இராணி வேலு நாச்சியார் Rani Velu Nachiyar

இராணி வேலு நாச்சியார் (03-01-1730 – 25-12-1796)


இராணி வேலு நாச்சியார் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.இவர் 1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து விஜயரகுநாத சேதுபதி – சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாக பிறந்தா . இவரை ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். மேலும் இவர் பல மொழிகள் கற்றார் ஆயுதப் பயிற்சி பெற்றார்.

இராணி வேலு நாச்சியார் 1746 இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத்தேவருக்கு மனைவியானார். 1772 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி சிவகங்கைப் படைகளை பெஞ்சர் முற்றுகையிட்டார். ராஜா முத்து வடுகநாதர் மற்றும் அவரது பல வீரர்களுடன் அந்த வீர போரில் இறந்து விட்டார். வேலுநாச்சியார் முத்து வடுக நாதரை அடைக்கம் செய்து விட்டு விருப்பாச்சி விரைந்தார்.

தண்டவராயன் பிள்ளை உடன் கைம்பெண் ராணி வேலுநாச்சியார் மற்றும் மகள் வெள்ளச்சிநாச்சியார் திண்டுக்கல்லுக்கு விருப்பாச்சி பாளையம் சென்றனர்.பின்னர் ராணி வேலுநாச்சியாரின் பாதுகாவலர்கள் வெள்ளைமருது மற்றும் சின்னமருதுஆகியோர்இணைந்து கொண்டனர்.இராணி வேலு நாச்சியார் மற்றும் அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார் திண்டுக்கல் அருகே விருப்பாச்சிபாளையத்தில் கோயில நாயக்கர் பாதுகாப்பில் கீழ் வசித்து வந்தனர்.

வேலுநாச்சியாரை எதிர்த்துப்போராடுவதால் விரக்தியடைந்த நவாப்வேலுநாச்சியார், அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார் மற்றும் மருதுசகோதரர்கள் சிவகங்கைக்குத்திரும்ப அனுமதிக்கப்பட்டனர் மற்றும் நவாபிற்கு கிஷ்தி செலுத்திவிட்டு நாட்டை ஆள்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். நிர்வாகத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஒரு உடன்படிக்கை படி ராணி வேலு நாச்சியார் சிவகங்கையை ஆட்சிபுரிவதற்கு சின்னமருதுவை நாட்டின் முதல்அமைச்சராக பணிபுரிவதற்கும் வெள்ளைமருது நாட்டின் தலைமைத்தளபதியாக பணிபுரிவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் கைம்பெண் ராணி வேலு நாச்சியார் தனது கணவனைத்தொடர்ந்து 1780 வரை சிவகங்கையை ஆட்சிபுரிந்தார். இவர் நாட்டை நிர்வகிப்பதற்காக மருதுசகோதரர்களுக்கு அதிகாரங்களை வழங்கினார். சில வருடங்களுக்குப்பிறகு ராணி வேலு நாச்சியார் இறந்தார், ஆனால் அவரது இறப்பு குறித்த சரியான தேதி தெரியவில்லை (அது சுமார் 1796ஆக இருக்கலாம்).




வேலுநாச்சியார்

1. இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள்? வேலுநாச்சியார்

2. வேலுநாச்சியார் கற்றிந்த மொழிகள் எவை? தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது

3. சிவகங்கையின் மன்னர்? முத்துவடுகநாதர்

4. வேலுநாச்சியார் யாரை மணந்து கொண்டார்? சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர்

5. எங்கு நடைபெற்ற பெயரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார்? காளையார் கோவில்

6. வேலுநாச்சியார் எந்த கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்? திண்டுக்கல்

7. வேலுநாச்சியாரின் அமைச்சர் யார்? தாண்டவராயர்

8. வேலுநாச்சியாரின் தளபதிகள் யார்? பெரிய மருது, சின்ன மருது

9. சிவகங்கையை இழந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது என்று வேலுநாச்சியார் கவலை கொண்டார்? எட்டு ஆண்டுகள்

10. ஐதர்அலியுடன் வேலுநாச்சியார் எந்த மொழியில் பேசினார்? உருது மொழி

11. ஐதர்அலியின் எத்தனை குதிரைப் படை வீரர்கள் வேலுநாச்சியாருக்கு உதவ மைசூரிலிருந்து உதவ வந்தனர்? 5000 குதிரைப் படை வீரர்கள்

12. ஆண்கள் படைப்பிரிவுக்கு தலைமை வகித்தவர் யார்? மருது சகோதரர்கள்

13. பெண்கள் படைப்பிரிவுக்குக் தலைமை வகித்தவர் யார்? குயிலி

14. எந்த நாள் சிவகங்கைக் கோட்டைக் கதவுகள் திறக்கும் என்று வேலுநாச்சியார் கூறினார்? விஜயதசமித் திருநாள்

15. வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்குமாறு யாரை ஆங்கிலேயர்கள் வற்புறுத்திக் கொன்றனர்? உடையாள் என்னும் பெண்ணை

16. உடையாளுடைய நடுகல்லுக்கு வேலுநாச்சியார் எதை காணிக்கையாக செலுத்தினார்? தமது தாலியை

17. யார் ஆயுதக் கிடங்கில் உடலில் தீ வைத்துக் கொண்டு குதித்தவர் யார்? குயிலி

18. வேலுநாச்சியாரின் காலம்? 1730 - 1796

19. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு? 1780

20. ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர்? வேலு நாச்சியார்

21. 'என் கணவர் கொல்லப்பட்ட ஊர் காளையார்கோவில், எனவே, தாம் முதலில் காளையார்கோவிலைக் கைப்பற்றுவோம்: பிறகு சிவகங்கையை மீட்போம்" என்றார்? வேலு நாச்சியார்

22. "குயிலி தம் உயிரைத் தந்து நம்நாட்டை மீட்டுக் கொடுத்திருக்கிறார். அவரது துணிவுக்கும் தியாகத்திற்கும் வீரத்திற்கும் தலைவணங்குகிறேன்" என்று உணர்ச்சிப் பெருக்கோடு கூறினார்? வேலுநாச்சியார்

23. விடுதலைப்போரில் ஆண்களுக்கு நிகராகச் செயல்பட்டு வெற்றி வாகை சூடிய பெண்? வேலுநாச்சியார்

24. வேலுநாச்சியார் ________ ஆகியவற்றையும் முறையாகக் கற்றுக் கொண்டார்? சிலம்பம், குதிரையேற்றம், வாட்போர், விற்பயிற்சி

25. வேலுநாச்சியாரின் வீரம், மருது சகோதரர்களின் ஆற்றல், ஐதர்அலியின் உதவி ஆகியவற்றோடு குயிலியின் தியாகமும் இணைந்ததால் சிவகங்கை மீட்கப்பட்டது

26. சிவகங்கைக் கோட்டைக் கதவுகள் எந்த திருநாளில் திறக்கப்படும்? விசயதசமி


1. ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது? (2022 Group 4)

A) கி.பி.1730.

B) கி.பி.1880

C) கி.பி.1865

D) கி.பி.1800

 

2. ஆங்கிலேயரை எதிர்த்து ஆயும் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி (2022 Group 8)

(அ) ராணி மங்கம்மாள்

(ஆ) அஞ்சலை அம்மாள்

(இ) வேலு நாச்சியார்

(ஈ) மூவலூர் இராமாமிர்தம்

 

3. வேலுநாச்சியாரின் அமைச்சர் __________. (2022 TNTET Paper -1)

(A) குயிலி

(B) பெரிய மருது

(C) முத்துவடுகநாதன்

(D) தாண்டவராயர்

 

4. ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர்: (2022 TNTET Paper -1)

A: வெண்ணிக் குயத்தியார்

B: வெள்ளி வீதியார்

C: வேலு நாச்சியார்

D: காக்கைப் பாடினியார்

 

5. ஆங்கிலேயரிடமிருந்து சிவகங்கை சீமை மீட்கப்பட்டதற்கு யாருடைய செயலுக்காக தலைவணங்கியதாக வேலு நாச்சியார் குறிப்பிடுகிறார்? (13-02-2023 FN TNTET-2)

(A) ஐதர் அலியின் உதவி

(B) மருது சகோதர்களின் படை பலம்

(C) குயிலியின் தியாகம்

(D) கணவர் முத்து வடுக நாதர் இறப்பு

 

6. வேலுநாச்சியாரின் காலம் 1730 – 1796. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு __________ ஆகும். (04-02-2023 FN TNTET -2)

(A) 1745 கி.பி.

(B) 1740 கி.பி.

(C) 1785 கி.பி.

(D) 1780 கி.பி..

 

7. வேலு நாச்சியார் __________ என்ற வீரமங்கைக்கு நடுகல் அமைத்து வணங்கினார். (14-10-2022 AN TNTET -1)

(A) ஜானகியம்மாள்

(B) குயிலி

(C) அஞ்சலையம்மாள்

(D) உமையாள்









வேலு நாச்சியார் (11வது வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்)
• இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களாக இன்று அறியப்படும் பகுதியைச் சேதுபதி மன்னர்கள் ஆட்சி செலுத்தினர்.
• வேலு நாச்சியார் இராமநாதபுரம் அரசரான செல்லமுத்து சேதுபதியின் மகள் ஆவார்.
• அவர் சிவகங்கை அரசரான முத்துவடுகர் பெரிய உடையாரை மணந்தார்.
• அவர்களுக்கு வெள்ளச்சி நாச்சியார் என்ற மகள் இருந்தார்.
• வேலு நாச்சியாரின் கணவர் நவாபின் படைகளால் கொல்லப்பட்டதும், அவர் தன் மகளுடன் தப்பித்து, திண்டுக்கல் அருகே விருப்பாச்சியில் ஹைதர் அலியின் பாதுகாப்பில் எட்டு ஆண்டு காலம் இருந்தார்.
• இக்காலகட்டத்தில் வேலு நாச்சியார் ஒரு படையைக் கட்டமைத்தார்.
• ஆங்கிலேயரைத் தாக்கும் நோக்கத்துடன் கோபால நாயக்கர், ஹைதர் அலி ஆகியோருடன் கூட்டணி அமைத்தார்.
• 1780இல் இவ்விருவரின் துணையோடு ஆங்கிலேயருடன் போரிட்டு வென்றார்.
• வேலு நாச்சியார் ஒரு பெண்கள் படையை உருவாக்கியிருந்தார்.
• அவர் ஆங்கிலேயரின் வெடிமருந்துக்கிடங்குகளைக் கண்டுபிடிப்பதற்குத் தன் உளவாளிகளைப் பயன்படுத்தினார்.
• நாச்சியாரின் படையில் இருந்த குயிலி தன் மீது நெருப்பு வைத்துக்கொண்டு, ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கில் நுழைந்து அதை அழித்தார்.
• நாச்சியாரின் படையிலிருந்த இன்னொரு உளவாளி அவரால் தத்தெடுக்கப்பட்ட உடையாள் ஆவார்.
• இவர் ஆங்கிலேயரின் ஓர் ஆயுதக்கிடங்கை வெடிக்கச் செய்வதற்காகத் தன்னையே அழித்துக்கொண்டார்.
• ஆற்காடு நவாப் வேலு நாச்சியாருடைய படை முன்னேறி வருவதைத் தடுக்கப் பல தடைகளை ஏற்படுத்தினார்.
• எனினும் நாச்சியார் அனைத்துத் தடைகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு சிவகங்கைக்குள் நுழைந்தார்.
• ஆற்காடு நவாப் தோற்கடிக்கப்பட்டு, சிறைவைக்கப்பட்டார்.
• சிவகங்கையை மீண்டும் கைப்பற்றிய நாச்சியார் மருது சகோதரர்களின் துணையுடன் இராணியாக முடிசூடினார்.
• சின்ன மருது நாச்சியாரின் ஆலோசகராகவும் பெரிய மருது படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டனர்.
• 1783இல் ஆங்கிலேயர் சிவகங்கைக்கு மீண்டும் படையெடுத்து வந்தனர்.
• இம்முறை மருது பாண்டியர் சில இராஜதந்திர நடவடிக்கைகளால் சிவகங்கையின் பாதுகாப்பை உறுதி செய்தனர்.
• பிற்காலத்தில் ஆங்கிலேயரின் சமரச உடன்பாட்டின்படி வேங்கண் பெரிய உடைய தேவர் சிவகங்கை அரசர் ஆனார்.
• 1790இல் இவருக்கு மணம் முடித்துவைக்கப்பட்ட வெள்ளச்சி நாச்சியார் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்தார்.
• வேலு நாச்சியார் நோயுற்று 1796இல் இறந்தார்.



Previous Post
No Comment
Add Comment
comment url