாலாவில் அந்நாட்டு அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 36-ஆண்டு கால உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 28 – டிசம்பர் 27 – டிசம்பர் 26
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
Jose rizal 01.jpg

டிசம்பர் 30: பிலிப்பீன்ஸ் - ரிசால் நாள்

* 1896 - பிலிப்பீன்சின் தேசியவாதி ஒசே ரிசால் (படம்) மணிலாவில் ஸ்பானிய ஆதிக்கவாதிகளால் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
* 1922 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
* 1943 - சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.
* 2006 - முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 29 – டிசம்பர் 28 – டிசம்பர் 27
தொகுப்பு


பார் – பேச்சு – தொகு – வரலாறு
31-January-2004-Taipei101-Complete.jpg

டிசம்பர் 31:

* 1879 - வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாக தொமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது.
* 1991 - சோவியத் ஒன்றியம் இந்நாளில் இருந்து அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டது.
* 1999 - 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது.
* 2004 - உலகின் மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 (படம்) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

அண்மைய நாட்கள்: டிசம்பர் 30 – டிசம்பர் 29 – டிசம்பர் 28
தொகுப்பு


Next Post Previous Post